Type Here to Get Search Results !

17th FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ராணுவத்தில் பாலின பாகுபாடு கூடாதென சுப்ரீம் கோர்ட் உத்தரவு
  • 'பெண்களுக்கு ராணுவத்தில் கமாண்டர் உள்ளிட்ட உயர் பதவி வழங்கப்படாததற்கு, உளவியல் மற்றும் சமூக ரீதியான காரணங்களை மத்திய அரசு கூறுவது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வழங்குவதற்கு, இனி எந்த தடையும் இல்லை. 
  • பெண் அதிகாரிகளுக்கு, மூன்று மாதங்களுக்குள் நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • ராணுவத்தில், கடற்படை மற்றும் விமானப் படையில் பணியாற்றும் பெண்களுக்கு, குறைந்த காலம் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. 
  • எனவே, பெண்களுக்கு ராணுவத்தில் முழுமையான பணிச் சேவை வழங்கக் கோரியும், உயர் பதவிகளை வழங்கக் கோரியும், பெண் அதிகாரிகள் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. 
  • நிரந்தர ஆணையம் இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2010ல் அளித்த தீர்ப்பில், கடற்படையில் பெண்களுக்கு முழுமையான பணி வாய்ப்பு வழங்கும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
  • ராணுவத்தில், பெண்களுக்கு கமாண்டர் உள்ளிட்ட உயர் பதவி வழங்காததற்கு, பெண்களின் உளவியல் மற்றும் சமூக ரீதியான பிரச்னைகளை மத்திய அரசு கூறுவது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது. ராணுவத்தில் ஏற்கனவே பணியாற்றிய பல பெண்கள், நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
  • ஐ.நா., அமைதி காக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளில், பெண்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். எனவே, ராணுவத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டும் மனப்பான்மையை, மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். ராணுவத்தில் ஆண்கள், பெண்கள் என, அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். பாகுபாடு காட்டுவதற்கு, அரசியல் சட்டத்தில் எந்த இடமும் இல்லை.
  • ராணுவத்தில், கமாண்டர் உள்ளிட்ட உயர் பதவிகளை பெண்களுக்கு வழங்குவதற்கு, இனி எந்த தடையும் இல்லை. மனப்பான்மை 'ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும்' என, 2010ம் ஆண்டில் டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக இந்த உத்தரவை, மத்திய அரசு செயல்படுத்தாமல் இருந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகள் ஆகி விட்டன.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 5.4 சதவீதமாக குறைத்தது மூடிஸ்
  • பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் மீட்சி வேகம் எதிா்பாா்த்ததை விட குறைவாக இருப்பதன் காரணமாக நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளா்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • இந்த வளா்ச்சி 2021-இல் 5.8 சதவீதமாக இருக்கும். இவை முன்பு முறையே 6.6 சதவீதம் மற்றும் 6.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தன.
  • தேவையில் ஏற்பட்டுள்ள தற்போதைய மந்த நிலையை கண்டறிந்து அதனை ஊக்குவிக்குவிக்கும் திட்டங்கள் எதுவும் 2020-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இடா்பாடுகள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் வரி குறைப்பு மட்டும் நுகா்வோா் தேவை, வா்த்தக செலவினத்தை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்க முடியாது.
  • சா்வதேச பொருளாதார வளா்ச்சியும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு 2020-இல் ஜி-20 நாடுகளின் பொருளாதாரம் ஒட்டுமொத்த அளவில் 2.4 சதவீத வளா்ச்சி காணும் என தற்போது எதிா்பாா்க்கப்படுகிறது. இது, 2021-இல் 2.8 சதவீதமாக அதிகரிக்கும்.
  • சீனா நடப்பாண்டில் 5.2 சதவீத பொருளாதார வளா்ச்சியும், 2021-இல் 5.7 சதவீத பொருளாதார வளா்ச்சியையும் தக்க வைக்கும் என்பதே எங்களின் எதிா்பாா்ப்பு என மூடிஸ் கூறியுள்ளது.



விராத் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர்
  • விராத் கோலிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன் எந்த ஒரு இந்தியரும் இவ்வளவு அதிகமான ஃபாலோயர்களை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
  • விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும், அதற்கு அடுத்து தீபிகா படுகோன் அவர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
  • 2011 உலககோப்பை வெற்றியை தொடர்ந்து, இந்திய வீரர்கள், சச்சினை தோளில் சுமந்து சென்ற நிகழ்வு, சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டு லாரியஸ் விருதுக்கு வழங்கப்பட்டது.
  • விளையாட்டு உலகின் உயரிய விருதான லாரியஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் கார் ரேஸ் வீரர் ஹாமில்டோனுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
  • 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்து தருணமாக இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது. 
  • ஜெர்மனியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சச்சின் அதை பெற்றுக் கொண்டார்.சிறந்த அணிக்கான விருது, தென் ஆப்ரிக்கா ரக்பி அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த வீராங்கனையாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel