Type Here to Get Search Results !

10th FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலைவர் நியமனம்
  • மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலை வராக, துரை ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில், மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்கும், மாநில மனித உரிமைகள் ஆணையம், சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக மீனாகுமாரி இருந்தார். 
  • அவரது பதவிக்காலம், 2019 நவம்பரில் முடிந்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாக, தலைவர் பதவி காலியாக இருந்த நிலை யில், மனித உரிமைகள் ஆணையத்தின் நீதித்துறை உறுப்பினராக இருக்கும், துரை ஜெயச்சந்திரன், பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
எஸ்.சி., - எஸ்.டி., சட்டத் திருத்தம் செல்லும்
  • எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து, 2018ல், பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும். மேலும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதற்கு முன் விசாரணையோ, போலீஸ் உயர் அதிகாரியின் அனுமதியோ தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தாலே, அந்த புகாருக்கு உள்ளானோரை கைது செய்யும் வகையில், அந்த சட்டத்தில்விதிமுறைகள் இருந்தன.தீர்ப்புஇந்த சட்ட விதிமுறைகளால், அப்பாவி மக்கள்பாதிக்கப்படுவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'உயர் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல், அரசு அதிகாரிகளையும், போலீஸ் உயர் அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் பொதுமக்களையும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கூடாது' என, 2018, மார்ச்சில் தீர்ப்பளித்தது.
  • இதன்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், யாரையும் உடனடியாக கைது செய்ய முடியாது. உரிய விசாரணைக்கு பின்பே கைது செய்ய முடியும் என்ற நிலைஉருவனாது.
  • இந்த தீர்ப்பை எதிர்த்து, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினர், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, இந்த சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்தது. ஏற்கனவே இருந்த கடுமையான விதிமுறைகள் மீண்டும் சேர்க்கப்பட்டன.
  • இதன்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டாலே, விசாரணையின்றி கைது செய்ய முடியும் என சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மத்தியஅரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, கடந்த ஆண்டுவிசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே அளித்த தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  • 'வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், புகார் அளித்தாலே, கைது செய்யலாம். இந்த விவகாரத்தில், ஏற்கனவே இருந்த விதிமுறை தொடரும்' என, உத்தரவிட்டனர்.



தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 5.3% உயர்ந்துள்ளது
  • தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 5.3% உயர்ந்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2011-12-ல் 2.3%-ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை 2017-18-ல் 7.6%-ஆக உயர்ந்துள்ளது. 
  • தேசிய சராசரியை விட தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகம் என மத்திய அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் விமானம் சாதனை
  • உலகிலேய அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாதனை படைத்துள்ளது.
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் எப்., கென்னடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்த போயிங் 747 விமானம் மணிக்கு 1290 கி.மீ., வேகத்தில் பறந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை, 5 ஆயிரத்து 600 கி.மீட்டர் தூரத்தை 4 மணி 56 நிமிடங்களில் அடைந்தது. 
  • இதற்கு அடுத்தபடியாக விர்ஜின் அட்லாண்டிக் ஏர்பஸ் விமானம் ஒன்று ஒரு நிமிடம் தாமதமாக லண்டன் விமான நிலையத்தை அடைந்தது.
  • இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை தற்போது கடும் புயல் ஒன்று மிரட்டி வருகிறது. இப்புயலின் பிடியிலிருந்து தப்பிக்கவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் லண்டனுக்கு அதி வேகமாக விமானத்தை இயக்கி உள்ளதாக தெரிகிறது. 
  • இதற்கு முன் சாதனையாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு 5 மணி 13 நிமிடங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துள்ளது.
ஆஸ்கர் விருதுகள் 2020
  • அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமி சார்பில், உலக சினிமாவின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும். அகாதெமியின், 92வது விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது. 
  • இதில், தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல இயக்குனர் போங்க் ஜோனா ஹூ இயக்கியுள்ள, பாரசைட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. 
  • ஆஸ்கர் வரலாற்றில், ஆங்கிலம் அல்லாத, மற்ற மொழிப் படம் சிறந்தப் படமாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், நான்கு விருதுகளை வென்று, இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்தது.
  • சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த சர்வதேச திரைப்படம் என, மேலும், மூன்று விருதுகளையும் இந்தப் படம் வென்றுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு முன்பாக, கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும், பாரசைட் வென்றுள்ளது.
  • சிறந்த நடிகர் ஜோக்கர் படத்தில் நடித்துள்ள, ஹாலிவுட் நடிகர் வாகின் பீனிக்ஸ், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். நான்காவது முறையாக, விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அவர், இந்தாண்டு, பாப்டா, கோல்டன் குளோப், ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் ஆகியவற்றின் விருதுகளையும் வென்றார். முதல் முறையாக, ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
  • அமெரிக்காவில் வெளியாகும் காமிக்ஸ் புத்தக கதாபாத்திரமான, ஜோக்கர் வேடத்தில் நடித்த, ஹீத் லெட்ஜர், 2008ல், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் வென்றார். தற்போது, பீனிக்ஸ், சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
  • சிறந்த நடிகை மறைந்த அமெரிக்க பாடகி, நடிகை ஜூடி கார்லண்ட் வேடத்தில், ஜூடி படத்தில் நடித்துள்ள, ரேனி ஜெல்வெஜர், சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இது, ஜெல்வெஜர் பெறும் இரண்டாவது விருதாகும். இவர், 15 ஆண்டுகளுக்கு முன், சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.
  • சிறந்த துணை நடிகர் கடந்த, 2014ல், சிறந்த படத்துக்கான ஆஸ்கரை, தயாரிப்பாளராக வென்றுள்ள, பிரபல ஹாலிவுட் நடிகர், பிராட் பிட், முதல் முறையாக, நடிப்புக்காக விருது வென்றுள்ளார். 
  • ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் படத்துக்காக, அவருக்கு, சிறந்த துணை நடிகர் விருது கிடைத்து உள்ளது.
  • சிறந்த படம் - பாராசைட்
  • சிறந்த இயக்குநர் - போங் ஜூன் ஹோ (பாராசைட்)
  • சிறந்த நடிகர் - ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
  • சிறந்த நடிகை - ரெனீ ஜெல்வேகர் (ரூடி)
  • சிறந்த ஆவணப்படம் - அமெரிக்கன் பேக்டரி
  • சிறந்த வெளிநாட்டு படம் - பாராசைட் (கொரியன்)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் - டாய் ஸ்டோரி-4
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஹேர் லவ்
  • சிறந்த ஆவண குறும்படம் - லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்
  • சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - தி நெய்பர்ஸ் விண்டோ
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டீக்கின்ஸ் (1917)
  • சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
  • சிறந்த திரைக்கதை - போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)
  • தழுவல் திரைக்கதை - டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)
  • சிறந்த பின்னணி இசை - ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)
  • சிறந்த பாடல் - லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)
  • சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
  • சிறந்த துணை நடிகை - லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)
  • சிறந்த ஒப்பனை - கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)
  • ஆடை வடிவமைப்பு - ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)
  • தயாரிப்பு வடிவமைப்பு - பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
  • சிறந்த ஒலி படத்தொகுப்பு - டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
  • ஒலி கோர்ப்பு - மார்க் டெய்லர் (1917)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel