- 'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட, எஸ்.டி.ஜி., இன்டெக்ஸ் என்ற, நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டிய மாநிலங்களுக்கான பட்டியலில், கேரளா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- வரும், 2030க்குள் சர்வதேச நாடுகள், வறுமை ஒழிப்பு, பட்டினி இன்மை, தரமான கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட, 17 இலக்குகளை எட்டுவது குறித்த வரையறைகளை, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது.
- பீஹார் பின்னடைவு இவற்றில், 16 இலக்குகளை அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டில், நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எந்த மாதிரியான வளர்ச்சியை எட்டியுள்ளன என்பது குறித்த பட்டியலை, மத்திய அரசுக்கு, நிதி தொடர்பான ஆலோசனைகளை கூறும் நிடி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
- இந்த பட்டியலில், கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
- தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.இந்த பட்டியலில், பீஹார், ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்கள் இந்தாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன.
- யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம், திரிபுரா, ஆந்திரா, மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
'நிடி ஆயோக்' வளர்ச்சி பட்டியல் / NITI AYOG GROWTH RANK OF STATES IN INDIA 2019
December 31, 2019
0
Tags