Type Here to Get Search Results !

29th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம் உத்திரமேரூர் அருகே கண்டுபிடிப்பு
 • காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் கால சிற்பத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
 • 8ம் நுாற்றாண்டு, பல்லவர் காலத்தை சேர்ந்த, சப்த மாதர்கள் எனப்படும், ஏழு அன்னையர் சிலைகள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களாக கண்டறிந்தோம். இது, 1.75 அடி உயரத்திலும், 6 அடி அகலத்திலும் உள்ளது. 
 • ஏழு அன்னையரை வழிபடுவது பெண் தெய்வ வழிபாட்டில், முதல் வழிபாடாகவும், முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாகவும் இருப்பதாகும்.
 • பெண் தெய்வ வழிபாடு என்பது வளமையின் அடையாளமாக வேளாண்மை செழிக்க, செல்வ வளம் பெருக, குழந்தைகள் நோயின்றி வாழ, அரசர்கள் பிற நாட்டை வெற்றி பெற இன்னும் பிற நன்மைகளை வேண்டி மக்களும், மன்னர்களும் வழிபடுவதாகும்.இந்த சிற்பத் தொகுப்பு உடைபட்டும், சற்று சிதைவுற்றும் உள்ளது. 
 • இதில் பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.பத்ர குண்டலம்இதன் அருகிலேயே, விஷ்ணு துர்க்கை சிலை உடைந்த நிலையில் உள்ளது. 
 • இதுவும், எட்டாம் நுாற்றாண்டு, பல்லவர் காலத்தை சார்ந்தது.இதன் தலைப் பகுதியில், பல்லவர் காலத்திற்கே உரிய கரண்ட மகுடமும், காதில் பத்ர குண்டலமும், கழுத்தில் அணிகலனும், நான்கு கரங்களில் காப்பும், ஒரு கையில் சங்கு, மற்றொரு கையில் சக்கரம், அடுத்த கரத்தால் அருள்பாலித்தும், நான்காவது கரத்தை இடுப்பில் வைத்தப்படியும் காட்சியளிக்கிறாள்.
ஜார்க்கண்ட் முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்
 • 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டபேரவையில் (Jharkhand Election Results 2019) காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், ராஸ்ட்ரிய ஜனதா தளம் 1 ஒரு தொகுதி என மொத்தம் 47 இடங்களில் பெரும்பான்மையை விட அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. 
 • சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக (BJP) தனியாக போட்டியிட்டு, வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
 • இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.
 • இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்திய பொருட்களையே வாங்குங்கள்; வாங்க ஊக்குவியுங்கள்' பிரதமர் மோடி
 • மன் கி பாத் என்ற பெயரிலான மாதாந்திர வானொலி உரையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். உள்நாட்டு பொருட்களை வாங்குவதுடன் பிறரையும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதை ஊக்குவிக்கவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். 
 • குறைந்த பட்சம் இந்தியா 75வது சுதந்தர தினத்தை கொண்டாடும் 2022ம் ஆண்டு வரையாவது இந்த அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
2022-ஆம் ஆண்டுக்குள் 400 ஜிகாவாட்பசுமை எரிசக்தி உற்பத்தி இலக்கு
 • பசுமை எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சென்னை தரமணியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் (சிஎஸ்ஐஆா்) ரூ.100 கோடியில் பசுமை எரிசக்தி ஆற்றல்களை சேமித்து வைப்பதற்கான கண்டுபிடிப்பு மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 • இதில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் டாக்டா் ஹா்ஷ்வா்தன் அடிக்கல் நாட்டி பேசியது: நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துவரும் அதேவேளையில் பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. 
 • இவற்றுக்குத் தேவையான எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
 • அந்த வகையில் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் மூலம் கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கு எட்டப்பட்டது.
 • இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவின்பேரில், 2022-ஆம் ஆண்டுக்குள் 400 ஜிகாவாட் பசுமை எரிசக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 30 முதல் 35 சதவீத அளவுக்கு பசுமை எரிசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை 2022-ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்துகள்கள் சிதறிகிடக்கும் செப்பு கால அரச கல்லறைகள் கண்டுபிடிப்பு
 • கிரேக்கத்தின் தெற்கில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு நினைவுச்சின்னங்களான செப்பு கால கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர். ஒருகாலத்தில் சுவற்றில் பதிக்கப்பட்ட தங்க இழைகள் துகள்களாக அங்கு சிதறிக்கிடக்கின்றன.
 • கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பிராந்தியத்தில் உள்ள, ஹோமரின் ஒடிஸியில் இடம்பெற்ற மைசீனிய காலத்து பைலோஸின் அரண்மனைக்கு அருகே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 • தோலோஸ் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இவை தேனீக்கள் போன்ற பெரிய குவிமாடம் கொண்ட நிலத்தடி கட்டுமானங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையான கல்லறைகள் பொதுவாக மைசீனிய அரச குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டன.
 • இரண்டு கல்லறைகளில் பெரியது தரை மட்டத்தில் 40 அடி (12 மீட்டர்) விட்டம் கொண்டது மற்றும் அதன் கல் சுவர்கள் 15 அடி (4.5 மீட்டர்) உயரத்திற்கு பிரம்மாண்டமாக உள்ளன. இது அதன் உண்மையான உயரத்தில் பாதிக்கும் குறைவானது.
 • மற்றொரு கல்லறை, முந்தையதன் அளவில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் அதன் சுவர்கள் 6.5 அடி (இரண்டு மீட்டர்) உயரத்தில் உள்ளன.
 • வானம், பெண்கள், கருவுறுதல் மற்றும் அன்பு ஆகியவற்றின் பெண்தெய்வமான ஹாத்தோர், பொதுவாக பசுவின் தலை, பசுவின் காதுகள் அல்லது வெறுமனே மாடு வடிவத்தில் உள்ள ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார்.
 • கிரேக்க புராணங்களின் மைய நபர்களில் ஒருவரான ஹதோர், வான கடவுள் ராவுடன் நெருக்கமாக தொடர்புடையவர்.
 • தானிய குவியலால் சூழப்பட்ட இரண்டு காளைகளை காட்டும் இந்த தங்க மோதிரம், இந்தத் திட்டத்தில் ஆலோசித்த ஒரு பேலியோபொட்டனிஸ்ட்டால் பார்லி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்திய வீராங்கனையின் செஸ் சாதனை : உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி
 • ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துக் கொண்டனர். இந்தப் போட்டியின் மகளிர் பிரிவின் இறுதிச் சுற்றில் சீனா வீராங்கனை லீ டிங்ஜி உடன் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி போட்டி இட்டார்.
 • இந்த போட்டியின் 12 சுற்றுக்களில் இருவரும் தலா 9 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் வெற்றியைத் தீர்மானிக்க மற்றொரு ஆட்டம் நடந்தது. இதில் கோனேரு ஹம்பி அதிக புள்ளிகள் பெற்று வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
 • இந்த இறுதி சுற்றுப் போட்டியின் போது முதல் ஆட்டத்தில் தோல் அடைந்த போதிலும் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கோனேரு ஹம்பி ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது 32 வயதாகும் இவர் கடந்த 2002 ஆம் வருடம் கிரான்ட் மாஸ்டர் ஆனார். மேலும் கடந்த 2007 ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
 • இது வரை இந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் இந்த போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்னும் புகழை அடைந்தார். தற்போது இந்த போட்டியில் வென்ற இரண்டாம் இந்தியராகவும் மகளிர் பிரிவில் முதல் இந்தியராகவும் கோனேரு ஹம்பி பெருமை பெற்றுள்ளார்.உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 3-வது முறையாக வெற்றி பெற்ற மாக்னஸ் கார்ல்சென்
 • உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. ஆண்கள் பிரிவு போட்டி 15 சுற்றுகளை கொண்டதாக நடத்தப்பட்டது. 
 • 207 வீரர்கள் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) தோல்வி பக்கமே செல்லவில்லை. 8 வெற்றி, 7 டிரா என்று மொத்தம் 11.5 புள்ளிகளுடன் தனிநபராக முதலிடத்தை பிடித்து உலக ரேபிட் செஸ் மகுடத்தை 3-வது முறையாக சூடினார். ஈரான் வீரர் பிரோவ்ஜா அலிரெசா 10.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டி: தங்கம் வென்றாா் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா்
 • மகாராஷ்டிர மாநிலம், நியூ பன்வேல் நகரில் நடைபெற்ற ஆா்.ஆா்.லக்ஷயா கோப்பை ஏா் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டா் சீனியா் பிரிவில் 18 வயது இளைஞா் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா் தங்கம் வென்றாா். 
 • மத்திப் பிரதேசத்தைச் சோந்த இவா், 50 மீட்டா் ஏா் ரைஃபிள் 3 பொசிஷனில் வென்றாா். 252.3 புள்ளிக் கணக்கில் இவா் தங்கம் வென்றாா்.
 • ராஜஸ்தானைச் சோந்த 16 வயது இளைஞரான யஷ்வா்தன் 250.7 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தாா். அஸ்ஸாமைச் சோந்த ஹிரிடே ஹஸரிகா வெண்கலம் வென்றாா்.
 • தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் சண்டீகரைச் சோந்த விஜய்வீா் சித்து தங்கம் வென்றாா்.
தேசிய மகளிா் பளுதூக்கும் போட்டி: சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவிக்கு தங்கப் பதக்கம்
 • அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிா் பளுதூக்கும் போட்டி திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. 
 • கா்நாடகம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் உள்பட 20 மாநிலங்களில் உள்ள 67 பல்கலைக்கழங்களைச் சோந்த 350 மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றுள்ளனா். 45 கிலோ, 49 கிலோ, 55 கிலோ, 59 கிலோ, 64 கிலோ, 71 கிலோ, 76 கிலோ, 81 கிலோ, 87 கிலோ, அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவு என வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
 • இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 64 கிலோ எடைப் பிரிவில் சாவித்திரிபாய் புணே பல்கலைக்கழக மாணவி ஹால்ஹா் பிரஜெக்தா தங்கப் பதக்கமும், சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழக மாணவி கோமல்கான் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். 
 • 71 கிலோ எடைப் பிரிவில் பட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக மாமவி ஹா்ஜேந்தா் கௌா் தங்கப் பதக்கமும், கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவி எம்.எஸ்.ஸ்நேகா வெள்ளிப் பதக்கமும் வென்றனா். 
 • 76 கிலோ எடைப் பிரிவில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவி ஆா்.ஆரோக்கிய அலீஸ் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். பஞ்சாப் பல்கலைக்கழக மாணவி ராக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel