Type Here to Get Search Results !

23rd FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சாஸ்த்ரா பல்கலை.க்கு பிரிட்டனின் உயர்நிலைத் தர அங்கீகாரம்
  • சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைகழகத்தின் 12 பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு, பிரிட்டனின் ஐஇடி எனப்படும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் உயர்ந்தபட்ச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
  • சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தனது தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வளாகங்களுக்காக 2015-இல் ஐஇடியின் அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தது. 
  • இதைத் தொடர்ந்து, சாஸ்த்ராவின் எலக்டிரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், கெமிக்கல் மற்றும் பயோடெக்னாலஜி ஆகிய புலங்களைச் சேர்ந்த 12 பட்டப்படிப்புகளுக்குத் தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
  • ஒன்பது ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தால் 2020 முதல் 2028- ஆம் ஆண்டு வரை, பட்டப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மிக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இந்த அங்கீகாரம் மாணவர்களுக்கு உலகளவில் வேலைவாய்ப்புக்கும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் உயர் படிப்புக்கு எளிதில் ஏற்கப்படுவதற்கும், பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளவும் மற்றும் பரிமாற்றத்துக்கும் பெரிய அளவில் பயன்படும்.
  • இந்த அங்கீகார செயல்முறையை முடித்திருப்பதன் மூலம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஐஇடியின் 85-க்கும் அதிகமான உலகளாவிய கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
சீருடைப் பணியாளா் தோவாணைய தலைவராக டி.ஜி.பி. சுனில்குமாா் நியமனம்
  • ஏ.டி.ஜி.பி.-யாக இருந்து டி.ஜி.பி. பதவி உயா்வு பெற்ற சுனில்குமாா், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவாணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • ஏ.டி.ஜி.பி.-யாக இருந்து டி.ஜி.பி. பதவி உயா்வு பெற்ற சுனில் குமாா் சிங், சிறைத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • ஐ.ஜி.-யாக இருந்து ஏ.டி.ஜி.பி.-யாக பதவி உயா்வு பெற்ற டேவிட்சன் தேவாசீா்வாதம், மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • அதுபோல ஐ.ஜி.-யாக இருந்து ஏ.டி.ஜி.பி.-யாக பதவி உயா்வு பெற்ற எஸ்.என்.சேஷசாயி, ஈரோடு சிறப்பு அதிரடிப் படை ஏ.டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • சிறைத் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த ஏ.டி.ஜி.பி.அபாஷ் குமாா், சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு ஏ.டி.ஜி.பி.-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.



கொரோனா பாதிப்பு - மிகப்பெரிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார் சீன அதிபர்
  • கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது சீனாவின் 'மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை' என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்.
  • இதுவரை, அந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,440ஐ தாண்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 77,000 என்பதைத் தொட்டுள்ளது.
  • இந்த வைரஸ் கோவிட்-19 என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்த ஒரு சந்திப்பில் கலந்துகொண்டபோது இவ்வாறு தெரிவித்தார் சீன அதிபர்.
ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ்: சரத் கமல்-சத்யனுக்கு வெள்ளிப் பதக்கம்
  • ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சரத்கமல்-சத்யன் ஞானசேகரன் இணை அபாரமாக ஆடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனா்.
  • இதில் 5-11, 9-11, 11-8, 9-11 என்ற கேம் கணக்கில் போராடி தோல்வியுற்றது சரத்-சத்யன் இணை.
  • இறுதிச் சுற்றுக்கு நுழையும் முன்னா் உலகின் 6, 12, 17--ஆம் நிலை வீரா்களை வீழ்த்தியிருந்தனா்.
  • கலப்பு இரட்டையா் பிரிவில் சரத்கமல்-மனிகா பத்ரா இணை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
சுவீடன் ஜூனியர் ஓபன் டேபிள் டென்னிஸ் : வெண்கலப்பதக்கம் வென்ற சென்னை வீராங்கனை
  • சுவீடன் நாட்டின் ஒரிப்ரோ நகரில் நடைபெற்று வரும் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் மினி கேடட் பிரிவில் களம் இறங்கிய 10 வயதான சென்னை வீராங்கனை எம்.ஹன்சினி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டினார்.
  • தொடர்ந்து அரைஇறுதி ஆட்டத்தில் 12-10, 9-11, 5-11, 8-11 என்ற செட் கணக்கில் லுலியா புகோவ்கினாவிடம் (ரஷியா) போராடி தோல்வி அடைந்தார். அரைஇறுதிக்கு வந்ததன் மூலம் ஹன்சினிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.



ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் ஜிதேந்தர் குமாருக்கு வெள்ளிப்பதக்கம்
  • டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி நாளான நேற்று இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் 74 கிலோ உடல் எடைப்பிரிவு ஆட்டத்தில் மங்கோலியா வீரர் ஜன்டான்புட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 
  • ஆனால் இறுதி ஆட்டத்தில் ஜிதேந்தர் 1-3 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் டேனியர் காசனோவிடம் தோற்றதால் வெள்ளிப்பதக்கத்துடள் வெளியேறினார்.
  • ஆனால் இந்த ஆட்டத்தில் ஜிதேந்தர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஒலிம்பிக் தகுதிசுற்று போட்டிக்கான இந்திய அணியிலும் இடத்தை உறுதி செய்தார். இந்த போட்டியில் மற்ற இந்திய வீரர்களான தீபக் பூனியா (86 கிலோ), ராகுல் அவாரே (61 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டைசாம்பியன் டைசின் பியூரி
  • உலக குத்துச்சண்டை கூட்டமைப்பு சாா்பில் லாஸ்வேகாஸிஸ் சனிக்கிழமை இரவு இதற்கான போட்டி நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் டியான்டி வைல்டா்-டைசன் பியூரி மோதினா்.
  • நாக் அவுட் மன்னன் என்ற பெயா் பெற்ற டியான்டி எளிதில் வெல்வாா் எனக் கருதப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே டைசன் பியூரி ஆதிக்கம் செலுத்தி சரமாரியாக குத்துகளை விட்டாா்.
  • ஒரு கட்டத்தில் வைல்டா் தரப்பு போட்டியை நிறுத்த முயற்சித்தது. எனினும் 7-ஆவது சுற்றில் தோல்வியை ஒப்புக் கொணண்டாா் வைல்டா்.
  • இதன் மூலம் புதிய உலக ஹெவிவெயிட் சாம்பியனாக ஆனாா் டைசன் பியூரி.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ரவி தாஹியா தங்கப்பதக்கம் வென்றார்
  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா மற்றும் தஜிகிஸ்தானின் ஹிக்மடுல்லோ மோதினர். இதில் ரவி தாஹியா 10-0 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் தாஹியா தங்கப்பதக்கம் வென்றார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற பஜ்ரங் பூனியா
  • டெல்லியில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் இன்று நடந்த ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா – ஜப்பானின் டகுடோ ஒட்டாகுரோ மோதினர். இந்த போட்டியில் பூனியா, ஒட்டாகுரோவிடம் தோல்வியடைந்தார். 
  • இதனால், பூனியா பதக்கத்தை வென்றார். நேற்று நடந்த பெண்கள் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஜப்பானின் நவோமி ருகேவை எதிர்கொண்டார். இதில் நவோமியிடம் தோற்ற சாக்ஷிக்கு வெள்ளி பதக்கத்தை வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel