Type Here to Get Search Results !

25th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா 
 • நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா திட்டத்தை, டில்லியில் விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 • முதல் கட்டமாக குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், வாஜ்பாயின் கனவுகளை நிறைவேற்றுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். 
 • தற்போது துவக்கப்பட்ட திட்டங்கள் உ.பி.,யை மாற்றும். இந்த திட்டங்கள் வாஜ்பாயின் மனதுக்கு நெருக்கமானவை. வாஜ்பாயின் கொள்கைகள் இன்னும் நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளது. 
 • அனைத்து வீடுகளுக்கும், சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தற்போது அமல்படுத்தப்பட்ட திட்டம் மூலம் 7 மாநிலம், 78 ஜில்லாக்கள், 8300 கிராமங்கள் பயன்பெறும்.
 • அடல் ஜல் யோஜனா திட்டத்தில், ஒவ்வொரு குடிமகனும் முக்கிய பங்கு உள்ளது.தண்ணீர் பிரச்னையை நாம் எதிர்கொள்வதை மறுக்க முடியாது.குடிநீர் பிரச்னையை சமாளிக்க, நாடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேசிய அளவில் பங்களிப்பு தேவைப்படுகிறது. 
 • தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன. குடிநீரை சார்ந்தே, விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி அமைந்துள்ளது.
 • கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட பகுதியில் இருந்து நான் வந்துள்ளேன்.
 • தண்ணீர் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், பெண்களை பங்கேற்க வைப்பது முக்கியமானதாகும். நீர் சேமிப்பு திட்டங்களில், ஒவ்வொரு விவசாயியும் பங்கேற்க வேண்டும். இதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
 • விவசாயத்திற்கு அதிகநீர் பயன்படுத்தும் திட்டத்திலிருந்து சொட்டு நீர் பாசன முறையை நோக்கி நாம் மாற வேண்டும். 3 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் கிடைக்கும் வசதி உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக ரூ. 3 லட்சம் கோடி செலவு செய்யப்பட உள்ளது.தண்ணீரை சேமிக்க உழைப்பது நமது கடமை.
 • ஒவ்வொரு சொட்டு நீரும் இன்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும் தண்ணீரை சேமிப்பதற்கு என சொந்தமாக திட்டத்தை உருவாக்க வேண்டும். 
 • தண்ணீர் சேமிப்பு குறித்து கிராம மக்களிடம் இருந்து நகர்ப்புற வாசிகள் கற்று கொள்ள வேண்டும். தண்ணீரை சேமிக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களும், சுய சார்புடையதாக மாற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.உத்திரப்பிரதேசத்தில் திருநங்கைகளுக்கான நாட்டின் முதல் பல்கலைக்கழகம்
 • உத்திரப்பிரதேச மாநிலம் குஷிங்கர் மாவட்டத்திலுள்ள பாசில் நகரில், திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் அமைகிறது. இந்தப் பல்கலையில், 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 • அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் இரண்டு குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படும் பின்னர் அடுத்தடுத்த மாதங்களான பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பிற வகுப்புகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ: வாஜ்பாய் உருவ சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
 • உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தான் அதிக முறைகள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். மொத்தம் பாராளுமன்றத்துக்கு 9 தடவை தேர்வாகி எம்.பி.ஆக இருந்துள்ளார். இதை நினைவு கூறும் விதமாக லக்னோவில் வாஜ்பாய்க்கு சுமார் 25 அடி உயரத்துக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 • இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாஜ்பாய் சிலையை திறந்து வைக்கிறார். இதே விழாவில் லக்னோவில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அவசர ஊர்தி சங்கத்தின் மாநில மைய தலைவர் நியமனம்
 • செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அசோசியேஷன் என்று அழைக்கப்படும், புனித ஜான் அவசர ஊர்தி சங்கத்தின், தேசிய தலைவராக, ஜனாதிபதி உள்ளார்.ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவோருக்கு, இந்த மையம் சார்பில், முதலுதவி சிகிச்சைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 
 • இங்கு பயிற்சி பெறுவோருக்கு, ஜனாதிபதி ஒப்புதலுடன் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன. இச்சங்கத்தின் தமிழக மைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெகதீசனை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
 • பணி நியமன ஆணையை, கவர்னர் மாளிகையில் நேற்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஜெகதீசனிடம் வழங்கினார். இந்தப் பதவியில், ஜெகதீசன் மூன்று ஆண்டுகள் இருப்பார். 
 • சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, ஜெகதீசன் இருந்தபோது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இவர், எத்திராஜ் கல்லுாரி அறக்கட்டளை தலைவராகவும், அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.கார்கில் நாயகன்' மிக்-27 ஓய்வு
 • கார்கில் போரில் வெற்றி வாகை சூடிய, 'மிக்-27' ரக போர் விமானங்கள், டிச.,27 ஓய்வு பெறுகின்றன. மிக்-27 விமானங்கள் ஜோத்பூரில் இறுதியாக பறக்கும் போது, அவற்றுக்கு மரபு ரீதியான விடை அளிக்கப்பட உள்ளது.
 • கடந்த 1999ம் ஆண்டு, காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில், பாகிஸ்தான் படை ஊடுருவி ஆக்கிரமித்தது. இதனையடுத்து, மே 3ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரையில் இந்தியா - பாக்., இடையே கார்கில் போர் நடந்தது. 
 • இந்த போரில் முக்கிய பங்காற்றிய 'மிக்-27' ரக போர் விமானங்கள், இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருந்தது.ரஷ்ய தயாரிப்பான 'மிக்-27' ரக போர் விமானங்கள், இந்திய விமானப்படையில், கடந்த 1981ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. 
 • ராணுவத்தின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள விமான படை பிரிவில் இவைகள் இயங்கி வந்தன. இந்நிலையில், 38 ஆண்டுகள் பணியாற்றிய அவைகளுக்கு, ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. 
 • ஜோத்பூர் விமானத்தளத்தில் இயங்கி வந்த 'மிக்-27'ன் இரு ஸ்குவாட்ரான்களில் ஒன்றுக்கு, இந்த ஆண்டின் துவக்கத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கடைசி ஸ்குவாட்ரானுக்கும் நாளையுடன் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.'மிக்-27'ன் கடைசி ஸ்குவாட்ரானில் 7 விமானங்கள் உள்ளன. 
 • இவை அனைத்துக்கும் ஜோத்பூரில் பிரியாவிடை அளிக்கப்பட உள்ளது. அவை இறுதியாக பறக்கும் போது, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு மரபு ரீதியான விடை அளிக்கப்படும். 
 • உலகின் வேறு எந்த நாட்டிலும், 'மிக்-27' விமான சேவை இல்லாததால், இதுவே அதன் கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி-குவைத் ஒப்பந்தம்
 • மேற்கு ஆசியாவைச் சேர்ந்த சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளுக்கு இடையே எல்லையோரம் உள்ள எண்ணெய் வளத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஐந்து ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது. இதில் தற்போது சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. 
 • இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் அமைச்சர்கள் கையொப்பமிட்டனர். சர்ச்சைக்குரிய பகுதியில் 2015 வரை தினமும் 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட மோதலால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது
 • இலங்கை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கூறுகையில், இலங்கையின் சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது, சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும். 
 • இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகிறது. அதுபோல இலங்கையின் மொழியில் மட்டுமே பாடப்படும், என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel