Type Here to Get Search Results !

30th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சேலம் தலைவாசலில் நவீன கால்நடைப் பூங்காவுக்கு ரூ. 564 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
  • சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு சாலைக்கு அருகில் கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான 900 ஏக்கா் நிலம் உள்ளது. இங்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மூன்று பிரிவுகளாக இந்த பூங்கா அமையவுள்ளது.
  • முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பா்கூா் ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள், மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படுகிறது.
  • இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருள்களைப் பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருள்கள், மதிப்புக் கூட்டிய பொருள்களைத் தயாா் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தவும், மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில்
தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்
  • பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது, 'ராணுவத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், ராணுவம், கடற்படை, விமானப் படை என, முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்படுவார்' என, அறிவித்தார். 
  • இதையடுத்து, 'முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, அவற்றின் செயல்பாடுகள் குறித்து, பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் வகையில், தலைமை தளபதியை நியமிக்கலாம்' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. 
  • சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திலும், தலைமை தளபதியை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ராணுவம், கடற்படை, விமானப் படை தளபதிகளைப் போல், தலைமை தளபதியும், நான்கு நட்சத்திர அந்தஸ்து உடைய ராணுவ அதிகாரியாக இருப்பார் என்றும், இவருக்கான சம்பளம், மற்ற தளபதிகளின் சம்பளத்துக்கு இணையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
  • மேலும், ராணுவ விவகாரம் என்ற தனித் துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராகவும், தலைமை தளபதி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. 
  • ராணுவ தளபதி பிபின் ராவத்தின் பதவிக் காலம், இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, முப்படைகளின் தலைமை தளபதியாக, அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தளபதி ஓய்வு பெறும் வயது, 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



'நிடி ஆயோக்' வளர்ச்சி பட்டியல் தமிழகத்துக்கு மூன்றாவது இடம்
  • 'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட, எஸ்.டி.ஜி., இன்டெக்ஸ் என்ற, நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டிய மாநிலங்களுக்கான பட்டியலில், கேரளா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 
  • வரும், 2030க்குள் சர்வதேச நாடுகள், வறுமை ஒழிப்பு, பட்டினி இன்மை, தரமான கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட, 17 இலக்குகளை எட்டுவது குறித்த வரையறைகளை, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது. 
  • பீஹார் பின்னடைவு இவற்றில், 16 இலக்குகளை அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டில், நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எந்த மாதிரியான வளர்ச்சியை எட்டியுள்ளன என்பது குறித்த பட்டியலை, மத்திய அரசுக்கு, நிதி தொடர்பான ஆலோசனைகளை கூறும் நிடி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. 
  • இந்த பட்டியலில், கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 
  • தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.இந்த பட்டியலில், பீஹார், ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்கள் இந்தாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன.
  • யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம், திரிபுரா, ஆந்திரா, மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 
பீஜிங் - சாங்ஜியாகவ் இடையே அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை தொடக்கம்
  • பீஜிங் மற்றும் சாங்ஜியாகவ் நகரங்களுக்கு இடையே இந்த ரயில் விடப்பட்டுள்ளது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்சார் கருவிகளுடன் ஸ்மார்ட் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்மார்ட் ரயிலில் அமைக்கப்பட்டுள்ள இன்டெலிஜன் சிஸ்டம் அவசர காலங்களில் அபாயத்தை உணர்ந்து செயல்படும் என்றும், ரயிலில் ஏற்படும் சத்தம்,வெப்பநிலை மாறுபாடு குறித்தும் இன்டலிஜன் சிஸ்டம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  • பீஜிங் - சாங்ஜியாகவ் இடையிலான 174 கி.மீ. தூரத்தை 47 நிமிடங்களிலேயே கடப்பதால் ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel