சென்னை குப்பை கையாள ஸ்பெயின் நிறுவனத்திற்கு... ரூ. 3,896.26 கோடி வழங்கியது மாநகராட்சி
- சென்னை மாநகராட்சியில், ஏழு மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, ஸ்பெயின் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, எட்டு ஆண்டுகளுக்கு, ரூபாயை, மாநகராட்சி வழங்க உள்ளது.சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்கள் உள்ளன.
- இதில், தினமும், 5,400 டன் குப்பை சேகரிக்கப்படுகின்றது. அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மூன்று மண்டலங்களில், குப்பை யைாளும் பணி, ராம்கி நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது.
- இந்த நிறுவனத்திற்கு, எடைக்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டது.இந்த நிறுவனத்தின் மீது, பல்வேறு முறைகேடு புகார்களை, அதன் ஊழியர்களே மாநகராட்சியிடம் அளித்துள்ளனர்.
- இந்நிலையில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய ஏழு மண்டலங்கள், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 'உர்பேசர்' மற்றும் இந்தியாவைச் சேர்ந்த, 'சுமித் பெசிலிட்டிஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு, மாநகராட்சி பணி ஆணை வழங்கியுள்ளது.
- ஒப்பந்தப்படி, இந்நிறுவனங்கள், குப்பையை தரம் பிரித்து பெறுதல் உள்ளிட்டவைக்கு, 33 கட்டுப்பாடுகளின் அடிப்படையில், பணம் வழங்கப்பட உள்ளன.
- அதன்படி, எட்டு ஆண்டுகள், அந்நிறுவனங்கள் குப்பையை கையாள்வதற்கு, 3,896.26 கோடி ரூபாயை மாநகராட்சி வழங்க உள்ளது.
வாகனக் கடன் சேவை: அசோக் லேலண்டு - யெஸ் வங்கி ஒப்பந்தம்
- வாகனக் கடன் சேவை வழங்குவதற்காக ஹிந்துஜா குழுமத்தைச் சோந்த அசோக் லேலாண்டு நிறுவனமும், யெஸ் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
- வாடிக்கையாளா்களுக்கு வாகனக் கடன் சேவையை 2 ஆண்டுகளுக்கு இணைந்து வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை யெஸ் வங்கியுடன் மேற்கொண்டுள்ளோம்.
- வாகனத் துறையில் அசோக் லேண்டின் அனுபவமும், கடன் சேவையில் யேஸ் வங்கியின் அனுபவமும் இணைந்து, எங்களது வாடிக்கையாளா்களுக்கான வாகனக் கடன் சேவையை மேம்படுத்தும்.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரின் அடையாளங்களையும் பதிவு செய்ய தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இதற்கு அரசுக்கு 3,941 கோடி ரூபாய் செலவாகும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
- தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொத்தம் ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தயாரிப்பதற்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையை மறுசீரமைக்க மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடியது. அப்போது ரயில்வே துறையை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- அதன்படி ரயில்வே துறையில் மொத்தம் 8 பேர் நிர்வாக ரீதியிலான அதிகாரிகள் இருந்த நிலையில் அவற்றை குறைத்து 4 உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கொண்டு வரப்படும்.
- ரயில்வே துறையில் உள்கட்டமைப்பு, நிதி, இயக்கம், சீரமைத்தல் வர்த்தக வளர்ச்சிக்காகவும் உறுப்பினர்கள் இருப்பர். ரயில்வே ஊழியர்களையும் ஒன்றாக இணைத்து இந்திய ரயில்வே நிர்வாக சேவை என அழைக்கப்படும். இதற்கான அறிவிப்புகளை பியூஷ் கோயல் வழங்கினார்.
- அவர் கூறுகையில் குரூப் ஏ சேவையில் இருக்கும் மொத்தம் 8 குழுவினரும் ஒன்றிணைக்கப்படுவர். ரயில்வே துறையை நவீனமயமாக்குகிறோம்.
- இது ஒரு பெரிய திருப்புமுனையாகும். துறைவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. முடிவெடுப்பதை விரைவுப்படுத்துவதையும் நிறுவனத்திற்கான ஒத்திசைவான பார்வையை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டது.
- அடுத்த ஆட்கள் தேர்வு முறையின் போது ஐஆர்எம்எஸ் அமல்படுத்தப்படும். பயணிகள் ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க தங்க நாற்கர திட்டத்தை இரு பகுதிகளாக பிரிக்க இந்திய ரயில்வே துறை மேம்படுத்தி வருகிறது. உள்கட்டமைப்பு மேம்படுத்துவது 2 முதல் 3 ஆண்டுகளாகும்.
- திட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டால் டெல்லியிலிருந்து மும்பைக்கு 10 மணி நேரத்திலும், டெல்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு 12 மணி நேரத்திலும் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
முப்படைகளுக்கும் தலைமை தளபதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், முப்படைகளுக்கு ஒரே தளபதியாக, தலைமை தளபதி பொறுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
- இதனுடன் ராணுவ விவகாரத் துறை (Department of Military affairs) எனும் புதிய துறையை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- புதியதாக நியமிக்கப்படும் தலைமை தளபதி இந்த துறைக்கு தலைவராக இருப்பபார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை தளபதி பதவிக்கு வருபவர்களுக்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் முப்படைகளுக்கும் இணைந்த தலைமை தளபதிக்கு வருபவர்கள், 4 ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ள ஜெனரல்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
- தனிப்பட்ட முறையில், முப்படை தளபதிகளின் ஆலோசகள் இன்றி அவர்கள் எந்வொரு ராணுவ முடிவும் எடுக்கக்கூடாது. புதியதாக தலைமை தளபதி பதவி ஏற்பவர்களுக்கு 5 ஸ்டார் அந்தஸ்து வழங்கப்படும்
- அவர்கள் முப்படை தலைவர் பதவி பணி ஓய்வுபெற்ற பின்பு அடுத்த 5 ஆண்டுகள் எந்தவொரு அரசு துறையிலோ, தனியார் துறையிலோ பணியாற்றக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த பரிந்துரைகள், ஏற்கனவே கார்க்கில் போருக்கு பிறகு, 20 ஆண்டுகளுக்கு முன்பே, கே.சுப்பிரமணியம் கமிட்டி, மத்தியஅரசு பரிந்துரை செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
- கே.சுப்பிரமணியம் என்பவர், தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்கரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம்
- தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் 25 மீட்டர் சீனியர், ஜூனியர் பிரிவில் போட்டியில் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார்.
கடந்த 10 ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் அஸ்வின்
- 2020ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் 2019 ஆண்டில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் கிரிக்கெட் துறையில் பெரும் சாதனை நிகழ்த்தியவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது.
- இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வருட சாதனையை மட்டுமல்லாமல் கடந்த 10 வருடத்தில் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.
- சர்வதேச போட்டிகளில் 2011 முதல் இவர் வீழ்த்திய விக்கெட்டுகள் மொத்தம் 564. அவரது இந்த சாதனையை பாராட்டி ஐசிசி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
- தொடர்ந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் 535 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், ஸ்டூவர் ப்ராட் 525 விக்கட்டுகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.