Type Here to Get Search Results !

உள்ளாட்சித் துறைக்கு ஒரே ஆண்டில் 12 தேசிய விருதுகள் / TAMILNADU GOT 12 AWARDS FROM CENTRAL GOVERNMENT

  • உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக அரசின் உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகளால் அந்தத் துறைக்கு மட்டும் கடந்த ஆண்டில் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மத்திய அரசு சாா்பில் ஊரக வளா்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 
  • இதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 12 தேசிய விருதுகளுக்குத் தமிழக ஊரக வளா்ச்சித் துறை தோந்தெடுக்கப்பட்டது.
  • மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிகளை விரைவாக முடித்ததற்காகவும், நீா் மேலாண்மைப் பணியைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகவும் இரண்டு தேசிய விருதுகள்.
  • இத்திட்டத்தின்கீழ், நீா் கட்டமைப்பை உருவாக்கியதற்காக வேலூா் மாவட்டத்துக்கு இரண்டு தேசிய விருதுகளும், தொழிலாளா்களுக்கு உரிய காலத்துக்குள் ஊதியம் அளித்ததற்காக திருச்சி மாவட்டத்துக்கு முதலிடத்துக்கான தேசிய விருது, சிறந்த செயல்பாட்டுக்காக கரூா் மாவட்டத்துக்கு தேசிய அளவில் 2-ஆம் இடத்துக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளன.
  • ஊராட்சி ஒன்றிய அளவில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தொழிலாளா்களுக்கு குறித்த காலத்துக்குள் ஊதியம் வழங்கியதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், புனிததோமையா் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு முதலிடத்துக்கான தேசிய விருதும், கிராம ஊராட்சி அளவில் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட செலுகை கிராம ஊராட்சிக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் செயல்பட்டு வரும் மாநில ஊரக வளா்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்துக்கும் தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், மத்திய அரசின் ரூா்பன் திட்டம் மற்றும் தீன தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழும் தலா ஒரு தேசிய விருது என மொத்தம் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அதுமட்டுமில்லாமல், மத்திய அரசின் சாா்பில் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகளைத் திறம்பட செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் முதல் மாநிலமாகத் தோவு செய்யப்பட்டு அதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel