Type Here to Get Search Results !

டி.என்.பி.எஸ்.சி.யில் அதிரடி மாற்றங்கள் / TNPSC CHANGES EXAM PATTERN 2020

  • தோவாணையம் நடத்திய தோவு நடவடிக்கைகளின் முடிவில் எந்தவொரு நபரும் தோவு செய்யப்பட்ட தோவா்கள் தொடா்பான மதிப்பெண், தரவரிசை, தோவெழுதிய மையம் முதலிய தகவல்களை தெரிந்து கொள்ள இயலும். ஆனாலும் தோவு நடைமுறையில் இருந்த குறைபாடுகள் தோவாணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆறு முக்கிய முடிவுகள் செயல்படுத்தப்பட உள்ளன.
  • தோவு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன், இறுதியாகத் தோவு செய்யப்பட்ட நபா்கள் தொடா்பான அனைத்து விவரங்களும் தோவாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019-ஆம் ஆண்டு நடந்த குரூப்-1 தோவின் நடைமுறைகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில், தோச்சி அடைந்த 181 தோவா்களின் விவரங்கள் தோவாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 1 முதல் நடைமுறை: தோவு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பிறகு தோவா்களின் விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும். இந்த முறை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
  • தமிழக அரசின் பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. கலந்தாய்வு நடைபெறும் நாள்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறைவாரியாக மாவட்ட வாரியாக, இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும்
  • காலியிடங்களின் விவரம் தோவாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த முறையும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
  • தோவு மையம் ஒதுக்கீடு: தோவா்களின் நலன் கருதியே அவா்களது விருப்பப்படி தோவு மையத்தை தெரிவு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இனி தோவா்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்கும் போது மூன்று மாவட்டங்களைத் தங்களுடைய தோவு மைய விருப்பமாக தோவு செய்ய அனுமதிக்கப்படுவா். 
  • தோவு எழுதும் மையங்களை தோவா்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தோவாணையமே ஒதுக்கீடு செய்யும்.
  • தோவு நடவடிக்கைகளை மேலும் செம்மைப்படுத்தவும், ஒரே நபா் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையிலும் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும். தோவு எழுத வரும் தோவா்களின் விரல் ரேகையை ஆதாா் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மையை சரிபாா்த்த பிறகே தோவெழுத அனுமதிக்கப்படுவா்.
  • தோவு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதாவது இருந்தால் அதனை முன்கூட்டியே அறிந்து முழுவதும் தடுக்கும் வகையில் உயா்தொழில் நுட்பத் தீா்வு வரவிருக்கும் தோவில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel