Type Here to Get Search Results !

3rd DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கி.பி 16 -ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அருணாசல புராணம்
  • அருணாசல புராணம், கி.பி 16-ம் நூற்றாண்டில் சைவ எல்லப்பநாவலர் என்பவரால் இயற்றப்பட்டது. தற்போது அந்தப் புராணத்தின் மூலமும் உரையும் கொண்ட ஓலைச்சுவடி பிரதிகள் கிடைத்துள்ளன.
  • அவை கி.பி 16-ம் நூற்றாண்டில் சைவ எல்லப்பநாவலரால் இயற்றப்பட்ட அருணாசல புராணத்தின் ஓலைச் சுவடி பிரதிகள் என்பது தெரியவந்தன. 
  • அடுத்த ஓலையில் அருணாசல புராணத்தின் பாயிரச் சிறப்பு 21 பாடல்களில் எழுதப்பட்டுள்ளது. பிறகு, `3 கிரந்தங்களில் (வடமொழி) சொல்லப்பட்டதைத் தமிழில் எழுதினேன்' என்று சிதம்பரப் பண்டாரம் குறிப்பிடுகிறார். 
  • மூல அருணாசல புராணத்தை எழுதிய சைவ எல்லப்பநாவலர் இரண்டு கிரந்தங்களில், வடமொழி சிவபுராணத்தில் ருத்திர சங்கிதை மற்றும் லிங்க புராணத்திலும் இந்தக் கருத்துகளை எடுத்து இயற்றியதாகச் சொல்லியுள்ள நிலையில், அதைப் படியெடுத்த சிதம்பரப் பண்டாரம் 3 கிரந்தங்களில் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். 
  • மூல புராணம் 649 பாடல்கள் 14 சருக்கங்களாக இருந்த நிலையில் படியெடுத்த சிதம்பரப் பண்டாரம், புதிதாகப் பாடல்கள் எழுதி விரிவுபடுத்தினாரா என்பது தெரியவில்லை. ஓலைச் சுவடிகள் மோசமான நிலையில் மிகவும் சிதைந்து காணப்படுகின்றன.
தூய்மை கல்வி நிறுவனங்கள் தமிழகத்துக்கு மூன்று விருதுகள்
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய, தூய்மையான கல்வி நிறுவனங்களுக்கான போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டது. 
  • பல்வேறு பிரிவுகளில், கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
  • நாடு முழுவதும் உள்ள, 7,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதில் தரம் பிரிக்கப்பட்டன. அதில், 52 கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 
  • ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளில், சென்னை எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துக்கு விருது வழங்கப்பட்டது.
  • கல்லூரிகள் பிரிவில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.
கூகுளின் 'ஆல்பபெட்' சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியமனம்
  • கூகுள் நிறுவனத்தினை தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
  • தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. 
  • இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவரும் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டனர். 
  • அதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கூடுதலாக சுந்தர் பிச்சை கவனிப்பார்.



மருத்துவ புதுமை மையம்: இந்தியா, ஸ்வீடன் ஒப்பந்தம்
  • மருத்துவ துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவ புதுமை மையம் அமைக்க, இந்தியாவும், ஐரோப்பிய நாடான ஸ்வீடனும் ஒப்பந்தம் செய்துள்ளன. ஸ்வீடன் அரசர் கார்ல் கட்சப், அரசி சில்வியா ஆகியோர் ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். 
  • டில்லி எய்ம்ஸ், ஜோத்பூர் எய்ம்ஸ் மற்றும் டில்லியில் உள்ள ஸ்வீடன் வர்த்தக கமிஷனர் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த மையத்தை அமைக்க உள்ளன.
  • இந்தியா மற்றும் ஸ்வீடன் இணைந்து மருத்துவ துறையில், 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அதன் அடுத்தக் கட்டமாக, மருத்துவத் துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், புதுமையான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யவும், இந்த மையம் அமைக்கப்படுகிறது. 
பஞ்சாப் அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான புதிய பாதுகாப்புத் திட்டம்
  • இரவு நேரங்களில் எளிதாக வீட்டிற்குச் செல்ல முடியாமல் வெளியிடங்களில் தவிக்கும் பெண்களுக்கு உதவும் வகையிலான ஒரு புதிய பாதுகாப்புத் திட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
  • இதனையடுத்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி, இரவுநேரத்தில் வெளியிடங்களில் தவிக்கும் பெண்கள், 100 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து தெரிவித்தால் போதும்.
  • காவல் துறையினர் அந்த இடத்தி‍ற்கே வந்து, சம்பந்தப்பட்டப் பெண்ணை மீட்டு, வீட்டில் கொண்டுபோய் பத்திரமாக சேர்ப்பர். மேலும், இரவு 9 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை தங்களின் பாதுகாப்பிற்காக பெண்கள் அழைக்கும் வகையில் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதன்படி, 100, 112 மற்றும் 181 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டால், அது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே ரேஷன் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்
  • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி தகுதியுள்ள பயனாளிகள் தங்களுக்குரிய உணவுப் பொருள்களை இந்தியா முழுவதும் எந்த நியாய விலை கடையிலும் தாங்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டு மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
  • இந்த திட்டத்தை பயனாளிகளின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள மின்னணு கையடக்க விற்பனை கருவிகளில் இணைத்த பின்புதான் நிறைவேற்ற முடியும்.
  • இதற்காக மாநிலங்களில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் கையடக்க விற்பனை கருவிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் நாடு முழுவதும் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.



MHRD-ன் தூய்மையான கல்லூரி பட்டியலில் IIT கௌஹாத்தி
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான வருடாந்திர 'Swachh Campus Ranking 2019' மூன்றாம் பதிப்பில் 'Residential University - AICTE' பிரிவில் IITG மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தி பாலோன் டி'ஒர் விருது மன்னன் மெஸ்ஸி
  • தி பாலோன் டி'ஒர் (கோல்டன் பால்) ஆண்டுதோறும் பிரான்ஸ் கால்பந்து அமைப்பால் வழங்கப்படும் விருது. இது 1956 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 2010 மற்றும் 2015-க்கு இடையில், ஃபிஃபாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
  • இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் ஃபிஃபா பாலோன் டி'ஒர் என்று வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் 2016-ல் முடிவடைந்தது. இந்த விருது பழைய நிலையான பாலோன் டி'ஒருக்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில் ஃபிஃபா தனது சொந்த வருடாந்திர விருதுக்குத் திரும்பியது.
  • 2019 ஆண்டுக்கான பாலோன் டி'ஒர் விருது லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மெஸ்ஸி வாங்குவது ஆறாவது முறையாகும். இந்த விருதுக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்டது இவர்தான். இதுவரை 12 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 
  • 2018-ம் ஆண்டுக்கு முன்புவரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் மட்டுமே இந்த விருதைப் பெற்று வந்தனர். லிவர்பூல் அணியைச் சேர்ந்த அல்லிசனுக்கு சிறந்த கோல் கீப்பர்க்கான விருது வழங்கப்பட்டது.
தெற்காசிய விளையாட்டு போட்டி
  • தெற்காசிய விளையாட்டு வாலிபால் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் கைப்பற்றியது. பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தியது.
  • நேபாளத்தில்13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. திருப்புரேஷ்வரில் வாலிபால் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. முதல் செட்டை பாகிஸ்தான் அணி 25-20 என கைப்பற்றியது. பின் எழுச்சி பெற்ற இந்திய அணி இரண்டாவது செட்டை 25-15 என தனதாக்கியது. மூன்றாவது செட்டிலும் 25-17 என வென்றது இந்தியா. நான்காவது செட்டை இந்தியா 29-27 என கைப்பற்றியது. முடிவில் இந்திய அணி 3-1 (20-25, 25-15, 25-17, 29-27) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது.
  • பெண்கள் பிரிவு பைனலில் இந்தியா, நேபாளம் மோதின. முதல் இரு செட்டை இரு அணிகளும் 25-17, 23-25 என மாறி மாறி கைப்பற்றின. 3, 4வது செட்டையும் நேபாளம் (25-21), இந்தியா (25-20) வென்றன. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த கடைசி மற்றும் ஐந்தாவது செட்டில் இந்தியா 15-6 எளிதாக சாதித்தது. முடிவில் 3-2 என்ற செட்கணக்கில் வென்ற இந்தியா தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
  • தெற்காசிய பெண்கள் கால்பந்தில் இந்திய அணி நேற்று 5-0 என்ற கணக்கில் மாலத்தீவு அணியை வென்றது. இந்தியாவின் பாலா தேவி 2, கிரேஸ், மணிஷா, ஜபமணி தலா 1 கோல் அடித்தனர்.
  • நேற்று நடந்த 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார், 3 நிமிடம், 54.18 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். சக வீரர் அஜித் குமார் (3 நிமிடம், 57.18 வினாடி) இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். பெண்கள் ஓட்டத்தில் இந்தியாவின் சாந்தா (4 நிமிடம், 35.51 வினாடி), சித்ரா (4 நிமிடம், 35.46 வினாடி) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
  • உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஜிஸ்னா மேத்யூ, 1.73 மீ., தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். சக வீராங்கனை ருபினாவுக்கு (1.69 மீ.,) வெண்கலம் கிடைத்தது. ஆண்கள் பிரிவில் சர்வேஷ் (2.21 மீ.,), சேத்தன் (2.16 மீ.,) தங்கம், வெள்ளி கைப்பற்றினர்.
  • 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் தமிழக வீராங்கனை அர்ச்சனா (11.80 வினாடி) தங்கம் வென்றார். நேபாளத்தில் நடக்கும் தெற்காசிய விளையாட்டில் அதிவேக வீராங்கனை என்ற பெருமை பெற்றார். நேற்று தடகளத்தில் மட்டும் 4 தங்கம், 4 வெள்ளி உட்பட 10 பதக்கம் வென்றது இந்தியா.
  • தெற்காசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதல் 10 மீ., ஏர்ரைபிள் பிரிவு பைனலில் இந்தியாவின் 19 வயது வீராங்கனை மெகுலி கோஷ், 253.3 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இந்தியாவின் ஸ்ரீயன்கா (250.8) வெள்ளி, ஸ்ரேயா (227.2) வெண்கலம் பெற்றனர்.
  • ஆண்கள் 50 மீ., 'ரைபிள் 3 பொசிசனில்' இந்தியாவின் செயின் சிங் (1179 புள்ளி) தங்கம், அகில் ஷெரோன் வெள்ளி வென்றனர்.
  • இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்கள் வென்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேபாளம் 44 பதக்கங்களுடன் (23 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel