Type Here to Get Search Results !

இந்திய கப்பல்படை தினம் / Indian Navy Day


  • இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. 7,517 கி.மீ., துாரத்திற்கு நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பு முக்கியமானது. நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதில் கப்பல்படை முக்கிய பங்கு வகிக்கிறது. 
  • இந்தியா-பாக்., இடையே 1971 டிச., 4ல் நடந்த போரில் 'ஆப்பரேஷன் டிரைடன்ட்' என்ற பெயரில் இந்திய கப்பல்படை பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. 
  • இதனை நினைவுபடுத்தும் விதமாக டிச.,4ம் தேதி இந்திய கப்பல்படை தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் கப்பல்படை சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
வரலாறு
  • இந்திய கப்பல்படை 1612ல் கிழக்கு இந்திய கம்பெனியால் தொடங்கப்பட்டது. 1830ல் ஆங்கிலேயரால் 'மெஜஸ்டி இந்திய கப்பல் படை' எனவும், 1934ல் 'ராயல் இந்திய கப்பல்படை' எனவும் பெயர் மாற்றம் பெற்றது. 
  • பிரிவினைக்குப்பின் இரண்டாக பிரிக்கப்பட்டது. படை பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவிடம் சேர்ந்தது. 1950 ஜன., 26ல் 'ராயல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'இந்திய கப்பல்படை' என மாறியது.
  • 1958 ஏப்., 22ல் இந்தியா சார்பில் முதல் கப்பல்படை தளபதியாக ஆர்.டி.கட்டாரி பொறுப்பேற்றார். பணிகள்: * இந்திய கடல் எல்லைகளை கண்காணித்து, எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்தல்.
  • கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்து, துறைமுகங்களில் கடல் வணிகம் சிறப்பாக நடைபெற உதவுதல்.* ராணுவத்தின் மற்ற பிரிவுகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதி பணிகளில் ஈடுபடுதல்.
  • பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுதல். ஐந்து: உலகின் ஏழாவது பெரிய கப்பல்படையாக இந்தியா திகழ்கிறது. 3 மேற்கு (மும்பை), கிழக்கு (விசாகபட்டினம்), தெற்கு (கொச்சி) என மூன்று கப்பல்படை தளங்கள் உள்ளன.
  • அந்தமானின் போர்ட் பிளேரில் முப்படைக்கும் சேர்த்து தளம் அமைக்கப்பட்டுள்ளது. போர் களத்தில் சுதந்திரத்துக்குப் பின், முதன்முதலில் 1961ல் கோவாவில் 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில், போர்ச்சுகீசிய படைக்கு எதிராக கப்பல் படை போரிட்டது. 
  • முடிவில் இந்தியாவுடன் கோவா சேர்க்கப்பட்டது. 1965, 1971ல் பாக்.,கிற்கு எதிரான போரில் பங்கேற்றது. 295 இந்திய கப்பல்படையில் 295 போர்க்கப்பல்கள் உள்ளன. 62 2017 ஜூலை 1 கணக்கின் படி, 67,252 ஆயிரம் வீரர்கள் கப்பல்படையில் பணியாற்றுகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel