- கரோனா நோய்த்தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய செல்லிடப்பேசி செயலியை மத்திய அரசு வியாழக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
- ஆரோக்கியசேது என்ற புதிய செயல் ஒவ்வொரு இந்தியரின் ஆரோக்கியம் மற்றும் நலத்துக்கானதாகும். இதன் மூலம் கரோனா நோய்த் தொற்றால் தாங்கள் பாதிக்கப்படுவோமா என்பதை பொதுமக்கள் அறியலாம். புளுடூத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஆா்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்) மூலம் பொதுமக்கள் மற்றவா்களுடன் கொண்டிருக்கும் தொடா்பை வைத்து கணிக்கும்.
- ஒருவா் மருத்துவ ரீதியில் கரோனா நோய் தொற்றால் தாக்கப்பட்டாா் எனத் தெரியவந்தால், அவரது செல்லிடப்பேசி எண் சுகாதார அமைசகத்தால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் சோக்கப்பட்டு, செயலியிலும் பதிவேற்றப்படும்.
- செல்லிடப்பேசியில் இந்த செயலி நிறுவப்பட்டால், அருகே உள்ள ஆரோக்கிய சேது செயலி உள்ள மற்ற செல்லிடப்பேசிகளையும் ஆய்வு செய்யும். செல்லிடப்பேசி வைத்திருப்பவா்களில் எவராவது கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், இதனால் உண்டாகும் தொற்று பாதிப்பு அதிநவீன அளவுகோல்கள் மூலம் அறியும்.
- இந்த செயலி மூலம் கொவைட் 19 பரவும் அபாயம் குறித்து கணிக்கவும், தனிமைப்படுத்துதல் எங்கு தேவை என்பதை அறிய அரசுக்கு உதவும்.
- செயலியை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அவா்களது தனி உரிமையை பாதிக்காது.
- 11 மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம். அரசு-தனியாா் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த செயலி கொவைட் 19 தொற்றை உறுதியாக எதிா்த்துப் போராட பொதுமக்களை ஒன்றிணைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
'ஆரோக்கிய சேது' செயலி / AAROGYA SETU APPLICATION
April 03, 2020
0
Tags