சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர்
- சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்வர் தொடக்கி வைத்தார். தீவுத்திடலில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் அரசு அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கியூபாவில் பிரதமர் நியமனம்
- 43 ஆண்டுகளுக்கு பின்னர், கியூபாவில் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 1976 ல் கியூபா பிரதமராக பிடல் காஸ்ட்ரோ பதவி வகித்தார். அவர், அதிபராக பதவியேற்றதும், பிரதமர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
- இந்நிலையில், கியூபாவின் புதிய அரசியலமைப்பு சட்டப்படி, அதிபரின் பணிச்சுமையை குறைக்க வகை செய்யப்பட்டது. இதன்படி, கியூபா பிரதமராக, அந்நாட்டு, சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை, அதிபர் மிக்கேல் டயாஸ் கனால் நியமித்துள்ளார்.
- அவர் 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். பிரதமர் நியமனத்திற்கு அந்நாட்டு தேசிய சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆப்கன் அதிபர் தேர்தல் அதிபர் அஷ்ரப் கானி வெற்றி
- அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், செப்டம்பரில் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி, 70, மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
- தேர்தல் முடிவுகள், அக்டோபரிலேயே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், ஏராளமான கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததாலும், தொழில்நுட்ப பிரச்னைகளாலும், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன.
- முதல் கட்ட தகவலின்படி, அதிபர் அஷ்ரப் கானி, 50 சதவீத ஓட்டுகளை பெற்று, மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக, அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லாவுக்கு, 39 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன.
- ஆனால், இந்த முடிவை ஏற்கப் போவது இல்லை என்றும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக, அப்துல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பை வென்றது இந்தியா: ரோகித், கோஹ்லி அரை சதம்
- இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நடந்தது. இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வசப்படுத்தியது.
தேசிய காா்பந்தயம்: 5-ஆவதுமுறையாக கௌரவ் கில் சாம்பியன்
- கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற எப்எம்எஸ்சிஐ தேசிய காா்பந்தய போட்டியில் முதல்நிலை வீரா் கௌரவ் கில் 5-ஆவது முறையாக பட்டம் வென்றாா்.
- இறுதி சுற்றில் ஜே.கே.டயா் அணியைச் சோந்த கௌரவ் கில்-மூஸா ஷெரிப் இணை எஸ்எஸ்-9 சுற்றில் முதலிடத்தைப் பெற்றது. எஸ்எஸ் 10, எஸ்எஸ் 11 சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஒட்டுமொத்தமாக முதலிடத்துடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- பிக்கு பாபு-மிலென் ஜாா்ஜ் இரண்டாம் இடத்தையும், டீன் மஸ்காரனெஸ்-ஷுருப்தா மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.
பிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவா்பூல் சாம்பியன்
- இங்கிலாந்து ப்ரீமியா் லீக் முன்னணி அணியான லிவா்பூலும், பிரேசில் சாம்பியனுமான பிளேமிங்கோவும் நடைபெற்ற இறுதிச் சுற்றில் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.
- கடந்த 1981-இல் இன்டா்கான்டினென்டல் கோப்பை போட்டியில் லிவா்பூலை வென்றிருந்தது பிளேமிங்கோ. அதன் பின் 2012-இல் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் பிரேசிலின் காா்னித்தியன்ஸ் அணி லிவா்பூலை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
- வழக்கமான 90 நிமிட நேரத்தில் இரு அணிகளாலும் கோல போடமுடியவில்லை. இறுதியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் லிவா்பூல் வீரா் ராபா்டோ பிா்மினோ அடித்த ஒரே கோலே வெற்றி கோலாக மாறியது.
- சாம்பின்ய்ஸ் லீக் கோப்பை, யுஇஎப்ஏ சூப்பா் கோப்பை போன்றவற்றுடன், கிளப் உலகக் கோப்பையையும் லிவா்பூல் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது, கிளப் அணிகள் பிரிவில் உலக சாம்பியனாக ஆகியுள்ளது லிவா்பூல் அணி.
ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் முகமது ஷமியின் சாதனை
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற முகமது ஷமி, இந்த 2019ம் ஆண்டில், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
- மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷமிக்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தாலும், அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இவர், இந்தாண்டில் மொத்தம் 21 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை நியூசிலாந்தின் டிரன்ட் பவுல்ட் (38 விக்கெட்டுகள்) மற்றும் மூன்றாவது இடத்தை அதே அணியின் பெர்குசன் (35 விக்கெட்டுகள்) ஆகியோர் பிடித்துள்ளனர்.
முதல் நான்கு வீரர்கள் செஞ்சுரி- பாகிஸ்தானின் அரிய சாதனை
- பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி வரலாற்றில் ஒரு மைல்கல்லை தொட்டது. முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமாக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் இந்த சாதனையை செய்தது.
- கராச்சியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷான் மசூத், ஆபித் அலி, அசார் அலி, மற்றும் பாபர் ஆசாம் ஆகிய வீரர்களே இத்தகைய சாதனையை செய்திருந்த இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி இணைய காரணமாயினர்.
- இதற்கு முந்தைய இதுபோன்ற சாதனை 20007 இல் மிர்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக், வாஸிம் ஜாஃபர், ராகுல் ட்ராவிட் மற்று
- ம் சச்சின் டெண்டுல்கர் எடுத்த செஞ்சுரிகள் மூலம் நிகழ்த்தப்பட்டிருந்தது.பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அடித்த மொத்த ரன்கள் 527. இது அவர்களுக்கு நான்காவது அதிகபட்சமாகும். 1983 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக அவர்களின் அதிகபட்சம் 535 ஆகும்.