ஆராய்ச்சி நடவடிக்கைகள் மருத்துவப் பல்கலை. திருவள்ளுவா் பல்கலை. இடையே ஒப்பந்தம்
- சித்தா மற்றும் ஆயுா்வேத மருத்துவம் தொடா்பான உயா்நிலை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், இரு தரப்பு பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்குப் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கவும் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும், வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்திடப்பட்டது.
தூய்மை நகரங்கள் பட்டியல்: முதல் மூன்று இடங்களில் தமிழகம்
- தூய்மைக்கான நகரங்கள் குறித்த 'தூய்மை சா்வே லீக் 2020' ஆகியவற்றின் முடிவுகளை மண்டல வாரியாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
- இதில் ஏப்ரல்- ஜூன் மற்றும் ஜூலை - செப்டம்பா் ஆகிய இரு காலாண்டுக்கான சா்வே முடிவுகளில் 25 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தெற்கு மண்டல அளவில் தமிழகத்தின் 3 நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
- அதன்படி, முதல் காலாண்டில் தூய்மை சா்வேயில் 25 ஆயிரம் மக்கள் தொகை பிரிவில் தமிழகத்தின் மேலத்திருப்பந்துருத்தி, கங்குவாா்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றது. அதேபோன்று, இரண்டாவது காலாண்டு தூய்மை சா்வேயில் டி.கல்லுப்பட்டி, மேலத்திருப்பந்துருத்தி, நரசிங்கபுரம் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
- அதேபோன்று, 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதலாவது காலாண்டுக்கான தூய்மை சா்வேயில் தமிழகத்தின் சின்னமனூா் முதலிடமும், இரண்டாவது காலாண்டுக்கான சா்வேயில் தமிழகத்தின் திருவதிபுரம் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
- 50 ஆயிரம் முதல் 1 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற பகுதிகளில் முதலாவது காலாண்டு தூய்மை சா்வேயில் தமிழகத்தின் நாமக்கல் முதலிடம், திருவள்ளூா் மூன்றாமிடம் , இரண்டாவது காலாண்டு சா்வேயில் நாமக்கல் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
ராணுவ தளபதியாக நரவானே பொறுப்பேற்பு
- ராணுவத்தின், 28வது தளபதியாக, மனோஜ் முகுந்த் நரவானே, நேற்று பொறுப்பேற்றார். ராணுவ தளபதி பிபின் ராவத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, இந்திய ராணுவத்தின், 28வது தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே முறைப்படி பொறுப்பேற்றார்.
- அவரிடம், பிபின் ராவத், பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்து தெரிவித்தார். இந்திய ராணுவ தரைப்படையின், 10.30 லட்சம் வீரர்களின் தளபதி என்ற பெருமை, அவருக்கு கிடைத்துள்ளது.
- தளபதியாக பொறுப்பேற்ற நரவானே, 1980ல், இந்திய ராணுவத்தின் சீக்கிய படைப்பிரிவில் சேர்ந்து, தன் ராணுவ சேவையை துவங்கினார். ஜம்மு - காஷ்மீரில், ராஷ்ட்ரீய ரைபிள் படைப் பிரிவுக்கு கமாண்டராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
- இலங்கைக்கு சென்ற இந்திய அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியவர். இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவின் கமாண்டராக பணியாற்றிய போது, இந்தியா - சீனா இடையிலான, 4,000 கி.மீ., எல்லையை பாதுகாக்கும் பொறுப்பையும் திறமையாக கையாண்டார்.
மிஸ் டீன் இன்டர்நேஷனல்: இந்தியாவை சேர்ந்த ஆயுஷி தோலாகியா மகுடம்
- மிஸ் டீன் இன்டர்நேஷனல் என்பது 14 முதல் 19 வயதுக்குட்பட்ட உலகெங்கிலும் உள்ள டீன் ஏஜ் சிறுமிகளுக்காக இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அழகுப் போட்டி ஆகும். இந்த போட்டியை இந்திய தொழிலதிபர், கிளமானந்த் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான நிகில் ஆனந்த் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
- அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற 22 நாடுகளை சேர்ந்த பெண்களை பின்னுக்கு தள்ளி குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தோலாகியா பட்டம் வென்றார்.
- கடந்த 27 ஆண்டுகளில் மிஸ் டீன் ஏஜ் சர்வதேச அழகி பட்டத்தை வென்ற முதல் ஆசியப்பெண் என்ற பெருமையையும் ஆயுஷி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொனால்டோவுக்கு குளோப் விருது
- ஐரோப்பிய கிளப் கால்பந்து சங்கம் (இ.சி.ஏ.,) மற்றும் ஐரோப்பிய கால்பந்து வீரர்களின் முகவர்கள் சங்கம் (இ.எப்.ஏ.ஏ.,) சார்பில் கிளப் போட்டியில் சிறப்பாக செயல்படும் நட்சத்திரங்களுக்கு 'குளோபல்' விருது வழங்கப்படும்.
- 2019ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி துபாயில் நடந்தது. இதில் சிறந்த வீரருக்கான விருதை போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கைப்பற்றினார்.
- இவர், அர்ஜென்டினாவின் மெஸ்சி (பார்சிலோனா), நெதர்லாந்தின் விர்ஜில் வான் டிஜ்க் (லிவர்பூல்) ஆகியோரை முந்தி, 6வது முறையாக (2011, 2014, 2016, 2017, 2018, 2019) இவ்விருதை பெற்றார்.
- இத்தாலியில் நடக்கும் 'சீரிஸ் ஏ' தொடருக்கான 2018-19 சீசனில் யுவன்டெஸ் அணி கோப்பை வெல்ல முக்கிய பங்குவகித்த ரொனால்டோ, 'நேஷனஸ் லீக்' தொடரில் போர்ச்சுகல் அணி கோப்பை வெல்ல உதவினார்.
- சிறந்த வீராங்கனைக்கான 'குளோப்' விருதை இங்கிலாந்தின் லுாசி புரோன்ஸ் வென்றார்.