Type Here to Get Search Results !

7th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,410 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்தில் 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டப்பணிகளுக்காக ரூ.1,979 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட (ரூ.879 கோடி) நிதி உடன் ஒப்பிடும்போது, 225 சதவீதம் அதிகம்.
  • தமிழகத்தில் 2019-20-ஆம் ஆண்டில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டப் பணிகளுக்காக ரூ.2,410 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட (ரூ.879) நிதியுடன் ஒப்பிடும் போது, 274 சதவீதம் அதிகம்.
நீட் பயிற்சிக்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
  • அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
24 மணிநேரமும் நெப்ட் ஆன்லைன் சேவை: ரிசர்வ் வங்கி முடிவு
  • நெப்ட் சேவையை விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரத்திற்கும் கொண்டு வர ரிசர்வ வங்கி முடிவு செய்துள்ளது.நெப்ட் எனப்படும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை தற்போது வாரத்தின் வேலை நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. 
  • வேலைநாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே இச்சேவை கிடைத்து வந்தது. சனிக்கிழமை மட்டும் காலை 8 மணி தொடங்கி மதியம் 1 வரை இச்சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. 
சர்வதேச திரைப்பட விழா சென்னையில் 12ம் தேதி துவக்கம்
  • சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும், 12ம் தேதி துவங்குகிறது. விழாவில், நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. 'இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்' சார்பில், 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும், 12ம் தேதி, கலைவாணர் அரங்கில் துவங்குகிறது; 
  • 19ம் தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில், 75 லட்ச ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது. 



டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் மோடி பங்கேற்பு
  • மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த காவல்துறை டிஜிபி., க்கள் மாநாட்டில் மோடி கலந்து கொண்டு பேசினார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அனைத்து மாநில காவல்துறை டிஜிபி., க்கள் மற்றும் ஜ.ஜி.,க்கள் மாநாடு நடக்கிறது. 
  • மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். 180 பேர் கலந்து கொள்ளும் மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 
கெரோலின் ஜுரி: திருமதி உலக அழகியாக இலங்கை பெண் தேர்வு
  • 2020ஆம் ஆண்டுக்கான திருமணமான உலக அழகி கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலேயே அவர் இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.
  • இந்த போட்டியின் இரண்டாவது இடத்தை அயர்லாந்து பெற்றுக் கொண்டதுடன், மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் வேஜின் தீவுகள் பெற்றுக் கொண்டுள்ளது.
தெற்காசிய விளையாட்டு போட்டி தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்
  • 13வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளம் காத்மாண்டுவில் நடக்கிறது. இதில் பளூ தூக்கும் போட்டியில் 87 கிலோ பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிபட்டியை சேர்ந்த அனுராதா தங்க பதக்கம் வென்றார். 
  • காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே அனுராதா தங்கம் வென்றுள்ளார், இவர் தஞ்சை தோகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel