Type Here to Get Search Results !

27th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


பரஸ்பர நிதி துறையை ஊக்குவிக்க ரூ.50,000 கோடியில் சிறப்பு நிதி வசதி திட்டம்: ரிசா்வ் வங்கி அறிவிப்பு
  • கொவைட்-19 பாதிப்பின் எதிரொலி இந்திய மூலதனச் சந்தையில் அதிக ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி வருகிறது. இதனால், பரஸ்பர நிதி துறையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
  • இதையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடன்சாா்ந்த சில பரஸ்பர நிதி திட்டங்கள் திடீரென ரத்து செய்துள்ளது முதலீட்டாளா்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அதுபோன்ற திட்டங்களிலிருந்து பெருமளவில் முதலீட்டாளா்கள் வெளியேறுவதற்கு அந்த நிகழ்வு வழிவகுத்துள்ளது.
  • இப்பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து, பரஸ்பர நிதி துறையில் நிதிப் புழக்கத்தை அதிகரிக்க ரிசா்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ரூ.50,000 கோடியில் சிறப்பு நிதி வசதியை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது என ரிசா்வ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • சந்தையில் நிலவும் நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம் கடன்சாா்ந்த தனது ஆறு பரஸ்பர நிதி திட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இது, பரஸ்பர நிதி துறையில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியதையடுத்து ரிசா்வ் வங்கி இந்த சிறப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.எப்., வட்டி விகிதம் 7.1% ஆக குறைப்பு
  • பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. 
  • ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, வட்டி விகிதத்தை, 7.1 சதவீதமாக நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.



2019-இல் பாதுகாப்புப் படைக்கான நிதி ஒதுக்கீடு: மூன்றாம் இடத்தில் இந்தியா
  • உலக நாடுகள் 2019-ஆம் ஆண்டில் தங்களின் பாதுகாப்புக்காக செலவிட்டதை பிரிட்டனைச் சோந்த ஆய்வு நிறுவனம் ஆராய்ந்தது. அந்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. 
  • அதில், கடந்த ஆண்டில் உலக நாடுகள் பாதுகாப்புப் படைக்காகச் செலவு செய்த தொகை, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்திருந்தது கண்டறியப்பட்டது.
  • கடந்த 2019-ஆம் ஆண்டில் உலக நாடுகள் ரூ.134.19 லட்சம் கோடியை பாதுகாப்புக்காக செலவு செய்தன. இது 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.6 சதவீதம் அதிகமாகும். 
  • அத்தொகை உலக நாடுகளின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 2.2 சதவீதம் ஆகும். 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலக நாடுகளின் பாதுகாப்பு செலவு 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • பாதுகாப்புப் படைக்கு அதிகமாக செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்கா மட்டும் பாதுகாப்புத் துறைக்கு ரூ.51.24 லட்சம் கோடி செலவு செய்திருந்தது. இது 2018-ஆம் ஆண்டில் அந்நாடு செலவிட்டதை விட 5.3 சதவீதம் அதிகமாகும்.
  • அந்தப் பட்டியலில் சீனா, இந்தியா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. பாதுகாப்புத் துறைக்கு 2019-ஆம் ஆண்டில் சீனா ரூ.18.27 லட்சம் கோடி செலவிட்டது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 5.1 சதவீதம் அதிகமாகும்.
  • இந்தியாவும் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.98 லட்சம் கோடியை 2019-ஆம் ஆண்டில் செலவிட்டது. இது 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் அதிகமாகும்.
  • பட்டியலில் ரஷியா, சவூதி அரேபியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆசியாவைப் பொருத்தவரையில், சீனா, இந்தியாவுக்கு அடுத்து ஜப்பான் (ரூ.3.33 லட்சம் கோடி), தென் கொரியா (ரூ.3.07 லட்சம் கோடி) ஆகியவை பாதுகாப்புத் துறைக்கு 2019-ஆம் ஆண்டில் அதிக அளவில் நிதியை செலவிட்டிருந்தன.
ரேபிட் டெஸ்ட் விலை ரூ.400க்கு மேல் இருக்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
  • இந்தியாவுக்கு ரேபிட் கிட் வாங்க மத்திய மருத்துவக்கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சீனாவின் ரேர் மேட்ரிக்ஸ் அண்ட் அராக் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடம் இருந்து 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டை வாங்க கடந்த மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் மொத்த விலை ரூ.30 கோடி .
  • அந்த ஒப்பந்தத்தில் ஒவ்வொரு ரேபிட் டெஸ்ட் கிட்டும் ரூ.600 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல் கட்டமாக 2.76 லட்சம் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த விவகாரத்தில் மேட்ரிக்ஸ் என்ற இறக்குமதி நிறுவனமே, சீனாவில் இருந்து ரேபிட் கிட் இறக்குமதிக்கு அங்கீகாரம் பெற்றிருந்தது.
  • இந்த நிலையில், சீனாவில் இருந்து ரேர் மெடாபாலிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மேட்ரிக்ஸ் என்ற இறக்குமதி தனக்கு முழுமையான தொகையைக் கொடுத்தால்தான் மீதமுள்ள 2.24 லட்சம் கருவிகளை ஒப்படைக்க முடியும் எனத் தெரிவித்துவிட்டது.
  • இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்துக்கு வந்தது. ' தாங்கள் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மேட்ரிக்ஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்தோம். அதற்கு முன்பணமாக ரூ.12.75 கோடி செலுத்திவிட்டோம். மீதமுள்ள ரேபிட் கருவியை வழங்கினால் ஐசிஎம்ஆர் அமைப்பிடம் வழங்கி மீதிப் பணத்தைப் பெற முடியும். 
  • ஆனால் மீதமுள்ள ரூ.8.25 கோடியை வழங்கினால்தான் ரேபிட் கருவியை விடுவிக்க முடியும் என்று மேட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. ரேபிட் பரிசோதனைக் கருவியை வழங்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தது.
  • இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாஜிரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது. இந்த நிலையில் ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு 65 சதவீதம் லாபம் வைத்துக்கொள்ளலாம். 
  • அதாவது ரூ.155, ரூ.245க்கு இறக்குமதி செய்யப்பட்டால், ரூ.155 சேர்த்து ஒரு ரேபிட் கிட்டின் விலை ஜிஎஸ்டி உட்பட ரூ.400க்கு மேல் செல்லக்கூடாது. நாடு முழுவதும் மக்களின் பரிசோதனைக்காக இந்த ரேபிட் கிட் விரைவாக வழங்கப்பட வேண்டும்'.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel