Type Here to Get Search Results !

13th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

காட்டுத்தீயை தடுத்து வனத்தை காக்க அதிரடிப்படை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • சிறப்பு‌ வனக்காவல் பணியமைப்பு மற்றும் தீத்தடுப்பு அதிரப்படை என்ற திட்டத்திற்காக 23 கோடியே 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி கூறியிருக்கிறார். 
  • யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க தருமபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் எஃகு கம்பிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தூண்களை நிறுவி, 5 அடுக்கு கம்பி வேலிகள் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்படும் வனத்துறை தலைமை அலுவலக உள்கட்டமைப்புக்கு 22 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 11 கோடியே 50 லட்சத்தில் விலங்குகள் உலாவிட உலகம் அமைக்கப்பட உள்ளது.
ரூ.635 கோடி முதலீடு ஒசூர் நகரில் அமைகிறது எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை
  • எலக்ட்ரிக் பைக் நிறுவனம் ஒன்று, ஓசூரில், ரூ. 635 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கவுள்ளது. இந்த நிறுவனம், பெங்களூரை சேர்ந்தது.
  • கடந்த 2019ம் ஆண்டில் நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதற்கான புரிந்துணர்வு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் 4300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • ஒசூர் நகரில் செயல்படும் சிப்காட்-2 கேம்பசில், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 4000 ஏக்கரில் பரப்பளவில் பி6 இஞ்சின்கள் தயாரிக்ககூடிய வகையில் எலக்ட்ரிக் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை மாநில பேரிடராக அறிவித்து ஒடிசா அரசு உத்தரவு
  • கொரோனா வைரஸ் உலகின் பலநாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. தொடர்ந்து, உயிர் பலியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
  • பாதிப்புகளை குறைக்கும்வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒடிசா அரசு கொரோனாவை மாநில பேரிடராக பிரகடனம் செய்திருப்பதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
  • கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது. அத்துடன் நோய் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
  • கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31 வரை மூடப்படும். தேர்வு எழுதுபவர்களுக்கு இது பொருந்தாது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் 31 வரை மூடப்படும்.
  • அத்யாவசியமற்ற கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ரத்து செய்ய வேண்டும். சமூகக் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சட்டசபை கூட்டத் தொடர் மார்ச் 29ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 



என்ஆர்சி மற்றும் என்பிஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்
  • டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
  • இதனால் என்பிஆர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக பரவின. இந்த போராட்டம் இன்று வரை பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் என்ஆர்சிக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. தமிழகத்தில் என்ஆர்சி பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
யெஸ் வங்கியை சீரமைக்கும் ரிசர்வ் வங்கி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ரிசர்வ் வங்கியின் யெஸ் வங்கி சீரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. யெஸ் வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அதை மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 
  • ரிசர்வ் வங்கியின் யெஸ் வங்கி மீட்பு திட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி ஒரு பங்கு மதிப்பு 10 வீதம் 725 கோடி பங்குகளை 7,250 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதி திரட்டலுக்கு யெஸ் வங்கி 1,200 முதல் 1,300 கோடி பங்குகளை வெளியிட்டுள்ளது. 
  • இதில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட 7 முதலீட்டாளர்கள், யெஸ் வங்கியில் மொத்தம் 11,750 கோடி முதலீடு செய்ய உள்ளனர். ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை தலா 1,000 கோடி முதலீடு செய்து 6 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர். 
  • ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, மிகப்பெரிய பங்கு முதலீட்டாளர்களான ராதாகிருஷ்ணன் தமானி, ராகேஷ் ஜூன்ஜூன் வாலா மற்றும் அஜித் பிரேம்ஜி ஆகியோர் தலா 500 கோடி முதலீடு செய்து 3 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர். 
`ஏ.கே.47 துப்பாக்கிக்கு இணையான திருச்சி அசால்ட் ரைபிள்' - மேக் இன் இந்தியா திட்டத்தால் சாத்தியம்
  • மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் துணைத்தலைவர் ராவத், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பொது மேலாளர்கள் ராஜாராம், அகர்வால், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், 500 துப்பாக்கிகள் மத்திய பாதுகாப்புப் படை டி..ஐ.ஜி ராவத்திடம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் வழங்கினர்.
  • திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில், மத்திய மற்றும் மாநில போலீஸ் பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2011-ம் ஆண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிக்கு இணையான திருச்சி அசால்ட் ரைபிள் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. 
  • அதன்படி 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 200 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு, அவை சத்தீஸ்கர் மாநில போலீஸாருக்கு வழங்கப்பட்டன. 
  • அதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில போலீஸ் படையினரின் பயன்பாட்டுக்காகத் துப்பாக்கிகள் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
  • இங்கு தயாரிக்கப்படும் நவீன துப்பாக்கிகள் ஹரியானாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் சோதனை முறையில் சுட்டுப் பார்க்கப்பட்ட பிறகுதான், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படும்.
  • இந்தோ-ரஷ்ய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தின் மாநிலம் கோர்வா தொழிற்சாலையில் இன்னும் 9 மாதங்களுக்குள் ரஷ்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துப்பாக்கி தயாரிப்பு மேற்கொள்ளப்படும். 



கடுமையானது 'போக்சோ' சட்டம்: அரசாணை வெளியிட்டது மத்திய அரசு
  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாளும், 'போக்சோ' சட்டத்தின் விதிகளை, மேலும் கடுமையாக்கி, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்களை இழைப்போர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இச்சட்டம், 2012ல், அமலுக்கு வந்தது.
  • இந்நிலையில், மத்திய அரசு, இச்சட்டத்தில், மேலும் சில திருத்தங்களை செய்து, அதன்படி விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதற்கான அரசாணையை, அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 
  • புதிய சட்டத்தின் கீழ், பள்ளிகள், காப்பகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அனைத்து விபரங்களும், போலீஸ் அதிகாரிகள் மூலம் சரி பார்க்கப்படும், குழந்தைகளின் ஆபாச பதிவுகள் பகிரப்பட்டால், அது குறித்து புகார் அளிக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. 
  • குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் 'வீடியோ'க்களை யாராவது பகிர்ந்தாலோ, சேமித்து வைத்திருந்தாலோ, அதை, சைபர் கிரைம் அல்லது சிறப்பு சிறார் போலீஸ் பிரிவிடம் புகார் அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.
  • குழந்தைகள் பாதுகாப்பிற்கான கொள்கையை வகுக்கவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணவும், மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  • இதை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், அமைப்புகளும் பின்பற்ற வேண்டும். இந்த புதிய சட்டத்தின் கீழ், இருக்கும் பொறுப்புகளை உணர்த்த, அந்த அமைப்புகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் தேவையான பயிற்சிகளை வழங்கும். 
  • போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளி மாணவ - மாணவியருக்கு, தங்களின் உடல் மற்றும் மனரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பாடங்களை, மத்திய - மாநில கல்வி அமைப்புகள் வடிவமைக்க வேண்டும்.
வளர்ச்சி 4.8 சதவீதம்: யு.பி.எஸ்., கணிப்பு
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும் என, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, யு.பி.எஸ்., நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும். உள்நாட்டு கடன் வளர்ச்சி பலகீனமாக இருப்பது மற்றும் 'கொரோனா' வைரஸ் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக, வளர்ச்சி பாதிக்கப்படும்.நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சியையும், 4.8 சதவீதமாக குறைத்துள்ளோம்.
பரூக் அப்துல்லா விடுதலை: ஏழு மாத வீட்டு சிறை முடிந்தது
  • கடந்த, 2019, ஆக., 5ல், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அத்துடன், ஜம்மு - காஷ்மீரில் இருந்து, லடாக் பிரிக்கப்பட்டு, இரண்டும் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. 
  • இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தி மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். 
  • அடுத்து, செப்., 17ல், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா ஆகியோர் மீது, பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்தின் கீழ், கைது செய்யப்படும் நபரை, விசாரணையின்றி, இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்க முடியும். 
  • ஆனால், பரூக், ஒமர் மீது, அரசு உத்தரவை நிறைவேற்ற விடாமல் இடையூறு செய்யக் கூடும் என்ற பிரிவில் மட்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவின் கீழ், மூன்று மாதங்கள் மட்டுமே ஒருவரை சிறை வைக்க முடியும்.
  • அதன்படி, மூன்று மாதம் முடிய இருந்த நிலையில், டிச., 13ல், வீட்டுச் சிறை வாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இது, நேற்றுடன் முடிவடைந்தது. 
  • இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் உள்துறை செயலர், ஷலீன் காப்ரா, பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவலை ரத்து செய்து, உத்தரவிட்டார். 
  • இதையடுத்து, ஏழு மாதங்களாக வீட்டுச் சிறையில் அடைபட்டிருந்த, பரூக் அப்துல்லா விரைவில் வெளிவந்து பொதுமக்களை சந்திப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.



மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு
  • மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவிகிதத்திலிருந்து 21 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.
  • இதன் மூலம் 48 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர் என்ற அமைச்சர், இதனால் அரசுக்கு கூடுதலாக 14,595 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்தார். 
  • மேலும், நிதி சிக்கலில் உள்ள யெஸ் வங்கியை கட்டமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, யெஸ் வங்கியின் 49 விழுக்காடு பங்குகளை எஸ்.பி.ஐ. வங்கி வாங்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கப்படுவது மார்ச் 16 முதல் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
  • இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கப்படுவது மார்ச் 16 முதல் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தூதரகங்களில் விசா வழங்கும் நடைமுறைகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ள நிலையில் தூதரகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரஞ்சித் கோப்பை: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி
  • முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணிரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 9ம் தேதி முதல் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது
  • சௌராஷ்ட்ரா அணி மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி சௌராஷ்ட்ரா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
  • இதனையடுத்து சௌராஷ்ட்ரா அணி முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 381 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய சௌராஷ்ட்ரா அணி 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது
  • இந்த போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் சௌராஷ்ட்ரா அணி அதிக ரன்கள் எடுத்து இருந்ததால் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
  • இதனால் சௌராஷ்ட்ரா அணி முதல் முறையாக ரஞ்சித் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய ஆர்பித் வசவதா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel