- அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமி சார்பில், உலக சினிமாவின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும். அகாதெமியின், 92வது விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது.
- இதில், தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல இயக்குனர் போங்க் ஜோனா ஹூ இயக்கியுள்ள, பாரசைட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
- ஆஸ்கர் வரலாற்றில், ஆங்கிலம் அல்லாத, மற்ற மொழிப் படம் சிறந்தப் படமாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், நான்கு விருதுகளை வென்று, இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்தது.
- சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த சர்வதேச திரைப்படம் என, மேலும், மூன்று விருதுகளையும் இந்தப் படம் வென்றுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு முன்பாக, கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும், பாரசைட் வென்றுள்ளது.
- சிறந்த நடிகர் ஜோக்கர் படத்தில் நடித்துள்ள, ஹாலிவுட் நடிகர் வாகின் பீனிக்ஸ், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். நான்காவது முறையாக, விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அவர், இந்தாண்டு, பாப்டா, கோல்டன் குளோப், ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் ஆகியவற்றின் விருதுகளையும் வென்றார். முதல் முறையாக, ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
- அமெரிக்காவில் வெளியாகும் காமிக்ஸ் புத்தக கதாபாத்திரமான, ஜோக்கர் வேடத்தில் நடித்த, ஹீத் லெட்ஜர், 2008ல், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் வென்றார். தற்போது, பீனிக்ஸ், சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
- சிறந்த நடிகை மறைந்த அமெரிக்க பாடகி, நடிகை ஜூடி கார்லண்ட் வேடத்தில், ஜூடி படத்தில் நடித்துள்ள, ரேனி ஜெல்வெஜர், சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இது, ஜெல்வெஜர் பெறும் இரண்டாவது விருதாகும். இவர், 15 ஆண்டுகளுக்கு முன், சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.
- சிறந்த துணை நடிகர் கடந்த, 2014ல், சிறந்த படத்துக்கான ஆஸ்கரை, தயாரிப்பாளராக வென்றுள்ள, பிரபல ஹாலிவுட் நடிகர், பிராட் பிட், முதல் முறையாக, நடிப்புக்காக விருது வென்றுள்ளார்.
- ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் படத்துக்காக, அவருக்கு, சிறந்த துணை நடிகர் விருது கிடைத்து உள்ளது.
- சிறந்த படம் - பாராசைட்
- சிறந்த இயக்குநர் - போங் ஜூன் ஹோ (பாராசைட்)
- சிறந்த நடிகர் - ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
- சிறந்த நடிகை - ரெனீ ஜெல்வேகர் (ரூடி)
- சிறந்த ஆவணப்படம் - அமெரிக்கன் பேக்டரி
- சிறந்த வெளிநாட்டு படம் - பாராசைட் (கொரியன்)
- சிறந்த அனிமேஷன் திரைப்படம் - டாய் ஸ்டோரி-4
- சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஹேர் லவ்
- சிறந்த ஆவண குறும்படம் - லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்
- சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - தி நெய்பர்ஸ் விண்டோ
- சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)
- சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டீக்கின்ஸ் (1917)
- சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
- சிறந்த திரைக்கதை - போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)
- தழுவல் திரைக்கதை - டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)
- சிறந்த பின்னணி இசை - ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)
- சிறந்த பாடல் - லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)
- சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
- சிறந்த துணை நடிகை - லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)
- சிறந்த ஒப்பனை - கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)
- ஆடை வடிவமைப்பு - ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)
- தயாரிப்பு வடிவமைப்பு - பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
- சிறந்த ஒலி படத்தொகுப்பு - டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
- ஒலி கோர்ப்பு - மார்க் டெய்லர் (1917)
ஆஸ்கர் விருதுகள் 2020 / OSCAR AWARDS 2020
February 11, 2020
0
Tags