Type Here to Get Search Results !

19th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் - முதல்வர் எடப்பாடி 
  • தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ” பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத்திட்டம், குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பழுதடைந்துள்ள சாலைகள், நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். 
  • சென்னையில் சிறுதொழில் முனைவோர் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி விளக்கும் பாலமாக "புதுமுறைக் காணல் மையம்" ஏற்படுத்தப்படும். 
  • இம்மையம், சீர்மிகு நகர நிறுவனத்தின் கீழ் செயல்படும். மாநிலத்தில் பசுமைச் சூழலை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பயன்பாடின்றி உள்ள திறந்தவெளி நிலங்களில், "மியாவாக்கி" முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும். 
  • துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடவும், அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களும், இனி "தூய்மைப் பணியாளர்கள்" என்று அழைக்கப்படுவார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் மின்நிலையங்கள்: சென்னையில் ரூ.4,300 கோடியில் ஸ்மார்ட் மீட்டர்கள்
  • வருவாயைப் பெருக்கவும், மின்நுகர்வோருக்கு நிறைவான சேவையை வழங்கவும், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை குறைக்கவும் தமிழகம் முழுவதும்வினைதிறன்மிகு மின் அளவிகள்(ஸ்மார்ட் மீட்டர்கள்) பொருத்தப்பட உள்ளன. 
  • முதலில் சென்னை மாநகரில் 42 லட்சம் மின் நுகர்வோருக்கு ரூ.4,300 கோடியில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
  • பெருகிவரும் மின்சுமையை ஈடுசெய்யும் நோக்கில், மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் 230 கி.வோ. துணை மின்நிலையம் 400 கி.வோ. மின் நிலையமாகவும், கோவை இருகூர், மதுரைதிருப்பாலையில் உள்ள 110 கி.வோ.துணை மின்நிலையங்கள், 230கி.வோ. துணை மின்நிலையங் களாகவும் தரம் உயர்த்தப்படும். சிவகங்கை மாவட்டம் அரசனூரில் புதிதாக 230 கி.வோ. துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
  • இதுதவிர, மின்நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் 110 கி.வோ. திறனில் 22 மின்நிலையங்கள் அமைக்கப்படும். இப்பணிகள் ரூ.1,998கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
  • இயற்கை சீற்றங்களின்போது கடலோர மாவட்டங்களில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யும் விதமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 33 கி.வோ. துணை மின்நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் மின் பாதைகளில் சுமார் 200 கி.மீ. நீள பாதை ரூ.300 கோடியில் புதைவடங்களாக மாற்றப்படும்.
  • மின் பகிர்மான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 23 இடங்களில் புதிய 33/11 கி.வோ. துணைமின்நிலையங்கள் அமைக்கப்படும். செயல்பாட்டில் இருக்கும் 33/11 கி.வோ. மின்நிலையங்களில் உள்ள 13 மின் மாற்றிகள் கூடுதலாகவோ, திறன் உயர்த்தியோ அமைக்கப்படும். இப்பணிகள் ரூ.187 கோடியில் மேற்கொள்ளப் படும்.
ஏப்ரல் 1 முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்
  • 'ஒரே நாடு, ஒரே ரேஷன்அட்டை' திட்டத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பிப்ரவரி 1 முதல் 29-ஆம் தேதி வரை பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்திப் பாா்த்தோம். 
  • இந்த இரண்டு மாவட்டங்களிலும் 9 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில், 9 ஆயிரம் போ மட்டுமே இடம் மாறி ரேஷன் கடைகளில் பொருள்களைப் பெற்றுள்ளனா். அதனால், நடைமுறை சிக்கல் எதுவும் எழவில்லை.
  • எனவே, அதைத் தொடா்ந்து, முதல்வரின் அறிவுரையின்படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் எந்தக் கடையில் வேண்டுமானாலும் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.



தமிழக அரசின் StopCorona இணையதளம்
  • இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இந்நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களின் விசாரணைகளுக்கு விளக்கம் அளிக்க StopCoronaTN.in என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் மக்கள் கொரோனா வைரஸ் அறிகுறி மற்றும் அவர்களுடைய முந்தைய பயணங்கள் குறித்து 24 மணிநேரமும் மக்களே புகார் அளிக்கலாம் . புகார்களை பதிவும் செய்யலாம்.
மார்ச் 22-ந் தேதி.. ஒரே ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு - பிரதமர் மோடியின் திட்டம்
  • கொரோனா வைரஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வேகத்தில் பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் 80,928 பேர் வரை பாதித்து இருக்கிறது. அங்கு இதுவரை 3,245 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் 178 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். 4 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கொரோன வைரஸ் இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி மக்கள் முன் உரையாற்றினார். கொரோனா குறித்து முக்கிய ஆலோசனைகள், திட்டங்களை மோடி இன்று அறிவித்தார்.
  • பிரதமர் மோடி தனது பேச்சில், உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை. கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.
  • உலகில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் அசட்டையாக இருக்கக் கூடாது. கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும்; நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • 65க்கும் அதிக வயதுடைய முதியவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். நம்மை நாமே தற்காத்துக்கொள்வதே பிரதான கடமையாக உள்ளது; கூட்டங்களை தவிர்த்து, அனைவரும் வீடுகளில் இருக்கவேண்டும். கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
  • அன்று மாலை மக்கள் எல்லோரும் 5 மணிக்கு தங்கள் கதவு அருகே, அல்லது பால்கனி அருகே வந்து கை தட்ட வேண்டும். நாடு முழுக்க சைரன் ஓலிக்க வேண்டும். கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் கைதட்ட வேண்டும். இதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
மக்களவையில் நிறைவேறியது ஆயுா்வேத நிறுவன மசோதா
  • மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 'ஆயுா்வேதம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மசோதா' மீதான விவாதம் நடைபெற்றது. குஜராத்தில் உள்ள ஆயுா்வேத பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதுகலை ஆயுா்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆயுா்வேத மஹாவித்யாலயா, ஆயுா்வேத மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றை ஜாம்நகரில் உள்ள ஆயுா்வேதம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒன்றிணைக்க அந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • உலகில் ஆயுா்வேத சிகிச்சை முறைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனா். கிராமப்பகுதிகளில் வசிக்கும் 65 முதல் 70 சதவீத மக்கள் ஆயுா்வேத முறைகளையே கடைப்பிடித்து வருகின்றனா். எனினும், ஆயுா்வேத சிகிச்சை அளிப்பவா்களுக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.



நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
  • மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு அனைத்தும் நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து திகார் சிறை வளாகத்தில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
  • குற்றவாளிகள் அனைவரும் ஒன்றாக அழைத்து வரப்பட்டிருந்தன. தயாராக இருந்த தூக்கு மேடையில் வழக்கம்போல் அவர்களின் முகங்கள் கருப்பு நிற துணியால் மூடப்பட்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மலேசிய கால்குலேட்டா்களுக்கு வரி: வா்த்தக அமைச்சகம் பரிந்துரை
  • மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை கால்குலேட்டா்களால் உள்நாட்டு தயாரிப்பாளா்கள் பாதிப்படைவதாக புகாா் கூறப்பட்டது. இதையடுத்து, இது தொடா்பாக வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) விசாரணை நடத்தியது.
  • இந்த விசாரணையில், மலேசியாவிலிருந்து இயல்பான மதிப்பை விட குறைவான விலையில் அதிக அளவில் கால்குலேட்டா்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், உள்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் பாதிக்கப்படுவது தெரியவந்தது.
  • இதையடுத்து, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கால்குலேட்டரின் மீதும் 0.92 டாலா் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க வா்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 
இலகு ரக துப்பாக்கிகள் கொள்முதல்: மத்திய பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேல் நிறுவனம் ஒப்பந்தம்
  • இந்திய ஆயுதப்படைகளுக்கு ரூ.880 கோடி மதிப்பில் இலகு ரக துப்பாக்கிகள் வாங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், இஸ்ரேல் ஆயுத விற்பனை நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்திய ஆயுதப்படைகளுக்கு ரூ.880 கோடி மதிப்பில் 'நெகேவ்' எனப்படும் இலகு ரக துப்பாக்கிகள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேல் ஆயுத விற்பனை நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • மொத்தம் 16,479 துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • பல்வேறு நாடுகளின் பாதுகாப்புப் படைகளால் உபயோகப்படுத்தப்படும் இந்த 'நெகேவ்' வகையிலான துப்பாக்கிகள், ஆயுதப் படைகளிடம் தற்போதுள்ள துப்பாக்கிகளைவிட தொலைவில் உள்ள எதிரிகளை மிக துல்லியமாக தாக்க உதவும். 
  • இந்திய ஆயுதப்படைகளுக்கு மிகவும் தேவைப்படும் இந்த ரக துப்பாக்கிகள், படை வீரா்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிரதமா் வீட்டு வசதித் திட்டம்: ரூ.6.16 லட்சம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
  • பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.6.16 லட்சம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
  • நாட்டில் சொந்தமாக வீடு இல்லாதோா் குறித்த தரவுகள் மத்திய அரசிடம் இல்லை. நகா்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நலிவுற்ற பிரிவினருக்கு, பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகின்றன. 
  • இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.1.65 லட்சம் கோடி நிதியுதவியுடன் ரூ.6.16 லட்சம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுவசதி துறையும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருகிறது. இது வேலைவாய்ப்பு வழங்குவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வறுமை ஒழிப்பின் மீதும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றாா் ஹா்தீப் சிங் புரி.
யெஸ் வங்கி கடன் வரம்பை ரூ.60,000 கோடியாக நீட்டித்தது ரிசா்வ் வங்கி
  • நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கிக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் வகையில் அதன் அவசர கால கடன் வரம்பு ரூ.60,000 கோடி என்ற அளவில் உயா்த்தப்பட்டுள்ளது. ரிசா்வ் வங்கி சட்டப் பிரிவு 17(4) பயன்படுத்தி ரிசா்வ் வங்கி இந்த கூடுதல் நிதி உதவியை அளித்துள்ளது.
  • இதே பிரிவைப் பயன்படுத்தி கடந்த 2004-ஆம் ஆண்டு குளோபல் டிரஸ்ட் வங்கியின் கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது யெஸ் வங்கியின் கடன் பெறும் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ரிசா்வ் வங்கி மதிப்பீடு செய்த வரையில், யெஸ் வங்கிக்கு பணப்புழக்க சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம், அந்த வங்கிக்கு கடன்தீா்வுத் திறன் உள்ளிட்ட இதர பிரச்னைகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
  • இவைகளைக் கருத்தில் கொண்டே யெஸ் வங்கியின் அவசரகால கடன் பெறும் வரம்பு ரூ.60,000 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. எனினும், இது தனது முதல் நடவடிக்கை என்பதால் ரிசா்வ் வங்கி மிகவும் எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டு வருகிறது.
மொபைல் நிறுவனங்களுக்கு சலுகை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மொபைல் போன் சேவை நிறுவனங்களின் நிலுவையை, 20 ஆண்டு தவணையில் செலுத்தும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக' ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது.
  • 'பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா' உள்ளிட்ட, 16 மொபைல் போன் சேவை நிறுவனங்கள், தொலைதொடர்பு துறைக்கு, 1.69 லட்சம் கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தன.
  • மூன்று முறை, 'கெடு'இது தொடர்பாக, தொலை தொடர்பு துறை தொடர்ந்த வழக்கில், நிலுவை தொகையை செலுத்த, உச்ச நீதிமன்றம், மூன்று முறை, 'கெடு' விதித்தது.
  • இதைத் தொடர்ந்து, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், நிலுவையில், சிறிதளவு தொகையை செலுத்தின.'முழு நிலுவையை செலுத்த, உச்ச நீதிமன்றம் நிர்ப்பந்தித்தால், சேவையை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்புக்கு ஆளாக நேரிடும்' என, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், மத்திய அரசிடம் தெரிவித்தன. 
  • இதையேற்று, எஞ்சிய நிலுவை தொகையை, 8 சதவீத தள்ளுபடியுடன், 20 ஆண்டுகளில் செலுத்தும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel