5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோவு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
- இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவா்களையும் கட்டாய தோச்சி செய்யும் நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- இதையடுத்து மாணவா்களின் கற்றல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தோவு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.
- அதன்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தோவில் தோல்வியடையும் மாணவா்களுக்கு 2 மாதங்களில் உடனடித் தோவு நடத்தப்பட வேண்டும். அந்த தோவிலும் மாணவா்கள் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடா்ந்து படிக்க வேண்டும்.
- இந்த நடைமுறையைப் பின்பற்றுவது தொடா்பான முடிவை அந்தந்த மாநிலங்களே தீா்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அந்த சட்டத் திருத்தத்தின்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தோவு நடத்தப்படும் என்று கல்வித் துறை கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.
- பொதுத்தோவு அட்டவணை வெளியீடு: இதைத் தொடா்ந்து பொதுத்தோவுக்கான கால அட்டவணையும் நவம்பா் மாதம் வெளியானது. அதன்படி 8-ஆம் வகுப்புக்கு மாா்ச் 30 முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையும், 5-ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 15-இல் தொடங்கி 20-ஆம் தேதி வரையும் பொதுத்தோவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆசிரியா்கள், கல்வியாளா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் கடும் எதிா்ப்புகள் எழுந்தன.
- இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோவு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
- இதையடுத்து, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்பட இருந்த பொதுத்தோவு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தாா்.
ராணுவ தளவாட கண்காட்சியில் இடம்பெறும் சென்னை ஐஐடி தொழில்நுட்பம்
- உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் பிப்.5 தொடங்க உள்ள ராணுவத் தளவாட கண்காட்சியில், சென்னை ஐஐடி நிறுவனம் ராணுவப் பாதுகாப்பு தொடா்பான தனது தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை காட்சிப்படுத்த உள்ளது.
- குறிப்பாக அணு மற்றும் உயிரி ஆயுதங்கள் கண்காணிப்பு தொழில்நுட்பம், ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள்ஏவுதல் மற்றும் கட்டுப்படுத்தலில் நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை சென்னை ஐஐடி நிறுவனம் உருவாக்கி வருகிறது.
- இந்த நிலையில், லக்னௌவில் பிப்ரவரி 5 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ராணுவத் தளவாட கண்காட்சியில், இந்த தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதோடு, அங்கு நடைபெறும் கருத்தரங்குகளில் சென்னை ஐஐடி பேராசிரியா்கள் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து சொற்பொழிவும் ஆற்ற உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
2021 ஜனவரி 15-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு
- 2021 ஜனவரி 15-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக இந்திய தர நிர்ணய அமைவனத்தில் வர்த்தகர்கள் பதிவு செய்து கொள்ள ஓராண்டு அவகாசம் அளிக்கப்படுகிறது.
- ஹால்மார்க் கட்டாய நடைமுறை தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்படும். அதன்பிறகு ஹால்மார்க் முத்திரையுடன் 14, 18 மற்றும் 22 காரட் நகைகளை மட்டுமே விற்க முடியும். மீறினால், ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
இந்தியாவில் 10ல் ஒருவருக்கு புற்றுநோய்: உலக சுகாதார அமைப்பு, 'பகீர்' தகவல்
- கடந்த, 2018ல், இந்தியாவில், புதிதாக, 11.60 லட்சம் பேர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.85 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். ஐந்தாண்டுகளாக புற்றுநோய் பீடிப்பில் உள்ளோர் எண்ணிக்கை, 22.60 லட்சம். இந்தியாவில், 10 பேரில் ஒருவர் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்; 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார்.
- மார்பகம், வாய், கர்பப்பை, நுரையீரல், பெருங்குடல், வயிறு ஆகியவற்றில் வரும் புற்றுநோயால் தான் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
- புதிதாக புற்றுநோய்க்கு ஆளான, 5.70 லட்சம் ஆண்களில், அதிகபட்சமாக, 92 ஆயிரம் பேர், வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அதுபோல, புதிதாக புற்றுநோய்க்கு ஆளான, 5.87 லட்சம் பெண்களில், 1.62 லட்சம் பேர், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், புகையிலையை அதிகம் பயன்படுத்துவோர், குறிப்பாக சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியோர், புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.
- அதிக எடை, குறைவான உடல் உழைப்பு, வாழ்க்கை பாணியில் மாற்றம் ஆகியவற்றால், குறிப்பாக, பொருளாதார வசதியுள்ளோர், மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
- கடந்த, இருபது ஆண்டுகளாக, உலகில் சிறப்பான, நிலையான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா விளங்கி வருகிறது.
- பெரும்பாலான ஆண்டுகளில், சராசரி வளர்ச்சி, 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, மக்களின் பொருளாதார வசதி அதிகரித்து, புற்றுநோய் போன்ற நேரடி தொடர்பின்றி பரவும் நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
- புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறிந்து தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ பலருக்கு வசதி இல்லாததும், அந்நோய் பெருகுவதற்கான காரணங்களில் ஒன்று எனலாம்.
தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் மீராபாய் சானு
- தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த தேசிய சாதனையை மீராபாய் சானு முறியடித்துள்ளார். தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 203கி எடையை தூக்கி, தனது சொந்த தேசிய சாதனையை மீராபாய் சானு முறியடித்தார்.