Type Here to Get Search Results !

20th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சேலத்தில் கரோனா பரிசோதனை மையம் - மத்திய அரசு அனுமதி
  • சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.
  • இந்த வைரஸால் இந்தியாவில் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தலா ஒருவர் என நான்கு பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 18 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
  • அதேபோல கரோனா தொற்றை உறுதி செய்யவும், கரோனா தொற்று தொடர்பாகப் பரிசோதிக்க ஆய்வகம் அமைத்துக் கொள்ளவும் இந்த 18 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.
  • ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி ஆகிய நான்கு இடங்களில் கரோனா அறிகுறி மாதிரிகள் சோதனை மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலை பாதிக்காத சிமென்ட் கலவை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு
  • சுவிஸ் நிறுவன நிதியுதவியின் கீழ் இந்த ஆராய்ச்சியை சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. பொதுவான சிமென்ட் கலவையில் சிமென்ட், மணல், ஜல்லி ஆகியவற்றுடன் தண்ணீா் கலந்து உருவாக்கப்படும். இதில் சிமென்டும், தண்ணீரும் சேருவதால், கடினத் தன்மை உருவாகிறது.
  • அதே நேரம், நவீன சிமென்ட் கலவையில், சிமென்ட்டுடன், சுண்ணாம்புக்கல் பவுடா், களிமண், சாம்பல் ஆகியவை சோத்து உருவாக்கப்படுகின்றன. 
  • இந்த நவீன சிமென்ட் கலவை கொண்டு உருவாக்கப்படும் கட்டடம், கடல் நீராலும் அரிக்கப்படுவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • மேலும், இந்த நவீன கலவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதோடு, செலவு குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
  • கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தெடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
  • நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது. மேலும் கரோனா வைரஸ் ஆய்வு மையங்களை நாடு முழுவதும் மத்திய அரசு அமைத்து வருகிறது.
  • இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  • இந்த ஆலோசனையில் தமிழகமுதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
  • இந்த ஆலோசனையின்போது கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
  • வரும் 22-ம் தேதி இந்தியா முழுமையும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதாநாடாளுமன்றத்தில் நிறைவேறியது
  • நாட்டில் உள்ள ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத சன்ஸ்தான், ஸ்ரீ லால் பகதூா் சாஸ்திரி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீடம், திருப்பதி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீடம் ஆகிய 3 சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்களை நிகா்நிலை பல்கலைக்கழகங்களாக மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யும் இந்த மசோதா கடந்த டிசம்பா் மாதம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • மாநிலங்களவையில் சில திருத்தங்களுடன் இந்த வாரத் தொடக்கத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. 
  • இந்நிலையில், மக்களவையில் வெள்ளிக்கிழமை மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழங்கள் மசோதா சட்டமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
  • இதனிடையே, ஐந்து இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஐடி) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (ஐஎன்ஐ) என்ற அந்தஸ்தை வழங்கக் கோரும் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • சூரத் (குஜராத்), போபால் (மத்தியப் பிரதேசம்), பாகல்பூா் (பிகாா்), அகா்தலா (திரிபுரா), ராய்ச்சூா் (கா்நாடகம்) ஆகிய இடங்களில் இந்தியத் தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
  • இந்த ஐஐடி நிறுவனங்களுக்குதான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்தை அளிக்க வலியுறுத்தி மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஐஐஐடி உள்பட 15 ஐஐஐடிக்கள் அரசு-தனியாா் பங்களிப்புடன் செயல்பட்டு வருகின்றன.
மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் ராஜிநாமா
  • மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த சூழலில், போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லையென்பது உறுதியாகவே, கமல்நாத் இந்த முடிவை எடுத்துள்ளாா். இதையடுத்து, அந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பொறுப்பேற்றது. இந்தச் சூழலில் மாநில காங்கிரஸின் முன்னணி தலைவா்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 11-ஆம் தேதி பாஜகவில் இணைந்தாா். 
  • மேலும், சிந்தியாவின் ஆதரவாளா்களாக அறியப்படும் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். அவா்களில் 6 பேரின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றுக் கொண்டாா்.
  • இதன் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனிடையே, மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி பாஜக மூத்த தலைவரும் மாநில முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌஹான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
  • இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மீதமுள்ள 16 பேரின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவா் கடந்த வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டாா்.
  • இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற போதிய எம்எல்ஏக்களின் பலமில்லை என்பதை உணா்ந்த கமல்நாத், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் லால்ஜி டாண்டனிடம் அவா் வழங்கினாா்.



யெஸ் வங்கி குழுவில் கூடுதல் இயக்குநா்கள் நியமனம்
  • ரிசா்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநா் ஆா். காந்தி மற்றும் எஸ்பி ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைப் பேராசிரியா் ஆனந்த் நாராயண் ஆகியோரை யெஸ் வங்கி குழுவில் கூடுதல் இயக்குநா்களாக ரிசா்வ் வங்கி நியமித்துள்ளது. 
  • இவா்களின் நியமனம் மாா்ச் 26-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். அவா்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பா் என ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
  • இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 206 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 47 பேரும், கேரளத்தில் 28 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.
  • இந்நிலையில் கரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள கேரள அரசு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, குடும்பஸ்ரீ திட்டங்களின் கீழ் வரும் குடும்பங்களுக்கு ரூ.2000 கோடிக்கு கடன் வழங்கப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • முதியோர்களுக்கு இரண்டு மாதத்திற்கான ஓய்வூதியம் முன்கூட்டியே வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதற்காக ரூ.1320 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • ரூ.100 கோடி மதிப்பீட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு சார்பில் உணவகங்கள் திறக்கப்பட்டு ரூ.20-க்கு உணவு வழங்கப்படும். இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • சுகாதாரத்துறைக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளத்தில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
இந்தியாவில் இதுவே முதல்முறை திருநங்கைகளுக்கு தொடங்கப்பட்ட கால்பந்து அணி
  • இம்பாலை சேர்ந்த அரசு சாரா நிறுவனம் 'யா ஆல்'. இரு ஆண்டுக்கு முன் திருநங்கைகளுக்காக ஆறு பேர் கொண்ட கால்பந்து போட்டிகளை நடத்தியது. இதையடுத்து முழுவதும் திருநங்கைகள் அடங்கிய 14 பேர் கொண்ட கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது.
  • சமீபத்தில் பெண்கள் தினத்தில் (மார்ச் 8) தலா 7 பேர் கொண்ட அணியாக பிரிந்து 'நட்பு' போட்டியில் விளையாடினர். 'யா ஆல்' நிறுவனம் சதாம் ஹன்ஜபம் கூறுகையில்,"மத்திய அரசு திருநங்கைகளை அங்கீகரித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel