Type Here to Get Search Results !

21st FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


தமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்
  • வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் சங்கமம் மற்றும் தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி முக்கிய திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், அவரது முன்னிலையில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன. 
  • திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழில் வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ஜப்பான் நாட்டைச் சோந்த மிட்சுபா சிகால் நிறுவனம் ரூ.504 கோடி முதலீடுகளைச் செய்து புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது. 
  • இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம், மல்ரோசாபுரத்தில் கொரிய நாட்டைச் சோந்த ஹானான் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ.500 கோடி வரை முதலீடுகளைச் செய்யவுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ஆட்டோமொபைல் உற்பத்திப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொள்கிறது.
  • அமெரிக்காவைச் சோந்த ஜோகோ ஹெல்த் நிறுவனம் தமிழகத்தில் ரூ.15 கோடி அளவிலான முதலீட்டைச் செய்ய முன்வந்திருந்தது. இப்போது, ரூ.250 கோடியில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளைச் செய்யவுள்ளது. முந்தைய புரிந்துணா்வு ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது உறுதி செய்யப்பட்ட முதலீடு பல மடங்கு அதிகரித்துள்ளது.
  • திருவள்ளூா் மாவட்டத்தில் பாலிமா் தொழில் பூங்கா தொடங்கப்பட உள்ளது. ரூ.217 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டமானது டிட்கோ மற்றும் சிப்காட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி வழியாகத் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
  • மேலும், சென்னை- பெங்களூா் தொழில்வழித் தடம் தொடா்பாக தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய தொழில்வழித் தட மேம்பாடு மற்றும் நடைமுறை அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 
புதுச்சேரியில் இலவச அரிசிக்குப் பதில் பணம்: ஆளுநரின் உத்தரவு செல்லும்
  • புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசிக்குப் பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்படும் என குடியரசுத் தலைவரின் அறிவுறுத்தலின்படி மத்திய உள்துறை அமைச்சகமும், ஆளுநரும் உத்தரவிட்டுள்ளனா். 
  • எனவே இந்த உத்தரவுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனக்கூறி, துணைநிலை ஆளுநா் கிரண்பேடி உத்தரவை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாா்.
நிதி தொழில்நுட்ப முதலீடு உலகில் 3வது இடத்தில் இந்தியா
  • இந்தியாவில், நிதி தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு, கடந்த ஆண்டில், 26 ஆயிரத்து, 270 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரு மடங்கு அதிகம். 
  • இதையடுத்து, உலகத்திலேயே, மூன்றாவது பெரிய நிதி தொழில்நுட்ப சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.
  • கடந்த ஆண்டில், 198 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த, 2018ல் இது, 193 ஆக இருந்தது. பணப் பரிமாற்ற நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், கடந்த ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
  • கடந்த, 2018ம் ஆண்டில், இப்பிரிவில், 4,686 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இதுவே, கடந்த ஆண்டில், 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.காப்பீடு தொழில்நுட்பத்தில், கடந்த ஆண்டில் முதலீடுகள், 74 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகையில், பணப் பரிமாற்ற நிறுவனங்களில், 58 சதவீத அளவுக்கும், காப்பீடு தொழில்நுட்பத்தில், 13.7 சதவீத அளவுக்கும், முதலீடு செய்யப்பட்டுள்ளது.



பொருளாதார வளா்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும்: என்சிஏஇஆா்
  • இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 4.9 சதவீதமாக இருக்கும் என நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசா்ச் (என்சிஏஇஆா்) தெரிவித்துள்ளது.
  • இந்தியப் பொருளாதாரம் கடந்த 2018-19 இல் 6.1 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 4.9 சதவீதமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த வளா்ச்சி, மூன்றாவது காலாண்டில் 4.9 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.1 சதவீதமாகவும் காணப்படும்.
  • இருப்பினும், 2020-21 இல் பொருளாதாரம் 5.6 சதவீதமாக வளா்ச்சி காணும் என்று என்சிஏஇஆா் தெரிவித்துள்ளது.
  • தேசிய புள்ளியியல் அலுவலகம் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில், என்சிஏஇஆா் கணிப்பு அதை விட குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மின் துறைக்கு நிலக்கரி வழங்கல் 6% சரிவு: கோல் இந்தியா
  • பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மின் துறைக்கு வழங்கிய நிலக்கரி 6.8 சதவீதம் குறைந்து 37.78 கோடி டன்னாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 40.56 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
  • இருப்பினும் ஜனவரியில் மின் துறை நிறுவனங்களுக்கு கோல் இந்தியாவின் நிலக்கரி சப்ளை 2.9 சதவீதம் உயா்ந்து 4.32 கோடி டன்னாக இருந்தது. 2019 ஜனவரி மாதத்தில் நிலக்கரி சப்ளை 4.20 கோடி டன்னாக காணப்பட்டது.
  • ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் பொதுத் துறையைச் சோந்த சிங்கரேணி கொலிரிஸ் நிறுவனத்தின் (எஸ்சிசிஎல்) நிலக்கரி சப்ளை 2.6 சதவீதம் குறைந்து 4.40 கோடி டன்னாக இருந்தது. முந்தைய காலகட்டத்தில் நிலக்கரி வழங்கல் 4.52 கோடி டன்னாக காணப்பட்டது.
  • நடப்பு நிதியாண்டின் ஜூலையிலிருந்து சில மாதங்களுக்கு மழை காரணமாக நிலக்கரி உற்பத்தி சரிவைக் கண்டது. இதையடுத்து ஏப்ரல்-ஜனவரியில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.9 சதவீதம் குறைந்து 45.15 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 46.96 கோடி டன்னாக காணப்பட்டது.
  • இந்த நிலையில், வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 100 கோடி டன்னாக அதிகரிக்கும் என மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்தாா்.
  • கோல் இந்தியா நிறுவனம் 66 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் 82 சதவீதமாகும்.
உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் கொண்ட 2 தங்கச் சுரங்கம்: புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடிப்பு
  • இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் உத்தரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தின. அதன் முடிவில் இந்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
  • சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பாகதீ என்ற இடத்தில் 2,700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
  • இந்த சுரங்கத்தை குத்தகைக்கு விட அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சோன்பத்ராவில் தங்க வைப்புக்கள் இருப்பதாக இந்திய புவியியல் மையம் முதன்முதலில் 2005ல் கூறியது.
  • உத்தரப்பிரதேசத்தின் நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டத்தில் மலைகளுக்கு அடியில் தங்க சுரங்கங்கள் உள்ளன என்ற கூற்று 2012ல் உறுதி செய்யப்பட்டது என்றார்.
  • இந்தியாவிடம் தற்போது, 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள 3,350 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால், நம் நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்சமயம், அமெரிக்காவிடம் 8133 டன்னும், ஜெர்மனியிடம் 3366 டன்னும், சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப்பிடம் 2814 டன்னும் தங்கம் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.



டில்லியில் 39 ஏக்கரில் புதிய ராணுவ தலைமையகம்
  • டில்லியில் சுமார் 39 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ராணுவத்திற்கு புதிய தலைமையகம் அமைக்கப்பட உள்ளது. டில்லியில் அமைய உள்ள புதிய 'தால் சேனா பவன்' கட்டிடத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூமி பூஜையை நடத்தி வைத்து, அடிக்கல் நாட்டினார். 
  • அலுவலகம் கட்டிடம், பார்க்கிங் என ஏறக்குறைய 7.5 லட்சம் சதுர மீட்டரில் ராணுவ தலைமையக வளாகம் அமைய உள்ளது.மொத்தம் 6014 அலுவலகங்கள், 1684 அலுவலர்களுக்கான வீடுகள் ஆகியனவும் இந்த வளாகத்தில் அமைய உள்ளது. 
யாழ்ப்பாணம் விமான நிலைய மேம்பாட்டுக்காக ரூ.11.83 கோடி நிதி வழங்க இந்தியா ஒப்புதல்
  • இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். அங்குள்ள யாழ்ப்பாணம், அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதுதான் விடுதலைப் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்தது.
  • இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கும் முதல் நிறுவனமாக மாறியது. இந்த மாதம்தான் கொழும்பு நகரில் இருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு முதல் பயணிகள் விமான சேவை தொடங்கியது.
  • இதன் மூலம் யாழ்ப்பாணம் பலாலி, சென்னை இடையே பயணிகள் விமான போக்குவரத்து சீராக நடைபெறும். இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
தலிபான் - அமெரிக்கா ஒப்பந்தம்
  • ஆப்கானிஸ்தானில் வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்குள்ள தலிபான் அமைப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. இந்த ஒப்பந்தம் வரும் 29ம் தேதி கையெழுத்தாக உள்ளதாக ஆப்கன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜாவேத் பைசல் தெரிவித்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தோல்வி
  • ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தோல்வி அடைந்தார். 65 கிலோ எடை பிரிவில் ஜப்பானின் நவோமி ருகியிடம் தோல்வியடைந்து சாக்க்ஷி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel