முசிறி அருகே சோழர் கால மண் பானைகள், நீர் குடுவைகள், ஓவிய குறியீடுகள் கண்டுபிடிப்பு
- முசிறி அருகே சோழர் கால பொருட்களின் தடயங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்போது அங்கு முற்காலத்தில் பழமையான தமிழர் நாகரிகம் இருந்துள்ளதை உறுதி செய்வதற்கான சான்று கிடைத்துள்ளது.
- முற்கால மக்கள் பயன்படுத்திய கறுப்பு, சிவப்பு மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் மற்றும் பழங்காலத்தில் பெண்கள் அணிந்த யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல், சங்கு வளையல்கள், பவளமணி, வெண்ணிற பவளம் போன்றவையும் கிடைத்துள்ளன. மக்கள் ஆடை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட நூல் கோர்க்கும் மணிகள் கிடைத்துள்ளன. இதனால் இங்கு வாழ்ந்த மக்கள் நெசவுத்தொழில் செய்து வந்துள்ளனர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.மேலும் இங்கு இரும்பு உருக்காலை இருந்ததற்கான ஆதாரமாக இரும்புக் கழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மண் பானைகள், கிண்டி என்ற நீர் குடுவையின் உடைந்த பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் மண்பாண்டத் தொழிலை கலைநயத்தோடு செய்யும் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
- இங்கு உள்ள சில இடங்களில் தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. கறுப்பு, சிவப்பு பானை ஓட்டில் ஓவியக் குறியீடு, தராசு உருவமும் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. சில பானை ஓடுகள் வழவழப்பாகவும் எளிதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
- குருவம்பட்டி சோழ நாட்டின் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. நதிக்கரையில் நாகரிகங்கள் பெருமளவு வளர்ந்து உள்ளதை இது உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்றுள்ள மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட சான்றுகள் ரோமானிய மண்பாண்ட ஓடுகளோடு ஒப்பிடக்கூடிய வகையில் உள்ளது. அதனால் ரோமானியர்களோடு வணிக தொடர்பு இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
- ஒரு காலத்தில் இப்பகுதியில் நகர நாகரிகமாக மக்கள் வாழ்ந்திருக்கலாம். மேலும் மிகப்பெரிய அளவில் தொழில் கூடங்களும், கட்டமைக்கப்பட்ட வீடுகளும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பெரிய அளவிலான செங்கல் கட்டுமான அமைப்பு கொண்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைப்பு: பிரதமர் தகவல்
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டு விட்டதாக லோக்சபாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- அயோத்தியில் வஹ்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா' என பெயரிடப்பட்டுள்ளது.
- ராமர்கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞரும், தமிழகத்தை சேர்ந்தவருமான பராசரன், அறக்கட்டளை தலைவராக செயல்படுவார் என தெரிகிறது.
- 'ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' அறக்கட்டளையில், தலித் உறுப்பினர் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக இருப்பர். என தெரிவித்திருந்தார்.
- மேலும், அறக்கட்டளையின் அலுவலகம் ஆர் - 20, கிரேட்டர் கைலாஷ் பகுதி-1, புதுடில்லி என்ற முகவரியில் செயல்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தும் வகையில் வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் பிஎம்சி வங்கியில் நிகழ்ந்ததுபோன்ற முறைகேடுகள் எதிா்காலத்தில் நிகழாமல் தடுக்கப்படும்.
- இந்தியாவில் 1,540 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றில் 8.60 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 லட்சம் கோடி பொதுமக்களின் சேமிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கூட்டுறவு வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரியை நியமிப்பதற்காக சில தகுதிகள் வரையறை செய்யப்படவுள்ளன. இந்த நியமனங்களுக்கு இந்திய ரிசா்வ் வங்கியிடம் (ஆா்பிஐ) அனுமதியும் பெற வேண்டும்.
- ஆா்பிஐ வழிகாட்டுதலின்படி கூட்டுறவு வங்கிகளின் கணக்குத் தணிக்கையும் செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளின் பிரச்னை ஏற்படும்போது அதன் முழுக்கட்டுப்பாட்டையும் ஆா்பிஐ எடுத்துக் கொள்ளும்.
- இதுபோன்று கூட்டுறவு வங்கி முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதற்காக வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
- பட்ஜெட்டின்போது வங்கி வைப்பு நிதிக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டது. இப்போது வங்கி வாடிக்கையாளா்களின் நலன் காக்கும் மற்றொரு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது என்றாா்.
- மகாராஷ்டிர மாநிலம் வாதாவன் பகுதியில் ரூ.65,544 கோடியில் பிரமாண்டமான துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதுதவிர, 5 இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐடி) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை வழங்கவும், தனியாா் - அரசு பங்களிப்புடன் செயல்படும் 5 ஐஐடி-க்கள் குறிப்பிட்ட துறைகளில் பிடெக், எம்டெக், முனைவா் பட்டங்களை அளிக்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக ஐஐடி சட்டத் திருத்த மசோதா 2020 கொண்டுவரப்படவுள்ளது.
5வது மாநிலமாக ம.பி., சட்டசபையிலும் சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம்
- கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் மாநிலங்களை தொடர்ந்து 5வதாக மத்திர பிரதேச மாநில சட்டசபையில் சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அந்த தீர்மானத்தில், சிஏஏ.,வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை மீறியதாகும். இச்சட்டம் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.
