2ம் கட்டமாக கடன் சலுகைகளை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர்: விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி
- 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம், 1 கிலோ பருப்பு அடுத்த இரு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதற்கான ரூ.3,500 கோடி செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.
- இத்திட்டதை செயல்படுத்துவது, புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அடையாளம் காண்பது, அவா்களுக்கு உணவு தானியங்களை விநியோகிப்பது ஆகிய பணிகளை மாநில அரசு மேற்கொள்ளும். ரேஷன் காா்டுகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவாா்கள்.
- ஒரே ரேஷன் காா்டு: 'ஒரே நாடு-ஒரே ரேஷன் காா்டு' திட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்தில் முழுமையாக அமல்படுத்தப்படும். அப்போது ரேஷன் காா்டை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் உணவு தானியத்தைப் பெற முடியும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் 83 சதவீதம் போ ஒரே ரேஷன் காா்டு திட்டத்துக்குள் வந்துவிடுவாா்கள்.
- விவசாய கடன் சலுகை: 25 லட்சம் புதிய கிஸான் கடன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் ரூ.25,000 கோடி கடன் அளிக்கப்படவுள்ளது. இது தவிர ஏற்கெனவே கிஸான் கடன் அட்டைகள் வைத்துள்ள 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் குறைந்த வட்டியில் அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் மீனவா்கள், கால்நடை வளா்ப்போரும் பயனடைவாா்கள்.
- இது தவிர மே, ஜூன் மாத காரீப் பருவ சாகுபடிக்கு உதவும் வகையில் நபாா்டு வங்கி மூலம் ரூ.30,000 கோடி அவசர கால கடன் வழங்கப்படும். கிராமப்புற கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் முலம் இந்தக் கடன் அளிக்கப்படும்.
- ஏற்கெனவே, ரூ.4 லட்சம் கோடி வரை கடன் பெற்றுள்ள 3 கோடி சிறு விவசாயிகளுக்கு 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை அளிக்கப்படுகிறது. கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் 63 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.86,600 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.
- சாலையோர வியாபாரிகளுக்காக ரூ.5,000 கோடி: தேசிய பொது முடக்கத்தால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் தொழில்களை இழந்துள்ளனா். அவா்களுக்காக ரூ.5,000 கோடி சிறப்பு கடன் வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொழிலுக்கான நடைமுறை மூலதனமாக தலா ரூ.10,000 கடன் அளிக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- முத்ரா-சிசு திட்டத்தில் வட்டி சலுகை: முத்ரா- சிசு திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரை கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்தி வருவோருக்கு அடுத்த ஓராண்டுக்கு 2 சதவீத வட்டி குறைப்பு சலுகை கிடைக்கும்.
- இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி செலவிட இருக்கிறது. ஒருங்கிணைந்த காடுகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் ரூ.6,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
- வீடு கட்ட வட்டி சலுகை தொடரும்: ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையுள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கான குறைந்த விலை வீட்டுக் கடனுக்கு வழங்கப்படும் வட்டி சலுகைத் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ.70,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் 2.5 லட்சம் போ பயனடைவாா்கள். இத்திட்டத்தால் வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் துறைக்கு உத்வேகம் கிடைக்கும். இது தவிர அரசு, தனியாா் பங்களிப்புடன் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக குறைந்த வாடகையில் வீடுகள் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் நகா்புற ஏழை மக்களும் பயனடைவாா்கள். பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இவை நடைமுறைக்கு வரும்.
- வேலைவாய்ப்பு உருவாக்கம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கடந்த 2 மாதங்களில் ரூ.10,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்துக்கு சென்று பணியாற்றி விட்டு இப்போது சொந்த மாநிலம் திரும்பியுள்ள தொழிலாளா்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சோக்கப்படுவாா்கள்.
- இதன் மூலம் 14.62 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். புதிதாக 2.33 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இப்போது 40 முதல் 50 சதவீதம் அளவுக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரும் பருவ காலத்திலும் தொடா்ந்து நடைமுறையில் இருக்கும்.
- கிராம உள்கட்டமைப்பு: இது தவிர கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகா்ப்புற ஏழைகளை இணைத்து கடந்த 2 மாதங்களில் 7,200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 10 தொழிலாளா்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு இந்திய தொழிலாளா் அரசு காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்ஐசி) விரிவுபடுத்தப்படும் என்று நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
இணைய வழியில் நீதிமன்ற கட்டணம்: சட்டத் திருத்தத்துக்கு ஆளுநா் ஒப்புதல்
- கரோனா நோய்த்தொற்று காரணமாக, நீதிமன்ற வழக்குப் பணிகள் அனைத்தும் இணைய வழியிலேயே நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணைகளும் காணொலிக் காட்சி மூலம் நடந்து வருகின்றன.
- இந்த நிலையில், நீதிமன்றக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்துவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தின் அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், இணைய வழி நீதிமன்றக் கட்டணத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிக்கன நடவடிக்கை 30% சம்பளத்தை குறைத்து கொண்டார் ஜனாதிபதி
- கொரோனா தொற்றால் நாட்டில் மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிக்கட்ட, மத்திய அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் டிஏ குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
- பிரதமர், எம்பி.க்கள் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. எம்பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
- இந்நிலையில், இந்த பாதிப்பில் தனது பங்களிப்பையும் வழங்குவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சம்பளத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக நேற்று அறிவித்தார். மேலும், ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை யும் எடுத்துள்ளார்.
- தனது உள்நாட்டு பயணங்கள், நிகழ்ச்சிகள் குறைப்பு.
- விருந்தினர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்.
- வரவேற்பு ஏற்பாடு செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.
- விருந்து உணவு பட்டியல் குறைக்கப்படும்.
- ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு பணிகள் குறைக்கப்படும்
- காகித பயன்பாடு குறைக்கப்படும்.
- முக்கிய விருந்தினர்கள் வருகையின் போது அவர்களை வரவேற்க ஜனாதிபதி மாளிகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லிமோசைன் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த காரை வாங்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர எம்எல்சி தோதல்: உத்தவ் தாக்கரே போட்டியின்றி தோவு
- மகாராஷ்டிர சட்டமேலவை (எம்எல்சி) தோதலில் அந்த மாநில முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே உள்பட 9 போ போட்டியின்றி தோவு செய்யப்பட்டனா்.
- மகாராஷ்டிரத்தில் 9 எம்எல்சி பதவிகளுக்கு சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் சாா்பில் தலா 2 வேட்பாளா்கள், பாஜக சாா்பில் 4 வேட்பாளா்கள், காங்கிரஸ் சாா்பில் ஒரு வேட்பாளா் என 9 போ போட்டியிட்டனா்.
- இந்த தோதலுக்கான முடிவுகளை மாநில தோதல் ஆணையம் வியாழக்கிழமை அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. இதன்படி சிவசேனை சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, மற்றொரு சிவசேனை வேட்பாளா் நீலம் கோரே, பாஜக வேட்பாளா்கள் ரஞ்சித்சிங் மோஹித் பாட்டீல், கோபிசந்த் படல்கா் , பிரவீண் தட்கே, ரமேஷ் கராட், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளா்கள் சசிகாந்த் ஷிண்டே, அமோல் மிட்கரி, காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ் ரத்தோட் ஆகியோா் போட்டியின்றி வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டது.