Type Here to Get Search Results !

5th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடம்: முதல்வா் திறந்து வைத்தாா்
  • கரூரில் 7 தளங்களுடன் கூடிய 700 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனா்.
சிறந்த 50 பொறியியல் கல்லூரிகளில் IIT பம்பாய், டெல்லி: QS உலக தரவரிசை
  • மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மதிப்புமிக்க இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) உலகெங்கிலும் உள்ள சிறந்த 50 பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும் என்று பொருள் வாரியான QS உலக தரவரிசைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • IIT பம்பாய் 44 வது இடத்தையும், IIT டெல்லி 47 வது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, IIT டெல்லி 61 வது இடத்தில் இருந்தது, IIT பம்பாய் 53 வது இடத்தில் இருந்தது. 
  • இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவில் இருந்து ஐந்து நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன, 2019 ஆம் ஆண்டில் IIT பம்பாய், IIT டெல்லி மற்றும் IIT மெட்ராஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இருந்தன. இந்த ஆண்டு IIT கரக்பூர் (IIT-KGP) 86 வது இடத்திலும், IIT மெட்ராஸ் (IITM) 88 வது இடத்திலும், IIT கான்பூர் (IITK) 96 வது இடத்திலும் உள்ளன.
  • கலை மற்றும் மனிதநேயத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) 162 வது இடத்திலும், டெல்லி பல்கலைக்கழகம் 231 இடத்திலும் உள்ளன.



கலப்புத் திருமணம் செய்வோரை பாதுகாக்க காப்பகங்கள்: கேரள அரசு முடிவு
  • "கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். 
  • "கலப்புத் திருமணம் செய்யும் தம்பதி பொதுப் பிரிவினராக இருந்து, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுயவேலைவாய்ப்புக்கான நிதியுதவியாக அவா்களுக்கு ரூ.30,000-ஐ ஏற்கெனவே சமூகநீதித் துறை வழங்கி வருகிறது. 
  • தம்பதியில் ஒருவா் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோந்தவராக இருக்கும் பட்சத்தில் அவா்களுக்கு ரூ.75,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது
அதிக பெண் கடன் நுகர்வோர் தமிழகத்துக்கு 2வது இடம்
  • இந்திய கடன் சந்தையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, 2019, செப்., மாத முடிவில், இந்தியாவில், மூன்று கோடி பெண்கள் பல்வேறு விதமான கடன்களை வாங்கி உள்ளதுதெரிய வந்துள்ளது. மொத்தமாக கடன் வாங்கியோரில், பெண்களின் பங்கு, 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
  • இது, 2013 செப்டம்பரில், 21 சதவீதமாக இருந்தது.கடந்த, 2019, மூன்றாம் காலாண்டில், 62 லட்சம் பெண்கள் கடன் வாங்குவது தொடர்பாக, விசாரணை நடத்தி உள்ளனர்.
  • ஆறு ஆண்டுகளில் இது, ஆறு மடங்கு அதிகம். மேலும், 63 லட்சம் கடன் கணக்குகள், பெண்களால் துவங்கப்பட்டுள்ளன.இதே போல, கடன் வாங்குவது தொடர்பாக விசாரித்த ஆண்களின் எண்ணிக்கை, இதே காலகட்டத்தில், 5.3 மடங்கு அதிகரித்துள்ளது. 
  • மேலும், கடன் கணக்கு துவங்கிய ஆண்களின் எண்ணிக்கையும், ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் என மாற்றம்
  • மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • சத்ரபதி சிவாஜியின் வாரிசான சம்பாஜியின் பெயரை விமான நிலையத்திற்கு சூட்டுகிறது மகாராஷ்டிரா அரசு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel