Type Here to Get Search Results !

9th FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


1,100 ஏக்கரில், ஆசியாவிலேயே பெரிய பூங்கா அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • ஆசியாவிலேயே பெரியதாக, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,100 ஏக்கரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 
  • ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவில் மருத்துவக் கல்லூரி கட்டவும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
  • தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்நோக்கு பூங்காவாக இருக்கும்.
  • சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். 3 பிரிவுகளாக அமையவுள்ள பூங்காவின் முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைகிறது.
ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி
  • தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத் அருகே உலகின் மிக பெரிய தியான மையத்தை கடந்த ஜனவரி 28 ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். 
  • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கன்ஹா சாந்திவனம் என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய தியான மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் சுமார் 30 ஏக்கரில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தியான பயிற்சி பெற முடியும்.ஹார்ட்புல்னஸ் தியான இயக்கம் சார்பில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தியான பயிற்சிகளை இலவசமாக நடத்தி வருகிறது. 
  • ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்க சமையலறை உள்ளது, இவை அனைத்தும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீராவியில் சமைக்கப்படுகின்றன. 
  • மழை சேகரிப்பு வசதி ஆசிரமம் போதுமான மழைப்பொழிவு இல்லாத தரிசு நிலத்தில் அமைந்திருப்பதால், நீரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஏழு செயற்கை குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
  • ஆசிரம மேற்கூரைகள் மழை நீர் சேகரிப்பு குழாய் இணைக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் பெரும்பகுதியில் சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது.ஆசிரம வளாகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 180 மாணவர்களைக் கொண்ட பள்ளி செயல்பட்டு வருகிறது. 
  • ஹார்ட்ஃபுல்னெஸ் கற்றல் மையம் என்று அழைக்கப்படும் இந்த பள்ளி 5,000 மாணவர்களுக்கான வசதியாக விரிவாக்கப்பட்டு வருகிறது என்று ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் 502 படுக்கைகள் கொண்ட ஆரோக்கிய மையமும் வளாகத்தில் வருகின்றன.
  • இந்த அமைப்பு பல அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைத் தவிர, தேசிய போலீஸ் அகாடமி, மாநில காவல் துறைகள் மற்றும் மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளான பி.எஸ்.எஃப், சி.ஐ.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப் மற்றும் எஸ்.எஸ்.பி. ஆகிய துறைகளை சார்ந்தவர்களுக்கு தியானத்தை கற்பிப்பதன் மூலம் அவர்களின் உள் வலிமையில் கவனம் செலுத்த நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்,என தியான மையத்தை சேர்ந்த ஒருவர் கூறினார்.



தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் ; புதிய திட்டத்துக்கு அரசு ஒப்புதல்
  • சொத்து விற்பனை பதிவு முடிந்த பின், தானியங்கி முறையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் நடைமுறைக்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையை, வருவாய் துறை பிறப்பித்துள்ளது. 
  • தமிழகத்தில், வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் வாங்கியோரிடம், பத்திரம் பதிவு செய்யும் போது, பட்டா மாறுதலுக்கும் விண்ணப்பம், கட்டணம் பெறப்படுகிறது. ஆனால், பதிவுத்துறை அளிக்கும் விபரங்கள் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, தாலுகா அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. 
  • உத்தரவுபத்திர பதிவுக்கான, 'ஸ்டார் - 2.0' சாப்ட்வேர், வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' சாப்ட்வேருடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், சொத்து விற்பனை பத்திரப்பதிவு விபரங்கள் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றத்தை, தானியங்கி முறையில் செயல்படுத்த முடியும். இதை முறையாக செயல்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்: முதல்வர்
  • டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் இ,பி,எஸ்., அறிவித்துள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தரப்படாது எனவும் கூறியுள்ளார்.
  • தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது. விவசாயிகளின் வேதனையை புரிந்து கொண்டு இதனை அறிவிக்கிறேன். 
இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணி
  • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி சாம்பியன் பட்டம் பெற்றதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
  •  முதன்முதலாக வங்கதேச அணி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel