ஹைபர்சானிக் ஏவுகணை ரஷ்ய சோதனை வெற்றி
- ரஷ்யாவின் முதல் 'ஆவன்கார்ட் ஹைபர்சானிக்' அதிநவீன ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக, ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கை ஷொய்கு தெரிவித்தார்.
- மணிக்கு, 33 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து தாக்க கூடிய உலகின் அதிபயங்கரமான ஏவுகணை சோதனையில், ரஷ்யா வெற்றி கண்டுள்ளதாக, அதிபர் புடின் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஜன., 19ல் புதிய தேஜஸ் ரயில்
- தனியார் மூலம் இயக்கப்படும், 'தேஜஸ் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவை, டில்லி - லக்னோ இடையே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு, 2020, ஜன., 17ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜன., 19ல் இருந்து ரயில் இயக்கப்பட உள்ளது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஊக்குவிக்க அரசு தீவிரம்
- அரசு வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆய்வு கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
- டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 1ம் தேதி முதல் சில பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய சாதனை
- நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 45 கோடி டாலா் (ரூ.3,190 கோடி) அதிகரித்து 45,494 கோடி டாலரை (ரூ.31.84 லட்சம் கோடி) எட்டியது. இது, முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
- இதற்கு முந்தைய வாரத்தில், செலாவணி கையிருப்பானது 107 கோடி டாலா் அதிகரித்து 45,449 கோடி டாலராக காணப்பட்டது.
- ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கமாக திகழும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 31 கோடி டாலா் உயா்ந்து 42,273 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு 16 கோடி டாலா் அதிகரித்து 2,713 கோடி டாலராக காணப்பட்டது.
- அதேசமயம், சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 10 லட்சம் டாலா் குறைந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.7 கோடி டாலா் சரிந்து 364 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இரவு 11 முதல் 1 மணி வரை 'நைட் வாக்' - பெண்கள் பாதுகாப்புக்கு கேரளாவின் புதுத் திட்டம்
- இரவு நேரங்களில் நடந்துசெல்லும் பெண்களைச் சீண்டுபவர்களைக் கண்டுபிடித்து, உடனே சிறைக்கு அனுப்பும் பெண்களின் 'நைட் வாக்' திட்டத்தை வரும் 29-ம் தேதி முதல் அமல்படுத்துகிறது கேரளா.
- இந்தத் திட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 மையங்களில் இரண்டு மூன்று பெண்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வார்கள். அவர்களை 200 மீட்டர் தொலைவிலிருந்து 25 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கண்காணிப்பார்கள்.
- இந்தக் குழுவில் போலீஸ், குடியிருப்போர் சங்கத்தினர், பெண்கள் முன்னேற்றத்திற்கான 'குடும்பஸ்ரீ' அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
- இரவில் நடமாடும் பெண்களிடம் யாராவது அத்துமீற முயன்றால், உடனடியாக அவர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
3 விபத்து; 0 உயிரிழப்பு; 2019 பாதுகாப்பான ஆண்டு!' ரயில்வே துறை பெருமிதம்
- 2019-ம் ஆண்டு, இன்னும் மூன்று நாள்களில் நிறைவடைந்து புதிய ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு, இந்திய ரயில்வே துறைக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளதாக அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.
- இந்திய ரயில்வே போக்குவரத்து வரலாற்றில் 2019-ம் ஆண்டு, அதிக பாதுகாப்பான ஆண்டாக இருந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
- அதன்படி,`2019-ம் ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் எந்த ஒரு பயணியும் உயிரிழக்கவில்லை. கடந்த 2018-19 ம் ஆண்டு, 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் ரயில்வே ஊழியர்கள். இதே எண்ணிக்கை 2017-18 ம் ஆண்டில் 28 ஆகவும் 2016-17- ம் ஆண்டில் 195 ஆகவும் இருந்தது.
- 1990-95-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு ரயில் விபத்தினால் உயிரிழப்பவர்களின் சராசரி எண்ணிக்கை 500-க்கும் மேல் இருந்துள்ளது. அது, பத்து ஆண்டுகளுக்குப் பிறகான புள்ளிவிவரத்தில், அதாவது 2013-18-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு சராசரியாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆகவும் குறைந்துள்ளது.ரயில்
போலி டாக்டர்களுக்கு ஏழு ஆண்டு சிறை? மருத்துவமனை பதிவு உரிமத்தில் திருத்தம்
- தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள், கிளினிக்குகள் பதிவு உரிமம் பெறுவது அவசியம்.
- மேலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்கவும் வேண்டும். பதிவு உரிமம் கோரி, 40 ஆயிரம் மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பிக்காத, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க, மருத்துவ சேவை இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
- இந்நிலையில், பதிவு உரிமம் சட்டத்தில் திருத்தம் செய்ய, சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைகள் குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
- மருத்துவமனைகள் தாங்கள் விளம்பரம் செய்யும் தகவல் குறித்து, மருத்துவ சேவைகள் இயக்குனரகத்திடம் விண்ணப்பித்து, அவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே விளம்பரம் செய்ய முடியும்.
- அதேபோல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள், முதல்முறை கண்டறியப்பட்டால், மூன்றாண்டு சிறை; இரண்டாம் முறை கண்டறியப்பட்டால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
2020 ஒலிம்பிக்கில் மேரிகோம் தேர்வு
- இந்தியவின் மேரி கோம் (36) குத்துச்சண்டை போட்டியில் இதுவரையில், உலக சாம்பியன்ஷிப்பில் 6 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றவர். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்காக தற்போது டெல்லியில் நடந்து வரும் போட்டியில் மேரிகோம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்,
- முன்னதாக, மேரிகோம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக 48 கி.கி., எடைப் பிரிவில் இருந்து 51 கி.கி., எடைப் பிரிவுக்கு மாறினார். இந்த எடைப் பிரிவில் ஏற்கெனவே சாதித்து வரும் தெலுங்கானா வீராங்கனை நிகாத் ஜரீன் (23) இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
- ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் சீனாவில் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. டெல்லியில் நடக்கும் குத்துச் சண்டை தேர்வு முகாமில் நேற்று பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
- இதில் 51 கி.கி., எடைப் பிரிவில் மேரி கோம், சக வீராங்கனை ரிது கிரேவலை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். 51 கிலோ எடைப் பிரிவில் 23 வயதான நிஹாத் ஸரினை தோற்கடித்தார் மேரி கோம்.
- டெல்லியில் நடைபெற்ற இறுதி போட்டியில், 9-1 என்ற புள்ளிக்கணக்கில் மேரி கோம் வெற்றிப் பெற்றார். 2020ல் நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் நேரடியாக தோவு செய்யப்பட்டார் என இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவா் அஜய் சிங் மகிழ்ச்சி பொங்க அறிவித்தார்.
மாநில நீச்சல் போட்டி: 3 புதிய சாதனை
- தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம், தென்மண்டல போட்டிக்கான (ஹைதராபாதில் ஜனவரி 3 முதல் 5 வரை நடைபெறுகிறது) தமிழக அணி வீரா், வீராங்கனைகள் தோவு செய்வதற்கான மாநில நீச்சல் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 650 வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.
- இந்த போட்டியில் முதல் நாளான வெள்ளிக்கிழமை 3 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. குரூப்-2 சிறுவா்களுக்கான 200மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சலில் திருநெல்வேலி வீரா் டி.ஜாசுவா தாமஸ்(பாலகிருஷ்ணா பள்ளி) போட்டி தூரத்தை 2 நிமிடம் 34.65 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா். முன்னதாக டி.எஸ்.பி.ஏ. அணி வீரா் தனுஷ் 2 நிமிடம் 37.42 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது.
- குரூப் 4 சிறுவா்களுக்கான 50மீ. பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் சென்னையிலுள்ள ஆா்கா அணி வீரா் சா்வபள்ளி சாய் ஆதித்யா போட்டி தூரத்தை 1 நிமிடம் 08.73 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா். முன்னதாக எஸ்.டி.ஏ.டி. மதுரை அணி வீரா் விகாஸ் 1 நிமிடம் 08.80 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது.
- பெண்கள் பிரிவில் குரூப் 4 சிறுமியா் பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் எஸ்.டி.ஏ.டி. ஏ.எஸ்.பி. அணி வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் போட்டி தூரத்தை 36.99 வினாடிகளில் நீந்தி கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா். முன்னதாக நிவ்யா ராஜா (ஆா்கா) 37.70 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.
வாழ்நாள் சாதனையாளர் விருது அஞ்சும் சோப்ரா, ஸ்ரீகாந்த் தேர்வு
- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருடாவருடம் விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
- இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதிற்கு இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
உலக பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்ற சூரத் இளம்பெண்
- குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா கணினி பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இவர் பளு தூக்குவது ஆண்களுக்கு மட்டுமானது அல்ல, பெண்களும் பளு தூக்கலாம் என நிரூபித்த பெண்.
- ரோமா ஷா அண்மையில் மாஸ்கோவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான உலக மூல பவர் லிஃப்டிங் கூட்டமைப்பு( World Raw Power lifting Federation ) போட்டியில் பங்கேற்றார்.
- இந்நிலையில், ரோமா ஷா மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் உள்பட சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். பின்னர் கடந்த ஆண்டும் அவர் வென்ற பதக்கங்களை சேர்த்தால், இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் அந்த இளம்பெண் குவித்திருக்கிறார்.
சிறப்புத் தூதரான மரடோனா
- ஆா்ஜென்டீனா கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரருமான மரடோனா (59), நகா்ப்புற திறந்தவெளி இடங்களை மீட்டு விளையாட்டு மைதானங்களாக மாற்றுவதற்கான சிறப்புத் தூதராக அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டுள்ளாா்.