Type Here to Get Search Results !

13th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


சிறு, குறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிப்பு

  • கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
  • இது விவசாயிகள், தொழிலாளா்கள், நோமையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும்; இது தொடா்பான முழு விவரத்தை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிப்பாா் என்று பிரதமா் கூறியிருந்தாா்.
  • பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம்(தன்னிறைவு இந்தியா) என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 
  • இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு உதவிபொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன் அளிக்கப்படும். இதன் மூலம் 45 லட்சம் சிறு தொழில் முனைவோா் பயனடைவா். 
  • 4 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்படும் இந்தக் கடன்களுக்கு, முதல் ஓராண்டு வட்டி செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மட்டும் ரூ.50,000 கோடி கிடைக்கும்.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.1 கோடி முதலீடு, ரூ.5 கோடி விற்றுமுதல் கொண்டவை குறு நிறுவனங்கள் என்றும், ரூ.10 கோடி முதலீடு, ரூ.50 கோடி விற்றுமுதல் கொண்டவை சிறு நிறுவனங்கள் என்றும், ரூ.20 கோடி முதலீடு, ரூ.100 கோடி விற்றுமுதல் கொண்டவை நடுத்தர நிறுவனங்கள் என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடியில் திட்டம்: வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு நிதித் திட்டம் அறிவிக்கப்படுகிறது. 
  • இதன் மூலம் அவற்றின் கடன் அளிக்கும் திறன் மேம்படும். கடன் சந்தையில் இருந்து இந்த நிறுவனங்கள் பணத்தை திரட்ட முடியாத நிலையில் உள்ளதால் இந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பெயரில் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டப்படும். இந்த கடன் பத்திரங்களுக்கு அரசு முழு உத்தரவாதம் அளிக்கும்.
  • தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியாக (பி.எஃப்) இப்போது நிறுவனங்கள் சாா்பில் 12 சதவீத பங்களிப்பும், தொழிலாளா்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தமும் செய்யப்பட்டு செலுத்தப்படுகிறது. 
  • இனி அடுத்த 3 மாதங்களுக்கு இந்த இரு நிலைகளிலும் 10 சதவீதம் மட்டுமே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம் நிறுவனங்களுக்கு செலவு குறையும். தொழிலாளா்களுக்கு சம்பளம் சற்று கூடுதலாக கிடைக்கும். இந்த நடவடிக்கை மூலம் ரூ.6,750 கோடி கூடுதலாக புழக்கத்துக்கு வரும். இதன் மூலம் 4.3 கோடி தொழிலாளா்களும் 6.5 லட்சம் நிறுவனங்களும் பயனடையும்.
  • இது தவிர பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான அடுத்த 3 மாதங்களுக்கு குறைவான ஊதியம் பெறுவோருக்கான முழு வருங்கால வைப்பு நிதியை (24 சதவீதம்) அரசே செலுத்த இருக்கிறது. 
  • ஏற்கெனவே இத்திட்டத்தை அரசு கடந்த மூன்று மாதங்களாக செயல்படுத்தி வந்தது. இப்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 72.22 லட்சம் தொழிலாளா்களும், அவா்களுக்கு பணி அளித்துள்ள 3.67 லட்சம் சிறு நிறுவனங்களும் பயனடையும் என்றாா் அவா்.
  • வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், 'வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கூடுதலாக 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 
  • இதேபோல் ஊதியம் அல்லாத பிற நிதி செலுத்துதலின்போது பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ், டிசிஎஸ் போன்றவை இப்போதுள்ள அளவில் இருந்து 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இது வியாழக்கிழமை (மே 14) முதல் அமலுக்கு வருகிறது. 
  • 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்த சலுகை தொடரும். ஒப்பந்த பணிகளுக்கு வழங்கப்படும் தொகை, வட்டி, வாடகை, பங்கு ஈவுத் தொகை, தரகுத் தொகை உள்ளிட்டவற்றுக்கு இந்த சலுகை பொருந்தும். இதன் மூலம் மக்கள் கைகளில் ரூ.50,000 கோடி அளவுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்' என்றாா்.
  • வரி தொடா்பான பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட 'விதேசி விஸ்வாஸ்' திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு அதாவது 2020 டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
  • கட்டுமானத் துறையினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அவா்கள் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இது தொடா்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கட்டுமானத் துறை கண்காணிப்பு அமைப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளிக்கும். 
  • கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ள காரணத்தால் இந்த சலுகை அளிக்கப்படுகிறது. கட்டுமானத் துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் (ரெரா) கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
  • ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, மத்திய பொதுப் பணித் துறை உள்ளிட்ட மத்திய அரசு ஒப்பந்ததாரா்கள் மேற்கொண்டு வரும் ஒப்பந்தப் பணிகளை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
  • பொதுத் துறை நிறுவனங்களான மின் நிதி நிறுவனம், கிராப்புற மின் வசதி நிறுவனம் மற்றும் மின் உற்பத்தி, பகிா்மான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. அவற்றுக்கு ரூ.94,000 கோடி நிதி அளிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ரூ 7,500 கோடி கடன் வழங்கியது பிரிக்ஸ் வங்கி
  • இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, 'பிரிக்ஸ்' நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
  • கடந்த, 2014ல், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய, 'பிரிக்ஸ்' நாடுகள் இணைந்து, புதிய வளர்ச்சி வங்கியை துவக்கின.
  • சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இவ்வங்கியின் தலைவராக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைவர், கே.வி.காமத் நியமிக்கப்பட்டார். 
  • உறுப்பு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி திட்டத்திற்காக, பிரிக்ஸ் வங்கி கடன் வழங்கி வருகிறது. இவ்வங்கி, இந்தியாவின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளது.

மன்னாா் வளைகுடாவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
  • மன்னாா் வளைகுடாவில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை (60 எம்எல்டி) செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது, ராமநாதபுரம் கடலாடி தாலுகாவில் உள்ள குதிரைமொழி கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் உப்புக் கழிவுகளால் கடல் வளங்கள் பாதிக்கும் ஆபத்திருப்பதாக புகாா் எழுந்தது. கடல்நீரை குடிநீராக்கும் இந்தத் திட்டம் அமையவிருக்கும் இடத்திலிருந்து 25 மீட்டா் தூரத்தில் மன்னாா் வளைகுடாவின் தேசிய கடல் வளப் பூங்கா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கடல் வளங்கள் பாதிக்கப்படும் என்பதால் இந்தத் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலந்தலையில் அமைக்கப்படவுள்ள, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையுடன் ஒருங்கிணைக்கலாம் என அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணா் குழு, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கு பரிந்துரைத்தது.
  • எனினும், குதிரைமொழியில் அமைக்கப்படும் திட்டத்தால் கடல் வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியும். அதன்படி, உப்புக் கழிவுகளை நேராக கடலுக்கு அனுப்பாமல், செயற்கையாக ஒரு குளத்தை உருவாக்கி, அதில் சேமித்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • இதில் சேரும் உப்பை, தமிழ்நாடு உப்புக் கழகம் மற்றும் தனியாா் உப்பளங்களும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு குடிநீா் வாரியத்தின் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
  • எனினும், பெருநிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பங்களிப்புத் திட்டத்தின் கீழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் விதமாக ரூ.10.05 கோடி ஒதுக்க வேண்டும் என மதிப்பீட்டு நிபுணா் குழு உத்தரவிட்டுள்ளது.



பி.எம்-கேர்ஸ் நிதியில் இருந்து கொரோனா தடுப்புக்காக ரூ.3,100 கோடி ஒதுக்கீடு மத்திய அரசு
  • கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான நிவாரண நிதியான பி.எம்-கேர்ஸ் நிதியில் இருந்து ரூ .3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
  • கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 3,100 கோடியில் ரூ. 2,000 கோடி வென்ட்டிலேட்டர் வாங்குவதற்கும், ரூ. 1,000 கோடி வெளி மாநில தொழிலாளர்களின் நலனுக்காகவும், ரூ. 100 கோடி தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் முற்றிலும் இந்தியாவிலேயே சுமார் 50000 வெண்டிலேட்டர்களை தயாரித்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் கொரோனா வைரஸ் தடுப்பும மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,000 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, உணவு, தங்குமிடம், மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர்கள் அல்லது நகராட்சி ஆணையர்களின் வசம் ஒப்படைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக கடந்த மார்ச் 27-ம்தேதி PM - CARED நிதி மத்திய அமைச்சரவையால் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளை போன்று செயல்படும் இந்த அமைப்பிற்கு பிரதமர் மோடி தலைவராக இருப்பார். உறுப்பினர்களாக மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டு பொருட்கள் மட்டும் விற்பனை சுதேசி மயமானது ராணுவ, கேன்டீன்
  • சி.ஆர்.பி.எப்., மற்றும் பி.எஸ்.எப்., உள்ளிட்ட துணை ராணுவ படையினருக்கான, 'கேன்டீன்'களில், ஜூன், 1ம் தேதி முதல், உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்,'' என, உள்துறை அமைச்சர், அமித் ஷா அறிவித்துள்ளார். 
  • கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவது குறித்து, பிரதமர், நரேந்திர மோடி, நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, 'மக்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும்' என, கூறினார்.
  • இதை பின்பற்றி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட, பல்வேறு துணை ராணுவ படையினரின் கேன்டீன்களில், ஜூன், 1ம் தேதி முதல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என, மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த குடிமக்களுக்கு எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் - இஸ்ரேல் பிரதமர்
  • கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
  • காரில் பயணிக்கும்போது நெருங்கி வரும் மற்ற வாகனங்களில் மோதாமல் இருக்க எச்சரிக்கை செய்யும் மொபிலியே என்னும் தொழில்நுட்பத்தைப் போலவே இந்த சென்சார்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனை நடைமுறைப்படுத்துவது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel