Type Here to Get Search Results !

29th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பிரதமரின் அவசர கால நிதிக்கு அதானி, ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தலா ரூ.100 கோடி
  • கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரதமரின் அவசர கால நிதிக்கு அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
  • டி-சீரிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் பூஷண் குமாா் அவசர கால நிதிக்கு ரூ.11 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளாா். இதுதவிர, மகாராஷ்டிர முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளாா்.
144 தடை உத்தரவு விவசாய பணிக்கான தடை நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
  • கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. 
  • வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • விவசாய பொருட்கள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டி நடத்தும் மண்டிகள் செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. 
  • அதேபோல உர விற்பனை நிலையங்கள், விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணி, விவசாய இயந்திரங்கள் வாடகை மையங்கள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். 
  • மாநிலம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களின் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படுகிறது.
பிரதமர் நிவாரண நிதிக்கு முப்படை வீரர்கள் 500 கோடி நன்கொடை
  • பிரதமர் மோடி அறிவித்த, கொரோனா நிதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நன்கொடைகள் குவிந்து வருகின்றன. 
  • கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் பிரதமர் மோடி 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிகள்' என்ற பெயரில் ஒரு நிதியை அறிவித்தார். 
  • மேலும், இந்த நிதிக்கு தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். இதற்காக அவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 
  • இதற்கிடையே, ராணுவத்தின் முப்படை வீரர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளமான ரூ.500 ேகாடியை பிரதமரின் கொரோனா நிதிக்கு தந்துள்ளனர்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ஊழியர்கள்
  • ரயில்வேயில் பணிபுரியும் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.



அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்வோருக்கு ஈ-பாஸ் வழங்கல் திட்டம்
  • ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது, காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் கெடுபிடிகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது. 
  • இதை உணர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்தபடியே வெளியே செல்வோருக்கு ஈ-பாஸ் முறையில் அனுமதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • அதையடுத்து அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, செல்போனிற்கு மீண்டும் அனுமதி ஒப்பம் கிடைத்தவுடன் அதைக் கொண்டு, அவர்கள் பயணிக்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது
கரோனா நிதி; துணை ராணுவ படை சார்பில் ரூ. 116 கோடி: அமித் ஷாவிடம் வழங்கினர்
  • கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.
  • இதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று துணை ராணுவப்படையினர் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை கரோனா நிதிக்கு வழங்கியுள்ளனர்.
  • இதன்படி மொத்தம் 116 கோடி ரூபாய் நிதியை துணை ராணுவத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட அமித் ஷா துணை ராணுவப்படையினக்கு நன்றி தெரிவித்தார்.
ரூ.29 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தலாம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - கரோனாவுக்கு கேரளாவில் முதல் உயிரிழப்பு
  • மத்திய பட்ஜெட்டில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக (எஸ்டிஆர்எப்) ரூ.29 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில், வெளிமாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதிகளை ஏற்படுத்தித்தர அந்த நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதனிடையே ஜனவரி 18 முதல் மார்ச் 23-ம் தேதிக்குள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 15 லட்சம் பேரை கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் முழு ஊரடங்கு
  • அமெரிக்காவில் மூன்று நாட்களில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, இரட்டிப்பாகி உள்ளது. தொற்று உள்ளோர் எண்ணிக்கை, கடந்த வாரத்தில், 8,000மாக இருந்தது. ஒரு வாரத்துக்குள், 1.38 லட்சத்தை தாண்டியுள்ளது.
  • நிலைமை மேலும் மோசமாகி வரும் சூழலில், 'நியூயார்க் நகரில், இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். 'நியூஜெர்சி, கனெக்டிகட் பகுதிகளிலும், இதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என, டிரம்ப் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel