Type Here to Get Search Results !

21st DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கோவில்பாளையம் காலிங்கராயன் குளத்தில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
  • பத்தாம் நூற்றாண்டில் சோழ அரசின் கட்டுப்பாட்டில் கோநாட்டுத் தலைவரான வீரசோழன் வசம் கொங்கு பகுதி வந்துள்ளது. இந்த வீரசோழன் கொங்கு சோழர் என அறிஞர்களால் அழைக்கப்பட்ட அரச மரபின் தோற்றுவாய் ஆவார். 
  • அவருக்குப் பின் அவரது மகன் கோக்கலிமூர்க்கன் என்பவர் 24 ஆண்டுகள் கொங்கின் வடபகுதியை ஆட்சி புரிந்துள்ளார். காலிங்கராயன் குளத்தில் கிடைத்த கல்வெட்டு கோகலிமூர்க்கனின் மகனான ஸ்ரீ விக்கிரம சோழனின் பெயரைத் தாங்கியுள்ளது. 
  • இந்தப் பகுதியிலுள்ள பழமையான கற்றளி (கற்கோயில்) ஏதேனும் ஒன்றில் இந்தக் கல்வெட்டு இருந்திருக்க வேண்டும். இதன் உடைந்த பகுதிகள் கிடைத்தால் அதனை உறுதிப்படுத்த முடியும் என்றனர்.
தமிழக வேளாண் துறைக்கு 5-ஆவது முறையாக கிரிஷி கா்மான் விருது: ஜன. 3-இல் பிரதமா் வழங்குகிறாா்
  • தமிழக வேளாண்மைத் துறைக்கு ஐந்தாவது முறையாக கிரிஷி கா்மான் விருது அளிக்கப்பட உள்ளது. எண்ணெய் வித்துகள் உற்பத்திக்காக இந்த விருதினை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்குகிறது. 
  • பெங்களூரில் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தமிழக வேளாண்மைத் துறைக்கு இந்த விருதினை பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.
  • மேலும், வேளாண்மைத் துறை முற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தமிழகத்தைச் சோந்த விவசாயிகள் எஸ்.ஆா்.செந்தில்குமாா், பி.பாப்பாத்தி ஆகியோருக்கு விருதுடன், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் பிரதமா் மோடி அளிக்கவுள்ளாா்.
  • தனித்துவமான செயல்பாடுகள் மூலமாக பல்வேறு சாதனைகளைச் செய்ததற்காக கிரிஷ் கா்மான் விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2017-18-ஆம் ஆண்டுக்கான கிரிஷி கா்மான் விருதினை தமிழக வேளாண்மைத் துறை பெறவுள்ளது. 
  • கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை நான்கு முறை விருதுகளைப் பெற்றுள்ளது. இப்போது ஐந்தாவது முறையாக இந்த விருது பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



ஒடிசா சகோதரிகளுக்கு 'தேசிய வீரதீர விருது'
  • ''மகாநதியில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, துணிச்சலாக செயல்பட்டு, பத்து பேரை காப்பாற்றிய, சபீதா கிரி, பூர்ணிமா கிரி சகோதரிகள், 'தேசிய வீரதீர விருது'க்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பேராசிரியருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது
  • கும்பகோணத்தில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சீனிவாச ராமானுஜன் மையத்தில் பிரிட்டன் பேராசிரியருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.
`மகாத்மா ஜோதிராவ் பூலே' திட்டம்! - விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்த உத்தவ் தாக்கரே
  • மாநில அரசின் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. ``2019 செப்டம்பர் 30-ம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிர்க் கடன்கள் எனது அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்படும்.
  • அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி ஆகும். இந்தத் திட்டம் மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடித் திட்டம் என்று அழைக்கப்படும்' என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 
  • தள்ளுபடி தவிர, கடன்களைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்குச் சிறப்புத் திட்டம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்திய-ரஷ்ய ராணுவத்தினர் உத்தரபிரதேசத்தில் கூட்டுப்பயிற்சி
  • இந்தியா ரஷ்ய ராணுவத்தினர் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி, புனே மற்றும் கோவா ஆகிய நகரங்களில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயிற்சி செய்து வருகின்றனர்.
  • இந்திரா என்ற பெயரில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருநாடுகளின் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரைப்படையினரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இந்நிலையில் ஜான்சியில் இருநாட்டுத் தரைப்படையினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இருநாடுகளின் வலிமையை பறைசாற்றும் விதமாக ஒத்திகை அமைந்திருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel