Type Here to Get Search Results !

10th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

"தூயதமிழ்ப் பற்றாளர்' விருதுக்கு 3 பேர் தேர்வு
  • நடைமுறையில் மக்களிடம் பொதுப் பயன்பாட்டில் அனைத்து இடத்திலும் பேச்சு வழக்கில் பிறமொழிக் கலப்பில்லாமல் எங்கும் எதிலும் தூயதமிழைப் பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் பரிசுத் திட்டம் ஒன்றை அறிவித்தது.
  • இதைத் தொடர்ந்து, பரவலாகப் பலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றைச் சீர்தூக்கி, தொலைபேசி வழியாகவே அவர்களிடம் தொடர்பு கொண்டு உரையாடல் நிகழ்த்தப்பட்டு அவர்களது தூயதமிழ்ப் பாங்கு ஆய்வு செய்யப்பட்டது. 
  • இதையடுத்து, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் ச.மல்லிகா, தலைமைச் செயலகத் தமிழ்வளர்ச்சிப் பிரிவு அலுவலர் க. பூங்கொடி, அகரமுதலித் தொகுப்பாளர் முனைவர் வே.கார்த்திக் ஆகியோரது உரையாடல்களை சீர்தூக்கி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
  • கோவையைச் சேர்ந்த கல்வியியல் பட்டதாரி சி.மணிகண்டன் (27), புதுச்சேரியில் பிறந்து அரியலூர் உட்கோட்டை அரசுப் பள்ளியில் இரவுக் காவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இரா.அரிதாசு (71), திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் த.ஆரோக்கிய ஆலிவர் ராசா ஆகிய 3 பேரையும் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மூவரும் யாரிடமும் தயக்கமில்லாமல் தூய தமிழையே பயன்படுத்தும் ஆர்வத்தினராவர்.
  • சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள விழாவில், அமைச்சர்கள் க.பாண்டியராஜன், இரா.காமராஜ், டி.ஜெயக்குமார், துணைவேந்தர் சுதா சேஷய்யன், அகரமுதலித் திட்ட இயக்குநர் தங்க.காமராசு உள்ளிட்டோர் பங்கேற்று பரிசளிக்கவுள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு சிறந்த அரங்குக்கான விருது
  • சுற்றுலா பொருள்காட்சி நிறைவடைந்தது. இந்த பொருள்காட்சியில் அரசின் ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும் விளக்கும் வகையில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
  • அதில், பல்வேறு கோயில்களின் நிகழ்வுகளை காட்சிப்படுத்தி அரங்கு அமைத்திருந்த இந்து சமய அறநிலையத் துறைக்கு, ஒட்டுமொத்த அரங்குக்கான விருது வழங்கப்பட்டது. 
  • சுற்றுலா பொருள்காட்சி நிறைவு நாளான திங்கள்கிழமையன்று விருதினை அமைச்சா் டி.ஜெயக்குமாா் வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையா் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் அதனைப் பெற்றுக்கொண்டனா்.
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து இத்தாலி முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது இத்தாலி அரசு
  • கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து இத்தாலி முழுவதும் அவசரநிலை பிரகடன் அரசு செய்துள்ளது. மக்கள் பயணம் செய்வதற்கு நாடு முழுவதும் இத்தாலி அரசு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் இத்தாலியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel