Type Here to Get Search Results !

12th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்தில் என்.பி.ஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.
  • நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை" என்று குறிப்பிட்ட அவர், என்பிஆர் கணக்கெடுப்பின் போது, எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. என்றார். மேலும், என்பிஆர் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை தருகின்றனர். 
  • இது தொடர்பாக தமிழக அரசு கடிதத்திற்கு மத்திய அரசின் பதில் இதுவரை கிடைக்காததால் கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
  • மேலும், இந்தப் புதிய சட்டத்தில் மூன்று கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளன. அது குறித்து விளக்கம் வராததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திவால் சட்ட மசோதா நிறைவேறியது
  • திவால் நிலைக்கு செல்லும் நிறுவனங்களின் பிரச்னைக்கு, விரைந்து தீர்வு காணும் திவால் சட்டம், 2016ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்குப் பின், மூன்று முறை, இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
  • இந்நிலையில், திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களின் மீதான குற்ற நடவடிக்கைகளில் இருந்து, அந்நிறுவனத்தை வாங்கும் புதிய நிர்வாகிகளை காக்கவும், இது தொடர்பாக, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கும் வகையிலும், திவால் சட்டத்தில் மீண்டும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
  • இந்த சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், 6ம் தேதி நிறைவேறியது. இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதாவை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அப்போது, குரல் ஓட்டெடுப்பு மூலம், இந்த சட்ட திருத்தம் நிறைவேறியது. 
ஹரியாணாவில் சட்டத் திருத்தம்: கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம்
  • மக்களின் பிரச்சினைகளில் வித்தியாசமான முடிவுகள் எடுப்பதில் பிரபலமானது ஹரியாணா மாநில கிராமப் பஞ்சாயத்துகள். இதனால், 'காப் பஞ்சாயத்து' எனும் பெயரில் அழைக்கப்படும் இவற்றில் விதிக்கப்படும் அபராதங்களும் வியப்புக்குரியது. 
  • குறிப்பாக பெண்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குவதில் ஹரியாணாவின் கிராமப் பஞ்சாயத்துகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.இதில், பெண்கள் ஜீன்ஸ் அணியத்தடை, கைப்பேசிகள் பயன்படுத்தக் கூடாது என்பவை அடங்கும்.
  • இந்நிலையில், அங்கு ஜேஜேபி கட்சி ஆதரவுடன் ஆளும் பாஜக அரசு 'பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994'-ல் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவை அங்கீகாரத்துடன் வெளியாகி உள்ள 'பஞ்சாயத்து ராஜ் திருத்தச் சட்டம் 2020' -ல்ஹரியாணாவின் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இதன்படி இனி, கிராமங்களின் குடிநீர்வசதி மற்றும் தெருவிளக்குகள் புகார்களின் மீது பஞ்சாயத்துகள் நடவடிக்கை எடுக்கும். குப்பைகளை அகற்றுதல், சுற்றுப்புறத் தூய்மை மீதான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பஞ்சாயத்துகள் செய்யும். 
  • முதியோர் கல்வி, பேரிடர் போன்றவற்றிலும் நடவடிக்கை எடுக்க பஞ்சாயத்துகளுக்கே முதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை, தனிநபர் திறமைகளை வெளிக்கொணர்தல், பண்டிகைக்கால விழாக்கள், கலாச்சார விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • எனவே, இனி பஞ்சாயத்து அமைப்புகள் கிராமங்களை, குட்டி அரசாட்சி செய்யும் அளவிற்கு தன் செயல்பாடுகளை அதிகரிக்க உள்ளது. இது சமூகப் பிரச்சினைகளில் தலையிட்டு விதிக்கும் அபராதத் தொகையும் பத்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • புதிய சட்டத் திருத்தத்தின்படி இனி ஹரியாணாவின் கிராமங்களில் நடைபெறும் தவறுக்கு பஞ்சாயத்துகள் ரூ.100 என்பதற்கு பதிலாக ரூ.1000 வரை அபராதத் தொகை விதிக்கலாம்.
  • கிராமப் பஞ்சாயத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பொதுமக்கள் அதன் அமர்வு நீதிமன்றங்களை அணுகவும் சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. 
  • இதற்கு முன் ஹரியாணாவின் கிராமப் பஞ்சாயத்து தீர்ப்புகளை எதிர்த்துமேல்முறையீடு செய்ய வழி இல்லாமல் இருந்தது. இத்துடன் புதிதாகக் கூடும் கிராமப் பஞ்சாயத்தின் பதவிக் காலம் ஐந்துவருடங்கள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் வீழ்ச்சி
  • சீனாவில் உருவான கரோனா வைரஸ், வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா உள்ளிட்ட உலகின் 125 நாடுகளில் 128,303 பேருக்குப் பரவியுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.
  • இந்தச் சூழலில், 35,697 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வியாழக்கிழமை தொடங்கிய மும்பை பங்கு வா்த்தகம், சா்வதேசச் சந்தையின் சரிவை ஆரம்பம் முதலே எதிரொலித்தது. ஒரு கட்டத்தில், 3,204 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ச்சியடைந்தது. இறுதியில், முந்தைய தினத்தைவிட 2,919 புள்ளிகள் குறைவாக, சென்செக்ஸ் 32,778 புள்ளிகளுடன் நிலைத்தது.
  • தேசிய பங்குச் சந்தையிலும், அதன் குறியீட்டு எண்ணான நிஃப்டி வியாழக்கிழமை 868 புள்ளிகள் சரிந்து, 95,590 புள்ளிகளுடன் நிலைத்தது. சென்செக்ஸும், நிஃப்டியும் ஒரே நாளில் இந்த அளவு வீழ்ச்சியடைந்துள்ளது இது முதல் முறையாகும்.
  • சென்செக்ஸின் சரிவு காரணமாக வியாழக்கிழமை மட்டும் முதலீட்டாளா்களுக்கு சுமாா் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 டோக்கியோ ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது
  • 2020 ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஏற்றும் நிகழ்வு, கிரீஸ் நாட்டில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கொரோனா அச்சுறுத்தலால் பார்வையாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
  • சீனாவின் வூஹானில் கடந்த டிசம்பரில், 'கோவிட்-19' எனும் கொரோனா வைரஸ் பரவியது. உயிர் பலி வாங்கி வரும் இந்த வைரஸ், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. 
  • இதனிடையே, ஜப்பானின் டோக்கியோவில், ஜூலை 24 முதல் ஆக., 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. கொரோனா பரவலால், இது நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
  • இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு, கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால், முதன் முறையாக பார்வையாளர்களின்றி இந்நிகழ்வு நடந்தது. 
  • ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்ற கிரீஸ் வீராங்கனை அன்னா கோராகாக்கி முதல் நபராக, ஒலிம்பிக் ஜோதியை கையிலேந்தினார். இரண்டாவதாக, ஜப்பான் முன்னாள் மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை நோகுச்சி மிசுகி ஜோதியை ஏந்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel