ரூ.50,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை
- கடலுார் மாவட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில், முதல்வர் இ.பி.எஸ்., அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றார்.
- அப்போது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன், கொள்கை ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- அதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனம், கடலுார் மாவட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைக்க முன் வந்துள்ளது.
ஃபோா்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப புதுமை மையம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்
- சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் எல்காட் நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஃபோா்டு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
- இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையில் நடந்த முதல் உலக முதலீட்டாளா் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்டது.
- அதனடிப்படையில், ஃபோா்டு நிறுவனம் சாா்பில் தொழில்நுட்ப புதுமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.
- இந்த மையமானது சுமாா் 1.5 லட்சம் சதுர அடிப் பரப்பில் ரூ.700 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன்; ரிசர்வ் வங்கி நிதி கொள்கை வெளியீடு
- மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், மூன்று நாட்கள் நடைபெற்ற, நடப்பு நிதியாண்டின் இறுதி நிதிக் கொள்கை குழு கூட்டம், நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.
- பொதுத் துறை வங்கிகளுக்கு, 'ரெப்போ' வட்டி விகிதத்தில், 1--15 நாட்களுக்கு குறுகிய கால கடன் வழங்கப்படுகிறது. இத்துடன், 1-3 ஆண்டுகளில் திரும்பப் பெறும் ஒப்பந்தப்படி, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், நீண்ட கால கடன் வழங்கும் திட்டம், பிப்.,15ல் அறிமுகப்படுத்தப்படும்.
- இதனால், வங்கிகள் குறைந்த வட்டியில் அதிக அளவில் கடன் வழங்க முடியும். முன்னேற்றம்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி இன்னும் போதிய அளவிற்கு வேகமெடுக்கவில்லை. உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே அதிக இடைவெளி நீடிக்கிறது.
- சமீபத்தில், சில துறைகளின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், இவ்வளர்ச்சி, இன்னும் பரவலாக வேண்டும்.இத்துடன், பணவீக்கத்தின் தாக்கத்தையும் கணித்த பின், 'ரெப்போ' வட்டி விகிதத்தை மாற்றமின்றி, 5.15 சதவீதமாக தொடர, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- இதற்கு, குழு உறுப்பினர்கள் ஆறு பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடப்பு, 2019 - -20ம் நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும்.
- இது, 2020 - -21ம் நிதியாண்டில், 6 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் அதிகரிக்கும்: இந்த வளர்ச்சி, முதல் அரையாண்டில், 5.5-6 சதவீதம்; இரண்டாம் அரையாண்டில், 6.2 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கும். இதற்கு, மக்களின் நுகர்வு பெருகி வருவது உள்ளிட்ட அம்சங்கள் மட்டுமின்றி, வெளிப்புற காரணிகளும் துணை புரியும். குறிப்பாக, ரபி பருவ சாகுபடி அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளதால், கிராமப்புற மக்களின் தேவையும், நுகர்வும் பெருகும்.
- சமீபத்தில், உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இது, வேளாண் துறைக்கு சாதகமாக இருக்கும் என்பதால், கிராமப்புற மக்களின் வருவாய் அதிகரிக்கும்.சர்வதேச வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை மறைந்து, சுமுக சூழல் உருவாகியுள்ளது. இதனால், நாட்டின் ஏற்றுமதி உயர்ந்து, முதலீடு பெருகும். அதே சமயம், 'கொரோனா' வைரஸ் தாக்கத்தால், சுற்றுலா பயணியர் வருகையும், சர்வதேச வர்த்தகமும் குறையக் கூடும்.
- கச்சா எண்ணெய் விலை உயர்வு, பால், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலையேற்றம், சேவைகள் துறையில் மூலப்பொருட்கள் செலவினம் அதிகரிப்பு போன்றவற்றால் பணவீக்கம் உயரும் என, தெரிகிறது.
- அதனால், நடப்பு 2019 - -20ம் நிதியாண்டில், ஜன., - மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், சில்லரை விலை பணவீக்கம், மறுமதிப்பீட்டில், 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இது, வரும் நிதியாண்டின், ஏப்., - செப்., வரையிலான முதல் அரையாண்டில், 5.4 - 5 சதவீதம்; மூன்றாவது காலாண்டில், 3.2 சதவீதமாக இருக்கும்.
தாவரவியல் பூங்காவில் 'தைத்திருவிழா' நாராயணசாமி துவக்கி வைக்கிறார்
- வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை பங்களிப்புடன், 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை, 'தைத்திருவிழா-2020' நடத்தப்படுகிறது.
- தாவரவியல் பூங்காவில் இன்று மாலை 5:00 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில், வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்குகிறார். முதல்வர் நாராயணசாமி துவக்கி வைக்கிறார்.
- வேளாண் துறை நாற்றங்கால், மதகடிப்பட்டு அரசு பழத்தோட்டப்பண்ணை, தாவரவியல் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட 25 ஆயிரம் செடிகள், மலர்கள், காய்கறி வகைகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
4 நாட்கள் பயணமாக டெல்லி வருகை தந்தார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
- இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்ற கோத்தபாய ராஜ்பக்சே முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகை தந்தார். டெல்லியில் பிரதமர் மோடியை கோத்தபாய ராஜபக்சே சந்தித்து பேசினார்.
- அப்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோத்தபாய உறுதி அளித்தார். அதன்பின்னர் இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தியா வருகை தந்தார்.
- அவரிடம் கோத்தபாய ராஜபக்சே அளித்த உறுதிமொழி குறித்து இந்திய தரப்பில் நினைவூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது 4 நாட்கள் பயணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே டெல்லி வருகை தந்துள்ளார்.
மிக உயரமான அகோன்காகுவா சிகரத்தின் உச்சியை அடைந்த இந்திய சிறுமி
- ஆந்திராவை சேர்ந்த காம்யா கார்த்திகேயன் ஏற்கனவே ரூப்குண்ட், சந்திரசீலா போன்ற பல்வேறு மலையேற்றங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், 6,960 மீட்டர் உயரமுள்ள அகோன்காகுவா சிகரத்தை தனது தந்தையுடன் சேர்ந்து ஏறியுள்ளார்.
- 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் முதலில் இவருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்பு நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்ற பிறகு இந்த முயற்சியில் ஈடுபட்டார்.