ரூ.450 கோடியில் கோனே' நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை
- காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம், 'சிப்காட்' தொழிற்பூங்காவில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, 'கோனே' நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலை, 450 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.
- இங்கு, மின் துாக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிக்கப்பட உள்ளன. இவை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், உள்நாட்டிலேயே, 80 சதவீதம் தயாரிக்கப்படுகின்றன.
- இந்த தொழிற்சாலையின் திறப்பு விழா, அதன் வளாகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, தொழிற்சாலை திறந்து வைத்தார்.
- மனிதர்களை போலவே கால்நடைகளுக்கும் அவசர சிகிச்சை தேவைப்படும்போது அதற்கென தனி ஆம்புலன்ஸ் தேவை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது
- இந்த நிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ் சேவை இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
- "அம்மா" ஆம்புலன்ஸ் வாகனம் என்ற பெயர் வைக்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவையை இன்று தலைமை செயலகத்தில் கொடியசைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
குஜராத் தீவிரவாத, ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா ஜனாதிபதி ஒப்புதல்
- குஜராத் தீவிரவாத மற்றும் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
- தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கும் இந்த மசோதா முன்னதாக குஜராத் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா என்று பெயரிடப்பட்டு வந்தது. அதன் பிறகு, இந்த மசோதா 2004ம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- (2004ம் ஆண்டில் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர் இப்போது பிரதமராக இருக்கும் மோடி). ஆனால் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, 2015ம் ஆண்டு மசோதாவுக்கு பெயர் மாற்றப்பட்டது.
- குஜராத் தீவிரவாத மற்றும் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா என்று பெயரிடப்பட்டது. ஆனால், அதில் முக்கிய அம்சமாக, தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ ஆதாரமாக சமர்ப்பிக்கும் சர்ச்சைக்குரிய பிரிவு நீக்கப்படவில்லை.
- மேலும், காவல்துறை அதிகாரி முன் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆதாரமாக, சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றார். முன்னதாக, இந்த சட்டம் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் 2015ம் ஆண்டில் நிறைவேறியது.
மின் உற்பத்திக்காக துணை நிறுவனத்தை அமைக்கும் Tata Power
- புதிய மின் உற்பத்திக்காக TP New Energy Microgrid என்ற துணை நிறுவனத்தை அமைப்பதாக மின் நிறுவனமான டாடா பவர் அறிவித்துள்ளது.
- இந்த நிறுவனம் நாடு முழுவதும் 10,000 மைக்ரோகிரிட்களை நிறுவும், இதன் மூலம் 50 லட்சம் வீடுகள் மின்சாரம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. TP New Energy Microgrid நிறுவலில் Rockefeller அறக்கட்டளையிலிருந்து தொழில்நுட்ப உதவி எடுக்கப்படும் என்றும், தற்போது Rockefeller அறக்கட்டளை இந்த முயற்சியில் பங்கு பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
iEGR தொழில்நுட்பத்துடன் SCR டெக்னாலஜி!' BS-6 லாரி, பஸ்களை அறிமுகப்படுத்தியது அசோக் லேலாண்டு
- அசோக் லேலாண்டு, புதிய BS-6 லாரிகள் மற்றும் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்களின் தரத்தை உறுதி செய்து Automotive Research Association of India (ARAI) சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
- 'இந்த BS-6 லாரிகள் மற்றும் பேருந்துகள் மார்ச் மாத இறுதியில் விற்பனைக்கு வரும்' என அறிவித்துள்ளது அசோக் லேலாண்டு.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'சில் 2 வயது சிறுமி
- சேலம் மாவட்டம், உலிபுரத்தைச் சேர்ந்த, 2 வயது சிறுமி, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில், 'அற்புத குழந்தை'யாக இடம்பெற்றுள்ளார்.
- சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி, உலிபுரத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளாபானு, 29; அரசு டாக்டர். இவரது கணவர் நவ்சாத் அலி, 32; பிசியோதெரபி டாக்டர். இவர்களது மகள் சஹானா ஆப்ரீன், 2. இச்சிறுமி, பொது அறிவு கேள்விக்கு, சரியாக பதிலளிக்கிறார்.
- இ ந்தியாவில் உள்ள மாநில தலைநகர்கள், தமிழக மாவட்டங்கள், தேசிய பறவை, மரம், விலங்கு, திருக்குறள், தமிழ், ஆங்கில மாதம், வாரம், ஆங்கில எழுத்து, ஒன்று முதல், 100 வரை எண்கள் என, எது கேட்டாலும் பதிலளிக்கிறார்.
- மேலும், 100க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய தலைவர்கள், பிரதமர், முதல்வர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் புகைப்படத்தைச் பார்த்து சொல்வதை, மக்கள் வியப்பாக பார்க்கின்றனர்.
- பள்ளிக்கு செல்லாத நிலையில், 2 வயதில் இத்தனை தகவல்களை தெரிந்து வைத்திருக்கும் சிறுமிக்கு, ஜூலை, 26ல், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பினர், 'கூர்மையான அறிவுடைய அற்புத குழந்தை' எனும் சான்றிதழை வழங்கியுள்ளனர்.
- பாரீஸ் கால நிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஐக்கிய நாடுகள் சபையிடம், அமெரிக்கா அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 2015ல், 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முக்கிய கூட்டம் நடந்தது.
- நடவடிக்கைஇந்தக் கூட்டத்தில் கால நிலை மாற்றம் குறித்து விவாதித்து, கரியமில வாயு வெளியேற்றத்தை முடிந்த அளவு குறைப்பது குறித்து, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது பொருளாதார முன்னேற்றத்தை காரணம் காட்டி, சூழலை கெடுக்கும் வகையில் செயல்படும் தொழிற்சாலைகளை வரன்முறைபடுத்த வேண்டும்.
- உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டே, தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள், இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன.
- இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற போது, இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார்.
- கரியமில வாயு வெளியேற்றத்தால் உலகிற்கு பாதிப்பில்லை எனவும், இது அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தை தடுக்க நடக்கும் சதி எனவும், கூறி வந்தார்.
- கடந்த, 2017 ஜூன், 1ல், பாரீஸ் கால நிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகும் என, டிரம்ப் அறிவித்தார். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
- இந்நிலையில், பாரீஸ் ஒப்பந்ததிலிருந்து விலகுவதாக, ஐ.நா.,விடம், அமெரிக்கா நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
- அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறுகையில், ''பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஐ.நா.,விடம், அமெரிக்கா முறைப்படி தெரிவித்துள்ளது. ''அடுத்த ஆண்டு, இதே நாளில், அமெரிக்கா, ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலகிவிடும்,'' என்றார்.
ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை நீக்க கோரிய மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர்
- டெல்லியில் ஆம்ஆத்மியின் 11 எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிப்பதாகவும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விவேக் கார்க் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் மனு அளித்திருந்தார். இதை பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்தை குடியரசுத் தலைவர் பணித்திருந்தார்.
- இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் அந்த 11 எம்எல்ஏக்களும் தாங்கள் வகிக்கும் மற்றொரு பதவிக்காக ஊதியமோ பிற சலுகைகளோ பெறுவதில்லை என்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை என தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்திருந்தது. இதை ஏற்று தகுதி நீக்க மனுவை நிராகரிப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் காந்தி சிலை
- தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க்கில், 1910ல், மஹாத்மா காந்தி, வழக்கறிஞராக பணியாற்றிய போது, டால்ஸ்டாய் பண்ணை என்ற சமூக அமைப்பை அங்கு உருவாக்கினார். அந்த நேரத்தில், சத்தியாகிரக போராட்டத்தை, காந்தி அங்கு மேற்கொண்டார்.
- இந்த இடத்தில், மஹாத்மா காந்தி மற்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோரது உருவ சிலைகள், நேற்று திறக்கப்பட்டன.
உலக சாதனை படைத்த நேபாள வீரர் நிர்மல் புர்ஜா
- நேபாளத்தைச் சேர்ந்த நிர்மல் புர்ஜா நேற்று அதிகாலையில் மலைகள் ஏறுவதில் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆறு மாதங்களில் உலகில் உள்ள 14 உயரமான சிகரங்களின் உச்சிகளுக்கு ஏறி சாதனை படைத்திருக்கிறார்.
- இதற்கு முன்பு தென்கொரியாவை சேர்ந்த கிம் சேங் ஹோ இதே போன்று 14 சிகரங்களை ஏற ஏழு வருடம் 10 மாதம் 6 நாள்கள் எடுத்துக்கொண்டார். இந்தச் சாதனையைத்தான் முறியடித்துள்ளார் நிர்மல்.
- இந்த 14 சிகரங்கள் ஒவ்வொன்றின் உயரமும் 8,000 மீட்டருக்கும் அதிகம்.இதனாலேயே இந்தச் சிகரங்களை மொத்தமாக Eight-thousander என்று அழைப்பர்.Eight-thousander மலை உச்சிகள்
- இமயமலை மற்றும் கரகோரம் மலை தொடர்களில் சீனா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் என்று நாடுகள் கடந்து இந்த வெற்றிப் பயணத்தை முடித்துள்ளார் நிர்மல்.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா
- மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
- மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் 'விஞ்ஞான் பாரதி' சார்பில் நடத்தப்படும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில், மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அனைத்து மாநில அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- 2015-ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அறிவியலில் ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு மூலம் நாட்டை பலப்படுத்துவது தொடர்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அறிவியல் கிராமம், இளம் விஞ்ஞானிகள் மாநாடு, விஜயானிகா என்ற இலக்கிய திருவிழா, வேளாண் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியலில் சிறந்து விளங்குவோர்களுக்கு இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு உள்ளிட்ட 28 வெவ்வேறு நிகழ்வுகள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
- விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்து பேசியது,சந்திரயான்-2 திட்டத்துக்காக நமது விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தார்கள். திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றாலும் திட்டம் வெற்றி பெற்றது.
- அறிவியலில் தோல்வி என்பது இல்லை. அறிவியல் ஆராய்ச்சிகள் நூடுல்ஸ் தயாரிப்பது போன்றோ, உடனடி பீட்சா வாங்குவது போன்றோ இல்லை. இதுபோன்ற ஆராய்ச்சிகளின் பலன் மக்களுக்கு ஒரு நீண்டகால தீர்வை அளிப்பதாக இருக்கும்.
- தேவைகள் தான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று முன்பு நம்பப்பட்டது. ஆனால் இப்போது கண்டு பிடிப்புகள் தேவைகளின் எல்லைகளை கடந்து உள்ளது என்றார்.