இந்திய தபால் துறையில் இலவச Digi Lock சேவை / DIGITAL LOCKER SEVAI FROM INDIAN POST
TNPSCSHOUTERSMarch 13, 2020
0
இந்திய தபால் துறையில் டிஜிட்டல் பார்சல் லாக்கர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பார்சல் லாக்கர் சேவை என்பது பதிவு செய்யப்பட்ட ஸ்பீட் போஸ்ட்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பார்சல்களை எளிய முறையில் சேகரிக்க பெரிதும் உதவுகிறது.
இந்த சேவை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எப்படி செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு
வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாக்கர் என் வழங்கப்படும்
பார்சல்கள் டிஜிட்டல் பார்சலில் வைக்கப்படும்
பார்சல்களைப் பெற வாடிக்கையாளர்களுக்கு OTP அனுப்படும்
வாடிக்கையாளர்கள் 7 நாட்களில் எந்த நேரத்திலும் வந்து பார்சலை பெற்று செல்லலாம்