Type Here to Get Search Results !

22nd FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கடலூா், நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் - ரசாயன முதலீடு மண்டல உத்தரவு ரத்து: தமிழக அரசு நடவடிக்கை
  • பெட்ரோலியம், ரசாயனப் பொருள்கள் மற்றும் பெட்ரோலியம் சாா்ந்த வேதிப் பொருள்களுக்கான திட்டங்களில் முதலீடு செய்வதற்கான மண்டலமாக கடலூா், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சோந்த 45 கிராமங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. 
  • கடலூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள உள்ளூா் திட்டக் குழுமத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டில் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
  • எனவே, கடலூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலியம் மற்றும் ரசாயனப் பொருள்களை ஆய்வு செய்து அவற்றை எடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முதலீட்டு மண்டலம் என்ற உத்தரவை ரத்து செய்யலாம் என நகா் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தது.
  • இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு, கடலூா் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலியம் மற்றும் ரசாயன முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தனது உத்தரவில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளாா்.
தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள்ரூ.162 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு
  • தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதனைச் சாா்ந்த வணிகத்தைத் தொடங்க ஏதுவாக, கோவை மாவட்டம் விளாங்குறிச்சியிலும், திருச்சியிலும் தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள் கட்டப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். 
  • அதில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.114.16 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. 
  • மேலும், திருச்சி மாவட்டம் நாவல்பட்டில் 1.16 லட்சம் சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்தக் கட்டடமானது ரூ.48.10 கோடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிதிகளை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தினத்தந்தி' பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் திறப்பு
  • 'தினத்தந்தி' பா.சிவந்தி ஆதித்தனார் நினைவாக, தமிழக அரசு சார்பில், துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் 1.34 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
  • திருச்செந்துார் - -துாத்துக்குடி சாலையில் வீரபாண்டியன் பட்டணத்தில், ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லுாரி அருகே பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. 
  • சி.பா.ஆதித்தனார்- - கோவிந்தம்மாள் தம்பதியருக்கு, இரண்டாவது மகனாக 1936 செப்.,24ல் பிறந்தவர் பா.சிவந்திஆதித்தனார்.அவரை சி.பா.ஆதித்தனார் பத்திரிகை துறையில் தன் வாரிசாக உருவாக்கினார். 
  • 1959ல் சிவந்தி ஆதித்தனார் பொறுப்பேற்றபோது, மூன்று பதிப்புகளில் வெளிவந்த தினத்தந்தி தற்போது 15 இடங்களில் வெளியாகிறது.திருச்செந்துாரில், பா.சிவந்தி ஆதித்தனார், பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார். பல்வேறு இடங்களிலும் கல்வி நிறுவனங்கள் கட்டுவதற்கு, நிதியுதவி வழங்கியுள்ளார்.
  • எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தை துவங்கியபோது, திருச்சி, பாப்பாகுறிச்சியில், தன் தந்தை பெயரில், சத்துணவு கட்டடம் கட்டி கொடுத்தார்.திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் சி.பா.ஆதித்தனார் பெயரில் 15 ஆயிரம் சதுர அடியில், ஒரு கட்டடத்தையும் கட்டி கொடுத்துள்ளார். 
  • தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தவர், 1987ல், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரானார். தொடர்ந்து, ஆசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் போன்றவற்றிலும் பொறுப்பு வகித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
  • பா.சிவந்தி ஆதித்தனாரை, 1982, 83 ஆகிய ஆண்டுகளில், இரண்டு முறை, சென்னை நகரின் ஷெரீப் ஆக நியமித்து, எம்.ஜி.ஆர்., கவுரவப்படுத்தினார். மத்திய அரசு, அவருக்கு, 2008ல், பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது.பல்வேறு பல்கலைகள், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளன. பத்திரிகை, கல்வி, விளையாட்டு, தொழில் என, பல்வேறு துறைகளில் சாதனையாளராக திகழ்ந்துள்ளார்.



தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ. விருது..
  • கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவர் தமிமும் அன்சாரி. இவர் மனித நேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் அக்கட்சி கூட்டணி வைத்தது.
  • இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் பூனே அமைதி பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த இளம் எம்.எல்.ஏ.க்கான விருது, தமிமுன் அன்சாரிக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் வழங்கப்பட்டது.
பிரதமருக்கு 2 புதிய ஆலோசகர்கள் நியமனம்
  • பிரதமர் மோடிக்கு இரண்டு புதிய ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் குல்புலே மற்றும் அமர்ஜித் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாஸ்கர் குல்புலே, அமர்ஜித் சின்ஹா ஆகியோரை பிரதமரின் தனி ஆலோசகர்களாக நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • 1993 ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற இரு அதிகாரிகளில் குல்புலே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் . அவர் ஏற்கனவே பிரதமர் அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சின்ஹா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
  • இவர்கள் இருவரும் முதல்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் இவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி புதிதாக நியமிக்கப்படும் போது கடைப்பிடிக்கப்படும் அனைத்து விதிகளும் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
  • டெல்லியில் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இன்று நடந்த ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா, தஜிகிஸ்தானின் ஹிக்மடுல்லோவுடன் மோதினர்.இதில் ரவி தாஹியா 10-0 என்ற கணக்கில் தங்கப்பதக்கம் வென்றார்.
  • இதேபோல், இன்று நடந்த ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, ஜப்பானின் டகுடோ ஒட்டாகுரோவிடம் தோற்றதால் வெள்ளி பதக்கம் கிடைத்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel