- நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா திட்டத்தை, டில்லியில் விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- முதல் கட்டமாக குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
- பின்னர் தற்போது துவக்கப்பட்ட திட்டங்கள் உ.பி.,யை மாற்றும். இந்த திட்டங்கள் வாஜ்பாயின் மனதுக்கு நெருக்கமானவை. வாஜ்பாயின் கொள்கைகள் இன்னும் நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளது.
- அனைத்து வீடுகளுக்கும், சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தற்போது அமல்படுத்தப்பட்ட திட்டம் மூலம் 7 மாநிலம், 78 ஜில்லாக்கள், 8300 கிராமங்கள் பயன்பெறும்.
- அடல் ஜல் யோஜனா திட்டத்தில், ஒவ்வொரு குடிமகனும் முக்கிய பங்கு உள்ளது.தண்ணீர் பிரச்னையை நாம் எதிர்கொள்வதை மறுக்க முடியாது.
- குடிநீர் பிரச்னையை சமாளிக்க, நாடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேசிய அளவில் பங்களிப்பு தேவைப்படுகிறது. தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன. குடிநீரை சார்ந்தே, விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி அமைந்துள்ளது.
- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட பகுதியில் இருந்து நான் வந்துள்ளேன்.
தண்ணீர் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், பெண்களை பங்கேற்க வைப்பது முக்கியமானதாகும். நீர் சேமிப்பு திட்டங்களில், ஒவ்வொரு விவசாயியும் பங்கேற்க வேண்டும். இதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.- விவசாயத்திற்கு அதிகநீர் பயன்படுத்தும் திட்டத்திலிருந்து சொட்டு நீர் பாசன முறையை நோக்கி நாம் மாற வேண்டும். 3 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் கிடைக்கும் வசதி உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக ரூ. 3 லட்சம் கோடி செலவு செய்யப்பட உள்ளது.தண்ணீரை சேமிக்க உழைப்பது நமது கடமை.
- ஒவ்வொரு சொட்டு நீரும் இன்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும் தண்ணீரை சேமிப்பதற்கு என சொந்தமாக திட்டத்தை உருவாக்க வேண்டும். தண்ணீர் சேமிப்பு குறித்து கிராம மக்களிடம் இருந்து நகர்ப்புற வாசிகள் கற்று கொள்ள வேண்டும்.
- தண்ணீரை சேமிக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களும், சுய சார்புடையதாக மாற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா / Atal Bhujal Yojana
December 26, 2019
0