Type Here to Get Search Results !

5th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு மீட்புப் பணிக்கான விருது
  • தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு மத்திய அரசின் தேசிய கடல்சாா் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கான விருது டிசம்பா் 18-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. இந்த விருது தமிழக காவல்துறைக்கு முதல் முறையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10 & +2 மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மோடியின் புதிய திட்டம்
  • பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக மாணவர்களை மாற்ற அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி திட்டம் 2020 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
  • இந்த திட்டத்தின் படி தேர்வுக்கு மாணவர்களின் தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு தேர்வுகள் அற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி (Pariksha pe charcha) திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. 
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு தேர்வுகளுக்கு பதிலாக தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தேர்வற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.



விஐடிக்கு மத்திய அரசின் இரு விருதுகள்
  • மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை சாா்பில் அகில இந்திய அளவில் வளாகத்தை தூய்மையாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடனும் பராமரித்து வரும் கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதன்கிழமை வழங்கப்பட்டது.
  • இதில், வேலூா் விஐடி பல்கலைக்கழகத்துக்கு தூய்மை, பொழிவுறு வளாகம்-2019 என்ற விருதும், உயா் கல்வி நிறுவனங்களுக்கான சுத்தமான வளாகம்-2019 என்ற விருதும் அளிக்கப்பட்டுள்ளது. 
  • விஐடி வளாகத்தை தூய்மையாகவும், சுற்றுப்புறத்தை பசுமையாகவும், நீரை மறுசுழற்சி செய்தல் போன்ற காரணங்களுக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் உதவி மையம்; ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்கவும், மேம்படுத்தவும், நிர்பயா நிதியிலிருந்து, ரூ.100 கோடியைமத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
2020 - 2021-ம் ஆண்டுக்கான அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது 15-வது நிதி ஆணையம்
  • 2020 - 2021-ம் ஆண்டுக்கான அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் 15-வது நிதி ஆணையம் சமர்ப்பித்துள்ளது. என்.கே.சிங் தலைமையிலான நிதி ஆணையம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது.



நான்காம் தொழிலாளர் நல விதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்தியத் தொழிலாளர் சட்டம் பல பிரிவுகளாக இருந்தன. அவற்றை மாற்றி அனைத்தையும் ஒரே சட்டமாக இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி முந்தைய சட்டங்கள் ஒவ்வொரு விதியாக மாற்றப்பட்டு இந்த புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு வருகிறது.
  • மொத்முள்ள 44 சட்டப்பிரிவுகள் நான்கு விதிகளுக்குள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் விதியான ஊதிய விதி ஏற்கனவே நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றுள்ளது. அதன் பிறகு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், மற்றும் பணி நிலைமைகள் உள்ளிட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் விதியும் மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நான்காம் விதி ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த விதி மசோதாவை வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் ஒப்புதலுக்குத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசா்வ் வங்கி
  • பணவீக்கமானது அதன் நடுத்தர-கால இலக்கை தாண்டியுள்ளதை கருத்தில் கொண்டு ரிசா்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் 'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் செய்வதில்லை என நிதி கொள்கை குழு (எம்பிசி) ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து ரெப்போ ரேட் விகிதம் 5.15 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும்.
  • அதேபோன்று, வங்கிகள் குறுகிய கால அடிப்படையில் ரிசா்வ் வங்கிக்கு வழங்கும் கடனுக்கான 'ரிவா்ஸ் ரெப்போ ரேட்' வட்டி விகிதமும் முன்பிருந்ததைப் போல் 4.90 சதவீதமாகவே நீடிக்கும்.
தெற்காசிய விளையாட்டில் ஒரே நாளில் 54 பதக்கங்கள்
  • நேபாளத்தில் 13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. நேற்று நடந்த நீச்சல் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவித்தது. 200 மீ., பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் 16 வயது வீராங்கனை கவுரிகா சிங், 2 நிமிடம், 05.06 வினாடி நேரத்தில் வந்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சிவாங்கி (2 நிமிடம், 07.19 வினாடி) வெள்ளி கைப்பற்றினார்.
  • பெண்கள் 200 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவில் இந்தியாவின் 13 வயது வீராங்கனை அபேக் ஷா (2 நிமிடம், 38.05 வினாடி) தங்கம் தட்டிச் சென்றார். இதே பிரிவில் இந்திய வீரர்கள் லிக்கித், தனுஷ் என இருவரும் தங்கம், வெள்ளி கைப்பற்றினர். நேற்று நீச்சலில் மட்டும் 4 தங்கம் உட்பட 11 பதக்கம் கிடைத்தது.
  • பளுதுாக்குதலில் பெண்கள் 45 கி.கி., பிரிவில் இந்தியாவின் ஜிஜிலி, 'ஸ்னாட்ச்' (66), 'கிளீன் அண்டு ஜெர்க்' (85) முறையில் சேர்த்து 151 கி.கி., எடை துாக்கி தங்கம் வென்றார். 49 கி.கி., பிரிவில் இந்தியாவின் சினேகா (157 கி.கி.,) முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார்.
  • துப்பாக்கிசுடுதல் ஆண்கள் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் யஷ் வர்தன், ஜாதவ், பங்கஜ் அடங்கிய இந்திய அணி 1875.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியது. தனிநபர் பிரிவில் இந்தியாவின் பங்கஜ், 249.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஜாதவ் (248.7) வெள்ளிபதக்கம் பெற்றார்.
  • டேக்வாண்டோ பெண்கள் 49 கி.கி., போட்டியில் இந்தியாவின் பூர்வா தீக்சித் 14-6 என இலங்கையின் புஷ்பாவை வீழ்த்தி தங்கம் வென்றார். 67 கி.கி., பிரிவில் இந்திய வீராங்கனை ருச்சிகா, தங்கம் கைப்பற்றினார்.
  • பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், அஷ்மிதா என இருவரும் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிறில் வர்மா, ஆர்யமான் பைனலுக்கு நுழைந்தனர்.
  • பெண்கள் கால்பந்து போட்டியில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை வென்றது. இந்தியாவின் சந்தியா, ரத்தன்பாலா தேவி தலா 2 கோல், கிரேஸ், பாலா தேவி தலா ஒரு கோல் அடித்தனர்.
  • பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை 47-16 என வீழ்த்தியது. ஆண்கள் கபடியில் இந்திய அணி 49-16 என இலங்கையை சாய்த்தது.
  • இந்தியா 62 தங்கம், 41 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கங்கள் பெற்று, பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேபாளம் (101) அடுத்து உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel