கொல்லிமலை அருகே வனப் பகுதியில் சோழர் காலச் சிற்பங்கள்
- கொல்லிமலைப் பகுதியில் செம்மேட்டிற்கு அருகேயுள்ள கரையான்காட்டுப்பட்டியை அடுத்த மலைப்பகுதியில் மூன்று அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ள சேட்டைத்தேவியும் மகிடாசுரமர்தினியும் சோழர் காலத்தவை என்றும் புதைசிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள மற்றொரு மகிடாசுரமர்த்தினியின் சிற்பம் பொதுக்காலம் 16 அல்லது 17ஆம் நூற்றாண்டுக்குரியதாகலாம் என்றும்.
- துர்க்கை என்றும் அறியப்படும் மகிடாசுரமர்த்தினியைப் பற்றிய விரிவான தரவுகள் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பதாகவும் கிடைத்துள்ள இரண்டு மகிடாசுரமர்த்தினிச் சிற்பங்களில் ஒன்று ஏறத்தாழ அவ்வர்ணனை ஒத்த வடிவமைப்பில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுயுள்ளார்.
- பிற்சோழர் காலத்ததாகக் கொள்ளத்தக்க இம்மகிடாசுரமர்த்தினி முன்கைகளில் வில்லும் அம்பும் கொண்டவராய் எருமைத்தலையின் மீது நின்றகோலத்தில் காட்சிதருகிறார். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி எனும் அகலமான கழுத்தணி, மார்புக்கச்சு, பட்டாடை பெற்றுள்ள அவரது பின்கைகளில் வாளும் கேடயமும். அம்மையின் பின்னால் அவரது வாகனமான அழகிய கலைமான். பொதுவாக மகிடாசுரமர்த்தினியின் பின்கைகளில் காணப்பெறும் சங்கும் சக்கரமும் இச்சிற்பத்தின் கைகளில் இடம்பெறாமை இதன் தனித்தன்மையை நிறுவுகிறது.
- புதைசிற்பமாக வடிக்கப்பட்டுள்ள மற்றொரு மகிடாசுரமர்த்தினி, நிற்கும் நிலையிலும் ஆடை, அணிகலன்களிலும் பிற்சோழர் காலப் படிமத்தை ஒத்திருந்தாலும் இரண்டுக்கும் இடையில் மூன்று சிறப்பான வேறுபாடுகளைக் காணமுடிகிறது. இச்சிற்பத்தின் முன்கைகள் கருவிகள் கொள்ளவில்லை.
- வல முன் கை காக்கும் குறிப்பில் அமைய, இட முன் கை உடல் ஒட்டி நெகிழ்ந்துள்ளது. வழக்கமான மகிடாசுரமர்த்தினி சிற்பங்கள் போல் இதுவும் பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டுள்ளது. மிக முக்கியமான வேறுபாடாக இதன் புதை வடிவத்தைக் குறிப்பிடலாம்.
- பொதுவாகச் சிற்பங்கள் அவை செதுக்கப்படும் கற்பலகையிலிருந்து புடைத்துக் காணப்படும். ஆனால், இது போன்ற சிற்பங்கள் பலகையைக் குடைந்து அதன் உட்புறத்தே அமைக்கப்படுகின்றன. பழங்குடி மரபுகளில் இருவகைச் சிற்பங்களுமே காணப்பட்டாலும் புதைசிற்பங்கள் நகர்ப்பகுதிகளைவிட பழங்குடி வாழ்விடங்களில் கூடுதலாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பொதுக் காலம் 10ஆம் நூற்றாண்டுக் கலையமைதியில் உள்ள சேட்டைத்தேவியின் சிற்பம் தனித்துக் காணப்படுகிறது. இத்தெய்வம் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளில் (தவ்வை, மாமுகடி) இடம்பெற்றுள்ளன. விஷ்ணுவின் தேவியான இலட்சுமியின் தமக்கையாக இவ்வம்மை கருதப்படுவதால் இவரை மூத்ததேவி என்றும் அழைப்பதுண்டு.
- இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில் பட்டாடை அணிந்து இருக்கையில் அமர்ந்துள்ள இவ்வம்மையின் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை தொடைமீதுள்ளது. மலர்ப்பதக்கம் பொருந்திய கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், மோதிரங்கள் ஆகியவற்றுடன் சுவர்ணவைகாக்ஷம் எனப்படும் பொன்னாலான மார்பணியும் அணிந்துள்ள இவ்வம்மைக்கு மார்புக்கச்சு இல்லை.
- அம்மையின் இருபுறத்தும் காணப்படும் உயரமான இருக்கைகளில் வலப்புறம் அவரது மகனான நந்திகேசுவரனும் இடப்புறம் மகள் அக்னிமாதாவும் சுகாசனத்தில் உள்ளனர். மாந்தன் என்றும் அழைக்கப்படும் நந்திமுக மகனின் வலக்கையில் தடி. சிற்றாடையும் பனையோலைக் குண்டலங்களும் சரப்பளியும் அணிந்துள்ள அவரது முகம் அம்மையை நோக்கியிருக்க, இடக்கை தொடைமீது.
- இடப்புறமுள்ள அக்னிமாதா இடக்கையைத் தொடைமீதிருத்தி, வலக்கையில் பழம் போன்றதொரு பொருளைக் கொண்டுள்ளார். அவரது கழுத்தில் முத்துச்சரம், இடையில் பட்டாடை. சேட்டைத்தேவிக்கும் நந்திகேசுவரனுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேவியின் காகக்கொடி காட்டப்பட்டுள்ளது.
கோவை என்.சி.சி., குழுவுக்கு மகுடம்! தர வரிசை பட்டியலில் முதலிடம்
- மாநில அளவில், தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) சிறந்த குழுவுக்கான தர வரிசை பட்டியலில், கோவையை சேர்ந்த, 2 டி.என்., பீரங்கி படை முதலிடம் பெற்றுள்ளது.
- தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான், நிகோபர் பகுதிகளை உள்ளடக்கிய, தேசிய மாணவர் படை இயக்குனரகம், சென்னையில் செயல்படுகிறது. இதன் கீழ், 58 குழுக்கள், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் தேசிய மாணவர் படைகள் உள்ளன. அதில், சிறப்பாக செயல்படும் குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் தர வரிசைப்படுத்தி, கவுரவிக்கப்படுகிறது.
- முதலிடம் நடப்பாண்டுக்கான தர வரிசை பட்டியலில், முதல் ஆறு ரேங்கில், கோவையை சேர்ந்த மூன்று என்.சி.சி., குழுக்கள் இடம் பெற்றிருக்கின்றன. 2 டி.என்., பீரங்கிப்படை குழு, 1,700க்கு, 1,158 புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்துள்ளது. இக்குழுவின் கீழ், 8 கல்லுாரிகள் மற்றும், 15 பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி., படைகள் உள்ளன.
முதல், 'புல்லட் புரூப் ஹெல்மெட்' இந்திய ராணுவ மேஜர் சாதனை
- இந்திய ராணுவ மேஜர் ஒருவர், உலகின் முதல், 'புல்லட் புரூப் ஹெல்மெட்' ஒன்றை உருவாக்கி உள்ளார்.இந்திய ராணுவத்தில், மேஜராக பணிபுரியும் அனுப் மிஸ்ரா, துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து, ராணுவ வீரர்களை பாதுகாக்கும் வகையில், ஏற்கனவே புல்லட் புரூப் ஜாக்கெட்டினை உருவாக்கியிருந்தார்.
- அடுத்து, புனேயில் உள்ள ஆர்மி மிலிட்டரி இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, துப்பாக்கி குண்டுகள் சீறி வரும் இருப்பிடத்தை கண்டறியும் கருவி உருவாக்கப்பட்டது.
- இது, 1௦௦ மீட்டர் தொலைவில், துப்பாக்கி குண்டுகள் சுடப்படும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் என்பதால், பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை செயலிழக்க செய்யும்.இப்போது அனுப், உலகின் முதல், 'புல்லட் புரூப் ஹெல்மெட்'டினை வடிவமைத்துள்ளார். இது, ஏ.கே.,47 துப்பாக்கி குண்டுகளின் தாக்குதலில் இருந்து தலையைப் பாதுகாக்கும்.
உலக மாரத்தான் போட்டி
- ஏழு கண்டங்களில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் உலக மாரத்தான் போட்டி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் தொடங்கியது.
- மோசமான தட்பவெப்பநிலை காரணமாக அண்டார்டிக்கில் இருந்து கேப் டவுனுக்கு மாற்றப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 15 நாடுகளைச் சேர்ந்த 27 வீரர்களும் 15 வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
- 7 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்தை முதலில் கடந்து ஆண்கள் பிரிவில் சீன வீரர் செங் ஹுவாங் மற்றும் பெண்கள் பிரிவில் டென்மார்க்கின் கிறிஸ்டினா மேட்சன் வெற்றிப் பெற்றனர்.
- இதை தொடர்ந்து அண்டார்டிக், ஆஸ்திரேலியாவின் பெர்த், துபாய், மாட்ரிட் மற்றும் போர்டாலெஸாவில் (Fortaleza) நடக்கும் மாரத்தான் போட்டிகள் மியாமியில் நிறைவு பெறுகிறது.