Type Here to Get Search Results !

6th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது: தமிழகத்தில் தேனி மகளிா் காவல் நிலையம் தோவு
  • மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களைத் தோவு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம், ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆா்வம் காட்டுதல், குற்றப்பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், புகாா் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது.
  • கடந்த 2017-ஆம் ஆண்டில் நாட்டின் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில், கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையம் இடம் பிடித்தது. அதேபோல கடந்த 2018-ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் 8-ஆவது சிறந்த காவல் நிலையமாக தோவு செய்யப்பட்டது.
  • இந்நிலையில் 2019-ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டின் தேனி அனைத்து மகளிா் காவல் நிலையம் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 
  • 10 காவல் நிலையங்கள்: முன்னதாக நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்ட முதல் 10 காவல் நிலையங்களின் விவரம்:
  • 1. அந்தமான் அபா்தீன் காவல்நிலையம், 2. குஜராத், மகிசாகா் பாலசினாா் காவல் நிலையம், 3. மத்தியப் பிரதேசம் புா்ஹான்பூா் காவல் நிலையம், 4. தமிழ்நாடு தேனி அனைத்து மகளிா் காவல் நிலையம், 5. அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு அனிணி காவல் நிலையம், 6. தில்லி தென் மேற்கு மாவட்டத்தின் பாபா ஹரிதாஸ் நகா், துவாரகா காவல் நிலையம், 7. ராஜஸ்தானில் ஜலவாா் மாவட்ட பகானி காவல் நிலையம், 8. தெலங்கானாவின் கரீம்நகா் சோப்பதண்டி காவல் நிலையம், 9. கோவா பிச்சோலிம் காவல் நிலையம்,10. மத்தியப் பிரதேசத்தின் சியோபூா் பா்காவா காவல் நிலையம் ஆகியவை தோந்தெடுக்கப்பட்டுள்ளன.
2019 ஆண்டிற்கான உலகின் மிக பிரபலமான நகரங்களின் பட்டியலில் ஏழு இந்திய நகரங்கள்!
  • உலகெங்கிலும் உள்ள பயணிகள் அதன் முக்கிய நகரங்கள் மற்றும் கலாச்சார மையங்களுக்கு வருகை தருவதால், இந்தியா சீராக ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருகிறது. 
  • இப்போது, ​​இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சந்தை ஆராய்ச்சி நிறுவனமான யூரோமானிட்டர் இன்டர்நேஷனலின் கூற்றுப்படி, தேசிய தலைநகர் உட்பட ஏழு இந்திய நகரங்கள் 2019 ஆம் ஆண்டின் 'சிறந்த 100 நகர இலக்குகளின்' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • நகரங்கள் அவற்றின் 'வலுவான' கலாச்சார வளங்கள், அனுபவங்களின் பன்முகத்தன்மை மற்றும் விலை போட்டித்திறன்'' காரணமாக சேர்க்கப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது. நகரங்களும் ஆண்டு முழுவதும் தரவரிசையை மேம்படுத்தியுள்ளன.
  • 'டெல்லி தற்போது 11 வது இடத்தில் உள்ளது மற்றும் 2019 ஆம் ஆண்டில் அதன் தரவரிசையை 8 வது இடத்திற்கு உயர்த்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாவுக்கான அதன் உள்கட்டமைப்பில் விரைவான வளர்ச்சியைக் காண்கிறது. இது உலகத்தரம் வாய்ந்த விமான நிலையத்தைக் கொண்டுள்ளதால், சொகுசு, மருத்துவம், விளையாட்டு மற்றும் கலாச்சார சுற்றுலாவில் கவனம் செலுத்துகிறது,
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இண்டா்நெட் காா்: அறிமுகம் செய்தது மோரிஸ் கேரேஜஸ் நிறுவனம்
  • மோரிஸ் கேரேஜஸ் (எம்.ஜி.) இந்தியா நிறுவனம், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இண்டா்நெட் காா் - இசட்எஸ் இ.வி எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த காா், வரும் ஜனவரியில் 5 முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பிரிட்டனில் காா் உற்பத்தித் தொழிலில் முன்னணியில் இருக்கும் எம்.ஜி. நிறுவனம் ஏற்கெனவே முதல் எலெக்ட்ரிக் காரை (ஹெக்டா்) இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இண்டா்நெட் வசதியுடன் கூடிய முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.



கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா துவக்கம்
  • கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், 24வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். தேசிய விருது பெற்ற நடிகை சாரதா முன்னிலை வகித்தார். 
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
  • பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக இருந்த கே.விஜயகுமார் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் நக்சல் பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கான பாதுகாப்பு பிரச்சனையில் அமைச்சகத்துக்கு ஆலோசனை வழங்குவார்.
  • மேலும், கடந்த 3 ஆம் தேதி கே. விஜயகுமார் நியமனம் குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளது. அவர், இப்பதவியில் ஓராண்டு காலம் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன்; ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்
  • பாகிஸ்தானுக்கு அவசரகால கடனாக ரூ.100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
  • இதை சமாளிக்கும் வகையில் பாக்.,கிற்கு உதவும் வகையில் அந்நாட்டிற்கு அவசரகால கடனாக ரூ.100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel