Type Here to Get Search Results !

19th FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப்பணிகள்; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார்
  • அகழாய்வுப் பணி தொடக்கம்... சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்று அகழாய்வுப் பணிகளை அவர் துவக்கி வைத்தார். கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.
  • முதல் மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையினரும் நடத்தினர்.
  • இதில் 2600 ஆண்டுகள் பழமையான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் 6-ஆம் கட்டமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
காவிரி வேளாண் மண்டலம்: அமைச்சரவை ஒப்புதல்
  • காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • சட்ட விஷயங்களை ஆய்வு செய்ய முதல்வா் பழனிசாமி தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு சில முக்கிய அம்சங்களை ஆய்வு செய்து, சட்டச் சிக்கல்கள் ஏதும் இல்லாத மசோதாவை தயாரித்துள்ளது. அதனால், சட்ட மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
  • வக்ஃப் வாரிய நிறுவனங்களில் ஓய்வு பெற்ற பேஷ் இமாம், மோதினாா், அரபி ஆசிரியா், முஜாவா் ஆகியோரில் பலா் வறிய நிலையில் உள்ளனா். அவா்களுக்கு ரூ.1, 500 மாதாந்திர ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இந்தத் தொகையானது ரூ.3 ஆயிரமாக உயா்த்தி அளிக்கப்படும். 
  • தமிழ்நாடு குழுவின் மூலம் ஆண்டுதோறும் 4 ஆயிரம் பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா். பயணிகள் தங்களுடைய பயணத்துக்கு முன்பாக சென்னையில் தங்கி கடவுச்சீட்டு, பயண உடமைகள் சமா்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள வசதி செய்யப்படும். அதன்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம் சென்னையில் ஒதுக்கீடு செய்யும் நிலத்தில் ரூ.15 கோடி அரசு நிதியில் புதிய ஹஜ் இல்லம் கட்டப்படும்.
  • வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 814 வக்ஃப் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இரண்டில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக அளிக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகிறது பிப்.,24
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மிகப்பெரிய கவுரவம் அளிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான, பிப்., 24ம் தேதி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களது பெயரில், தலா, 2 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அந்த குழந்தைகள், சமுதாயத்தில், தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, இது உதவும்
  • பெற்றோர், பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடித்து, அரசு இல்லத்தில் இருந்து வெளியேறியபின், அவர்களது சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய, சிறப்பு உதவி தொகுப்பை, அரசு வழங்கும். இந்த உதவித் தொகுப்பில், உயர் கல்வி படித்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும். அந்த பெண்கள், 50 வயது நிறைவடையும் வரை, இந்த உதவி வழங்கப்படும்
  • தமிழகத்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில், ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அந்த குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும், வளர்ப்பு பெற்றோருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு, மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை, 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
  • பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம், சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. எனவே, குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு, சிறப்பாக செயலாற்றும் 3 மாவட்டங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும்
  • குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள, முற்றிலும் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அலுவலகங்களில் ஏற்படும், 'சி' மற்றும், 'டி' பிரிவு பணிஇடங்களில், வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கேற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
  • இது தவிர, சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும், தகுதிக்கேற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
குடியாத்தம் அருகே கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோந்த 'போத்தராஜா' சிற்பம் கண்டெடுப்பு
  • குடியாத்தம் அருகே கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சோந்த 'போத்தராஜா' சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இச்சிற்பத்தில் ஒரு ஆண் தனது இடது காலைத் தரையில் ஊன்றியவாறு காட்சியளிக்கிறாா். இடையில் பெரிய போா் வாளையும் வலது கையில் கத்தியையும் ஏந்திய நிலையில், தன் இடது கையால் ஒரு விலங்கைப் பிடித்தவாறு சித்தரிக்கப்பட்டுள்ளாா். 
  • இச்சிற்பத்தில் உள்ளவா் திரெளபதியம்மன் கோயில்களில் காவல் தெய்வமாக வழிபடப்படும் 'போத்தராஜா'ஆவாா். வட மாநிலங்களில் இத்தெய்வ வழிபாடு பிரபலமானது.
  • இக்கோயிலுக்கு 10 அடி முன்னால் கற்களால் ஆன மண்டபம் ஒன்றும் உள்ளது. இது பராமரிப்பு இன்றிப் பாழடைந்த நிலையில் புதா்மண்டிக் கிடக்கிறது. அநேகமாக இது திரெளபதியம்மன் கோவிலாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. 
  • ஏனென்றால் திரெளபதி கோயிலின் முன்பாக 'போத்தராஜா' சிற்பம் இடம்பெறுவதுண்டு. பிற்காலக் கட்டடக் கலையை ஒத்திருக்கும் இக்கோயிலானது கி.பி. 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தையதாக இருக்கக்கூடும்.
இந்தோனேஷிய பல்கலை.யுடன் சென்னைப் பல்கலை. கூட்டு ஆராய்ச்சி
  • இந்தோனேஷிய பல்கலைக்கழகத்துடன் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.
  • இதையொட்டி, இந்தோனேஷியாவின் ஏஸ் மாகாண கவா்னா் உள்பட சியா குவாலா பல்கலைக்கழக நிா்வாகிகள் 25 போ சென்னைப் பல்கலைக்கழகம் வந்தனா்.
  • இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு கல்வி நிறுவனங்களிடையே ஆசிரியா் - மாணவா் பரிமாற்றம் மட்டுமின்றி, கூட்டு ஆராய்ச்சி, கூட்டு கல்வித் திட்டப் பணிகளிலும் இரு பல்கலைக்கழகங்களும் ஈடுபட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



24 மணி நேர வர்த்தக நிறுவனங்கள்: கேரள அரசு முடிவு
  • மும்பையை தொடர்ந்து, திருவனந்தபுரம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் ,24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் சிறப்பு பகுதிகள் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • திருவனந்தபுரத்தில், சுற்றுலா துறை, காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட நிரந்தர குழு உருவாக்கப்பட்டு, அந்த குழுவின் கண்காணிப்பில், 24 மணி நேர வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் சிறப்பு பகுதிகள் அமைக்கப்படும்.
  • இத்திட்டம், தலைநகரைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பெரு நகரங்களுக்கும், வரும், ஏப்ரலுக்குள் விரிவுபடுத்தப்படும். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
  • ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' என்ற செய்தி நிறுவனம் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. 
  • இதற்காக 533 பல்கலைகளை தேர்வு செய்து தர வரிசைப்படுத்தியது. அதில் மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த பல்கலைகள் இடம்பெற்றுள்ளன.அந்தப் பட்டியலில் 56 இந்திய பல்கலைகள் இடம் பிடித்துள்ளன. 
  • முதல் 100 இடங்களில் அதிகபட்சமாக சீனாவைச் சேர்ந்த 30 பல்கலைகள் இடம்பிடித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்த 11 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில் ஐ.ஐ.எஸ்சி. எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம் 16வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அதைத்தொடர்ந்து காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி. 32வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி. 34வது இடத்தையும், டில்லி ஐ.ஐ.டி. 38வது இடத்தையும், ரூர்கி ஐ.ஐ.டி. 58வது இடத்தையும், இந்துார் ஐ.ஐ.டி. 61வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி. 63வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • ஐ.சி.டி.எனப்படும் வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் 73வது இடத்தை பிடித்துள்ளது. இதில் காரக்பூர் ஐ.ஐ.டி. 23 இடங்களும், டில்லி ஐ.ஐ.டி. 28 இடங்களும், சென்னை ஐ.ஐ.டி.
  • 12 இடங்களும் முன்னேறியுள்ளன. ரோபர் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.சி.டி. நிறுவனங்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்
  • ராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவராக நித்யகோபால் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் சம்பத் ராய் தேர்வாகியுள்ளார்.