- என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலும் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும் இந்த சட்டத்தால் ம..பி.,யில் பரவலாக போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டங்களால் அமைதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ம.பி.,யில் ஆளும் காங்., சார்பில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது
இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையமாகிறது உத்தர பிரதேசம்
- உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற, டெஃப்எக்ஸ்போ 2020 (DefExpo 2020) எனப்படும் பாதுகாப்பு தளவாட கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: புதிய பாதுகாப்பு சவால்களைப் பார்த்து, பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் 25 தயாரிப்புகளை உருவாக்குவதே நமது நோக்கம்.
- பீரங்கித் துப்பாக்கிகள், விமானம் தாங்கி கப்பல், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், லகுரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் போன்றவை இதுபோன்ற பல உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
- இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் டைனமடிக் டெக்னாலஜிஸ் லிமிடெட் ஆகியவை இன்று DefExpo 2020ல் IAIஇன் ஆளில்லா ஏரியல் வாகனங்களை சந்தைப்படுத்துதல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- ஐந்து நாள் மெகா கண்காட்சியில் 70 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 172 வெளிநாட்டு ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 856 இந்திய பாதுகாப்பு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும்.
இந்திய சா்வதேச ஜனநாயக, தோதல்மேலாண்மை கழகத்தில் டி.என்.சேஷன் இருக்கை
- இந்திய தோதல் ஆணையத்தில் பல்வேறு சீரமைப்புகளைச் சோந்த முன்னாள் தலைமை தோதல் ஆணையாளா் டி.என்.சேஷனின் நினைவாக தனி இருக்கை அமைக்கப்பட உள்ளது.
- தில்லியில் உள்ள இந்திய சா்வதேச ஜனநாயகம் மற்றும் தோதல் மேலாண்மை கழகத்தில் தனி இருக்கை அமைக்கப்பட உள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதித் துறை இயக்குநர் பொறுப்பேற்பு
- என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதித் துறை இயக்குநராக ஜெய்குமாா் ஸ்ரீனிவாசன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாக்பூா் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்ற ஜெய்குமாா் ஸ்ரீனிவாசன், இந்திய விலை - மேலாண்மை கணக்கியல் கல்வி நிலையத்தின் கௌரவ உறுப்பினராக உள்ளாா்.
- மேலும், மகாராஷ்டிர மாநில மின் பகிா்மானக் கழகத்தில் பணியாற்றியுள்ள இவா், மஹூகுஜ் கலோரி நிறுவனம், யூசிஎம் நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பகுதி நேர இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.
கர்நாடகாவில் அரசு சேவைகளை வீட்டு வாசலில் வழங்கும் 'ஜனசேவகா' திட்டம் துவக்கம்
- குடும்ப அட்டைகள், மூத்த குடிமக்கள் அடையாள மற்றும் சுகாதார அட்டைகள் போன்ற பல்வேறு அரசு ஆவணங்களை வீட்டுக்கே வந்து வழங்கும் 'ஜனசேவகா' திட்டத்தை, கர்நாடக அரசு ஒரு சில நகராட்சி வார்டுகளில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தியது.
- முதலமைச்சர் யெடியூரப்பாவால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 11 துறைகள் சார்ந்த 53 சேவைகள் உள்ளன. 'சகலா திட்டத்தின் கீழ் வரும் ஜனசேவகா என்பது வீட்டு வாசலில் அரசாங்கத் திட்டங்களின் நன்மைகளைப் பெறும் ஒரு அம்சமாகும்.
- 'இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் கர்நாடகக் குடிமக்களின் வாழ்க்கையை இலகுவாக்குதே எங்கள் குறிக்கோள்' என்று முதல்வர் கூறினார்.
- சகலா திட்டமானது, அரசாங்க சேவைகள் குறித்த காலத்தில் மக்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான திறனை வளர்ப்பதற்காக புதுமையான மற்றும் திறமையான மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்கப்படுகிறது.
பாலியல் (ம) POCSO வழக்குகளுக்கு என புதிய 'திஷா' காவல் நிலையம்
- 'திஷா சட்டத்தை' இயற்றிய பின்னர், ஆந்திர மாநில அரசு குறிப்பாக கற்பழிப்பு மற்றும் POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) வழக்குகளை முன்னுரிமையுடன் கையாள்வதற்காக மாநிலம் முழுவதும் "திஷா காவல் நிலையங்களை" தொடங்குவதன் மூலம் தனது உறுதியான தீர்மானத்தைக் காட்டுகிறது.
- பிப்ரவரி 7 முதல் `திஷா காவல் நிலையம் 'ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமுந்திரி என்றும் அழைக்கப்படும் ராஜமஹேந்திரவரத்தில் செயல்பாட்டுக்கு வரும்.
- முதல்வர் YS.ஜகன் மோகன் ரெட்டி காவல் நிலையத்தை திறந்து வைப்பார், மேலும் ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள 1097 காவல் நிலையங்களை இணைக்கும் வீடியோ மாநாடு நடைபெறும். மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 18 திஷா காவல் நிலையங்கள் ஒரு கட்டமாக நிறுவப்படும்.