- கட் ஆப் என்பது ஒரு தேர்வர் பணியை பெற அத்தேர்வில் எடுக்க வேண்டிய மதிப்பெண்.. சரி இத யாரு முடிவு பண்றது ? நானா நீங்களா ? இல்ல முகநூல் மற்றும் பல பயற்சி நிலையங்கள் முடிவு பண்ணுவதா ? கண்டிப்பாக இல்லை.
- கட் ஆப் என்பது இருக்கிற காலிப்பணியிடங்களில் உங்கள் இனசுழறச்சியின் அடிப்படையில் தேர்வாணையம் நிர்ணயிப்பது. அது மொத்த காலிப்பணியிடங்கள், எழுதிய மொத்த தேர்வர்கள் , கேள்வித்தாள் தரம் கொண்டு குறையலாம் கூடலாம். உதாரணமா காலிப்பணியிடம் 100 தான் மொத்தமேன்னு வச்சுகோங்க அப்ப தமிழ்நாடு அரசு கொடுக்கும் ஒதுக்கீடு படி.
- பொதுப்பிரிவினர்க்கு – 31
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு – 26.5
- முஸ்லிம்கள் – 3.5
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு – 20
- தாழ்த்தப்பட்டோர் – 15
- அருந்ததியியனர்- 3
- பழங்குடி – 1
- எழுதுனது மொத்தம் 50000 பேர்னு வைங்க உதாரணமா நீங்க மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவுல வரிங்க அப்டின்னா எழுதன 50000 பேர்ல நீங்க முதல் 100 குள்ளேயும் வரணும் உங்க பிரிவுகுள்ள இருக்கிற 20 சீட் க்குள்லையும் வரணும். அந்த 20 சீட்ல கடைசி இருபதாவது நபர் எடுக்கும் மதிப்பெண் தான் அந்த கட் ஆப்.
- இது போக தமிழ் வழி இட ஒதுக்கீடு லாம் இருக்கு அத எழுதனா இன்னும் கட்டுரை பெருசா போயிட்டே இருக்கும்.
- ஆக எழுதுன 17 லட்சம் பேர்ல இருக்கிற 9351 பணியிடங்கள் இதே மாறி தான் கட் ஆப் நிர்ணயம் இருக்கும். என்னை பொறுத்த வரையில் இந்தவருட குருப் நான்கு கட் ஆப் என்பது குறைவாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நன்றாக படித்த ஒரு நபர் பொதுத் தமிழில் 90-95 குள்ள தான் எடுக்க வாய்ப்பு உள்ளது. பொது அறிவில் 60 வரைக்கும் தான் நல்லா படிச்ச நபர் எடுக்க முடியும்.
- ஆக 155+ எடுத்தாவே நீங்கள் வெற்றி கதவுக்கு பக்கத்துல இருக்கீங்க ன்னு அர்த்தம்..
TNPSC GROUP 2/2A EXAM ANALYSIS:2020
S.No
|
Subject
|
No.of Questions
|
Expected Questions
|
1
|
Science
|
14
|
15 – 20
|
2
|
Current Affairs
|
13
|
15 – 20
|
3
|
Geography
|
12
|
10 – 15
|
4
|
History
|
11
|
10 – 15
|
5
|
Indian Constitution
|
16
|
15 – 20
|
6
|
Indian Economy
|
17
|
15 – 20
|
7
|
Indian National Movement
|
11
|
10 – 15
|
8
|
Tamilnadu History
|
47
|
40 – 50
|
9
|
Tamilnadu Administration
|
38
|
30 – 35
|
10
|
Mental Ability
|
25
|
25
|
2. அடுத்து குரூப் 2 மெயின் தேர்வும் 2A தேர்வும் ஒன்னு ன்னு சொல்றாங்களே உண்மையா ?
- ரெண்டும் சேர்த்து வச்சா ரொம்ப நல்லது ஆனா அத முடிவு பண்ற இடத்துல நானோ நீங்களோ இல்லை. ஆணையம் என்ன முடிவு பண்ணுதுன்னு ஒருத்தருக்குமே தெரியாது. இதே கேள்விய நீங்க சேர்மன் ட்ட இப்ப கேட்டா கூட அவரால உறுதியா சொல்ல முடியாது.. ஏன்னா உறுப்பினர்கள் பல கட்ட meeting க்கு பிறகுதான் இறுதி முடிவு செய்வாங்க.
- ரெண்டும் சேர்த்து வச்சா தான் என்ன ? டெஸ்ட் match ஆ இருந்தாலும் One Day யா இருந்தாலும் நீங்க விளையாடி ஆகியே தீரனும்.. என்ன மேட்ச் ன்னு தெரியலையே ன்னு இப்பவே தயார் ஆகாம குழம்பிட்டு இருந்தா வெற்றி கிட்டாது. ஆக விளையாட்டு / விளையாட்டு விதிகள் எல்லாம் ஒன்னு தான். இப்பவே practice பண்ணுங்க.
3. அப்டியே இருந்தாலும் மெயின்ஸ் இருக்குமா?
- மெயின்ஸ் இருப்பதாக தான் நான் கேள்வி பட்டவரையில் ரெண்டுக்குமே தயார் ஆகுங்க.
- ஆனா இப்போதைக்கு கொள்குறி க்கு முக்கியத்துவம் கொடுத்து படிச்சிட்டே இருங்க எழுத்து தேர்வுலாம் அப்புறம் பாத்துக்கலாம்..அதுக்கு டைம் இருக்கு.
4. சமச்சீர் புத்தகம் மாறுது ன்னு சொல்றாங்க.. மாறனா என்ன செய்றது ?
- ஒன்னு நியாபகம் வச்சுகோங்க... நம்ம பாடத்திட்டம் பொறுத்த வரைக்கும் புக் கவர் / வண்ணங்கள் தான் மாறுமே தவிர உள்ள உள்ள விஷயம் ? மாறாது. மின்கலத்தை கண்டுபிடிச்சவர் வோல்ட்டா தான் அப்பாவும் இப்பவும்.
- புது புக்ல மட்டும் சிவ ஆனந்த கிருஷ்ணன் ன்னு மாத்த போறாங்களா ? அதே மின்னியல் அதே அமிலங்கள் அதே ஜிம்னோஸ்பெர்ம் தான் மொழிப்பாடம் வேணா மாறலாம் இருந்தாலும் டி என் பி எஸ் சி கொடுத்த பாடத்திட்டம் எதுவோ அதத்தான் நீங்க படிக்கணும்.
5. அப்டின்ன்னா பழைய புக் படிக்கவா புதுச படிக்கணுமா ?
- ரெண்டும் படிச்சா என்ன தப்பு? புது புக்ல கொஞ்சம் புதிய விஷயங்கள் கொடுத்து இருக்கலாம்.. ஆனா 80% விவரங்கள் அதேதான் இருக்கும். கூடுமான வரைக்கும் எதிர்வரும் குருப் 2 ஆகஸ்டுல நடைபெற இருப்பதால் புதிய புக்கோட முக்கியத்துவம் குறைவகாதான் இருக்கும்.
6. ஏற்கனவே கோச்சிங் போனேன் .திரும்பவும் போனுமா ?
- பணம் இருக்கா ? சூட்சமம் தெரிஞ்சா வீட்லயே படிங்க... இல்லன்னா போகலாம்... நல்ல பயிற்சி நிலையத்தில் சேரவும்... ஓரளவுக்கு டெஸ்ட் க்கு முக்கியத்துவம் கொடுக்குற நிலையங்களில் சேரலாம்....
7. போன குரூப் 2A ரிசல்ட் எப்ப வரும் ?
8. வர கூடிய குரூப் 2க்கு எப்ப இருந்து Current Affairs படிச்சா நல்லது ?
டிஎன்பிஎஸ்சி தேர்வில் (குரூப்-1, குரூப்-2, குரூப்-4) அன்றாட பொது நிகழ்வுகளில் இருந்து அதிகாமாக கேள்விகள் கேட்பது வழக்கம் . மேலும், குரூப் II-ஏ தேர்வின் தரத்தையும் தற்போது அதிகப்படுத்தியுள்ளதால் பொது நிகழ்வுகளைப் பற்றிய நுண்ணறிவு மிகவும் அவசியமாகிறது.TNPSC தேர்வுகளுக்கு முக்கிய நடப்பு நிகழ்வு தலைப்புகளை சிலவற்றை உங்களுக்கு தருகிறோம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் (குரூப்-1, குரூப்-2, குரூப்-4) அன்றாட பொது நிகழ்வுகளில் இருந்து அதிகாமாக கேள்விகள் கேட்பது வழக்கம் . மேலும், குரூப் II-ஏ தேர்வின் தரத்தையும் தற்போது அதிகப்படுத்தியுள்ளதால் பொது நிகழ்வுகளைப் பற்றிய நுண்ணறிவு மிகவும் அவசியமாகிறது.TNPSC தேர்வுகளுக்கு முக்கிய நடப்பு நிகழ்வு தலைப்புகளை சிலவற்றை உங்களுக்கு தருகிறோம்