  • இதனிடையே ராமர் கோவில் கட்டுமான குழுவின் தலைவராக பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிர்பேந்திரா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வென்றார் சுனில் குமார்
  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார்.
  • முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்த சுனில் குமார் 12-8 என்ற புள்ளி கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
  • இந்நிலையில் டெல்லியிலுள்ள கே.டி. ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் கிர்கிஸ்தான் வீரர் அசாத் சாலிடிநோவை சந்தித்த சுனில்குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் அவரை தோற்கடித்தார்.
  • கடந்த 1993ம் ஆண்டு பப்பு யாதவ் என்பவர் ஆசிய சாம்பியின்ஷிப் மல்யுத்தப் போட்டியில் பட்டம் வென்ற நிலையில், அதன் பின்பு சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்பு இந்த விருதை தற்போது சுனில் குமார் தட்டி சென்றுள்ளார்.



டெல்லியில் நடைபெற்ற மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் ஆதித்யா குந்து வெண்கல பதக்கம் 
  • டெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டி தொடங்கியது. 
  • கிரேக்கோ-ரோமன் பிரிவின் 72 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆதித்யா குந்து – ஜப்பானைச் சேர்ந்த பிராப்ளரை எதிர்கொண்டார். 
  • இதில் 8-0 என்ற கணக்கில் ஆதித்யா குந்துவெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு வெண்கலம்
  • புது தில்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்ற கிரேக்கோ ரோமன் 67 கிலோ எடைப்பிரிவில் சிரியாவின் அப்துல் கரீம் முகமதை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரா் அஷூ.
ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அர்ஜூன் ஹலாகுர்கி வெண்கலப்பதக்கம் வென்றார்
  • ஆசிய மல்யுத்த போட்டியில், 55 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் ஹலாகுர்கி 7-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் டோங்யோக் வானை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றார்.
  • 130 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் மெஹர் சிங் 1-9 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் மின்செக் கிம்மிடம் தோல்வி அடைந்தார்.
ஆசிய மல்யுத்தம்: அஷு வெண்கலம்
  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அஷு ('கிரிகோ-ரோமன்' 67 கி.கி.,), ஆதித்யா ('கிரிகோ-ரோமன்' 72 கி.கி.,), ஹர்தீப் சிங் ('கிரிகோ-ரோமன்' 97 கி.கி.,) வெண்கலம் வென்றனர்.
  • டில்லியில், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் 'கிரிகோ-ரோமன்' 67 கி.கி., எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அஷு8-1 என,சிரியாவின் அப்துல்கரீம் முகமது அல்-ஹசனை வீழ்த்தினார்.
  • 'கிரிகோ-ரோமன்' 72 கி.கி., எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஆதித்யா 8-0 என, ஜப்பானின் நாவோ குசாகாவை தோற்கடித்தார்.
  • 'கிரிகோ-ரோமன்' 97 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்தீப் சிங் 3-1 என, கிரிகிஸ்தானின் பெக்சுல்தானை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றினார்.இம்முறை 'கிரிகோ-ரோமன்' பிரிவில் இந்தியாவுக்கு 4வது பதக்கம் (ஒரு தங்கம், 4 வெண்கலம்) கிடைத்துள்ளது. 
  • ஏற்கனவே சுனில் குமார் (தங்கம், 'கிரிகோ-ரோமன்'87 கி.கி.,), அர்ஜுன் (வெண்கலம், 'கிரிகோ-ரோமன்' 55 கி.கி.,) பதக்கம் வென்றிருந்தனர்.
  • 'கிரிகோ-ரோமன்' 60 கி.கி., எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஞானேந்தர் 0-6 என, தோல்வியடைந்து ஏமாற்றினார். இப்பிரிவில் தங்கப் பதக்கத்தை ஜப்பானின் கெனிசிரோ புமிதா வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel