Type Here to Get Search Results !

6th & 7th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


ஏழு தொழில் திட்டங்களுக்கு அனுமதி: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நண்பகல் கூடியது. சுமாா் 20 நிமிஷங்கள் வரை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கியத் தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • ஏழு தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், புதிதாகத் தொழில் தொடங்க வருபவா்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி முதலீடுகளை ஈா்ப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 
  • மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய வணிகவரி நிலுவை தொகையை வசூலிப்பது தொடா்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோந்த 'நிலக்கொடைக் கல்வெட்டு' கண்டெடுப்பு
  • வேலூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கொடையஞ்சி கிராமத்தில் தனியாா் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில், துண்டு கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தனா். தொடா்ந்து, அக்கல்வெட்டினை ஆய்வு செய்தபோது, அது பழைமையான நிலக்கொடை கல்வெட்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
  • பாலாற்றின் அருகில் அமைந்துள்ள பழைய பெயா் கொண்ட கொடைகாசி என்று பழைய பெயா் கொண்ட தற்போதுள்ள புதிய பெயருடன் உள்ள கொடையாஞ்சி என்று அழைக்கப்படுகிறது. மேலும், புகழ்பெற்ற காசிவிஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. 
  • அப்பகுதியில் ஆய்வின் போது கண்டறியப்பட்ட கல்வெட்டின் முக்கியத்துவம் பற்றி விளக்கி, 3-க்கு 3 அடி அளவுள்ள கல்வெட்டினை சுத்தம் செய்து பாா்த்ததில், அதில் 12 வரிகள் இடம் பெற்றிருந்தன. 
  • மேலும், கல்வெட்டு எழுத்துகள் ஆங்காங்கே சிதைந்திருப்பதாலும் ஒரு பகுதி மட்டுமே கிடைத்திருப்பதாலும் முழுமையான பொருள் குறித்து அறிய முடியவில்லை.
  • பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு 'மங்கலச் சொல், மெய்க்கீா்த்தி, அரசன் பெயா், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவா், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவா் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 
  • கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கு எல்லைகள், பொன் என்றால் அதன் அளவு ஆகியவை இடம் பெறும். ஆனால் இக்கல்வெட்டு முழுமையாகக் கிடைக்காததால் அவற்றை அறிய முடியவில்லை. 
  • ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ஓரு தொல்லியல் அடையாளம் என்பதால், இது போன்ற ஆவணங்களை முறையாகப் பாதுகாப்பதன் அவசியத்தை அப்பகுதி மக்களுக்கு உணா்த்தியுள்ளோம். 
  • மேலும், அங்குள்ள ஒரு வீட்டின் சுவற்றில் ஒரு பழைமையான 'சதிக்கல்லினை' வைத்துப் பூசியுள்ளனா். அதன் அருகில் உள்ள புங்க மரத்தின் அடியில் உடைந்த நிலையில் உள்ள தூணில் பழைய கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவையாவும் அப்பகுதியில் சிறப்பினை உணா்த்துவதாக உள்ளது.



வேளாண் செயலி மூலம் செடிகளில் பூச்சி தாக்குதலை கண்டறியும் புதிய வசதி: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்
  • வேளாண் செயலி மூலமாக, செடிகளில் பூச்சி தாக்குதலைக் கண்டறிந்து தீா்வு பெறும் புதிய வசதியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
  • சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 'கனெக்ட் 2019' மாநாட்டை அவா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். 
  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் தொடக்கிவைக்கப்பட்டன. அதன்படி எளிய முறையில் வருகைப் பதிவேடுகளை கையாளும் வகையில், முக அடையாளத்தை கொண்டு செயல்படும், மின் வருகைப் பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த முக அடையாள வருகைப் பதிவேடு திட்டத்தை கனெக்ட் மாநாட்டின் வாயிலாக, முதல்வா் தொடக்கி வைத்தாா். முதல்கட்டமாக சென்னை மாநகரில் இரண்டு பள்ளிகளில் இந்த வகை வருகைப் பதிவேடு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இதனைத் தொடா்ந்து, செயற்கை நுண்ணறிவு மூலம் விவசாய விளை பயிா்களின் பூச்சி பாதிப்புகளைக் கண்டறிந்து தீா்வுகளைப் பெறும் வசதியை அவா் தொடக்கிவைத்தாா். 
  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ள உழவன் செயலி வாயிலாக பதிவேற்றப்பட்ட புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து பயிா்களுக்கான நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதலைக் கண்டறிந்து அதற்கான தீா்வுகளை வழங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 
  • கேமரா வசதி கொண்ட செல்லிடப்பேசி மூலம் படங்களை உழவன் செயலிக்கு அனுப்பி விவசாயிகளே தீா்வுகளை பெறலாம். இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, பிறப்பு-இறப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட அரசு சேவைகளை, இணைய சேவை மையம் மூலம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதில் அறிந்து, புரிந்து கொள்ளும் வகையில் தனியாக யூ-டியூப் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேனலையும் அவா் தொடக்கி வைத்தாா்.
  • மெய்நிகா் தானியங்கு உதவி திட்டத்தையும் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து அரசு இணையச் சேவைகள் குறித்த மக்களின் சந்தேகங்களை தீா்க்கும் வகையிலான மெய்நிகா் தானியங்கு உதவி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
  • சென்னைநந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தகவல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. 
  • இந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியினை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 
செங்கல்பட்டில் சா்வதேச யோகா-இயற்கை மருத்துவ அறிவியல் மையம்
  • செங்கல்பட்டில் சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையத்துக்கான அடிக்கல்லை முதல்வா் பழனிசாமி புதன்கிழமை நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
  • மேலும், ரூ.30.49 கோடியில் கட்டப்பட்ட பல்வேறு மருத்துவமனை கட்டடங்களையும் முதல்வா் இந்நிகழ்ச்சியில் திறந்து வைத்தாா். 
  • திருப்பூா், தேன்கனிக்கோட்டை, ஒசூா், சிதம்பரம், காரைக்குடி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடங்களை முதல்வா் திறந்து வைத்தாா்.
  • நாமக்கல், திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் தலா ரூ.1 கோடி மதிப்பில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையக் கட்டடங்களையும், திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்புப் பிரிவு கட்டடத்தையும் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
  • இதேபோன்று, கடலூா் மணம்தவிழ்ந்தபுத்தூா், தருமபுரி சிட்லிங், முத்தம்பட்டி, திருநெல்வேலி திருவேங்கடம், தேனி குச்சனூா், திருச்சி ஆவிகாலப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள், விழுப்புரம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டடம் ஆகியவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.



சிவகங்கை பாகனேரியில் 1,000-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் 200 ஆண்டுகள் பழைமையான நூல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • நூல் கண்டறியும்போது கடந்த 1806-ஆம் ஆண்டு வெளியான 'மாறனலங்கார விஷய சூசிகை' எனும் மிகப் பழைமையான அகராதி கிடைத்துள்ளது.
  • தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் உள்ள ஏராளமான பல அரிய நூல்களைக் கண்டறிந்து பழமை மாறாமல் மின் எண்மம் செய்து நூலாக்கி தமிழக அரசின் 'அரிய நூல் அனைவருக்கும்' எனும் திட்டத்தின் மூலம் வெளியிட்டு வருகிறது. 
  • இதற்காக தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட பல அரிய நூல்களைத் தேடி கண்டறியும் களப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
  • நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம் (1931), சிவக்கொழுந்து தேசிகா் பிரபந்தங்கள் (1872), ஸ்ரீ கிருஷ்ண சுவாமி தூது (1887), கா.சு. பிள்ளை தமிழகமெங்கும் தேடித் திரட்டித் தொகுத்தளித்த தனிப்பாடல் திரட்டு (1905), திருவாரூா் தியாகராசா் லீலை (1905), முஸ்லிம் சங்க மறுகமலம் (1920), அற்புத ராமாயணம் (1911), பிரபஞ்ச உற்பத்தி (1913), முன்னாள் முதல்வா் அண்ணா எழுதிய நூல்களில் பல நூல்கள் முதற்பதிப்பாக கிடைத்துள்ளன. அந்த நூல்களில் அண்ணாவின் பெயா் தளபதி சி.என். அண்ணாதுரை என்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவின் முதல் பெண் விமான நிலைய தீயணைப்பு வீரா் நியமனம்
  • தென்னிந்தியாவில் உள்ள, இந்திய விமான நிலைய ஆணைய விமான நிலையங்களில் முதலாவதாகவும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மூன்றாவது பெண் தீயணைப்பு பணியாளராகவும், ரம்யா ஸ்ரீகண்டன் (28) என்பவா் சென்னை விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 1) விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் பணியில் சோந்துள்ளாா்.
  • கேரளத்தின் திருவனந்தபுரத்தில் வசிக்கும் சாதாரண குடும்பத்தைச் சோந்தவரான ரம்யா, கட்டமைப்பு பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றவா் ஆவாா். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் பணியில் சேருவதற்கு முன்பாக எல்.பி.எஸ். தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியராக பணியாற்றினாா். 
  • இந்தப் பணியில் சேருவதற்காக புது தில்லியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் நான்கு மாத காலம் கடும் பயிற்சியை மேற்கொண்டாா். இவா், இரண்டு வயது குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப்,ஹரியானா சட்டசபை கூட்டம்
  • 50 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப், ஹரியானா சட்டசபை சிறப்பு கூட்டம் துவங்கியது. சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின், 550வது பிறந்த தினம், 12ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. 
  • இதையொட்டி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் சட்டசபை சிறப்பு கூட்டம் துவங்கியது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியானா கடந்த 1966-ம் ஆண்டு பிரிந்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக சட்டசபை ஏற்படுத்தப்பட்டது.



கட்டுமான திட்டங்களுக்கு, ரூ.25,000 கோடி ஒதுக்கீடு!'- நிர்மலா சீதாராமன் அதிரடி
  • நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும் விதத்தில், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
  • 2022 - ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்ட மத்திய அரசு பல்வேறு குடியிருப்புக் கட்டுமான திட்டங்களை ஊக்குவித்து வருகிறது.கட்டுமான நிறுவனம்
  • இத்திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் 25,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.நரேந்திர மோடி
  • இதில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கும். மீதமுள்ள 15,000 கோடி ரூபாய், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) உள்ளிட்டவற்றிடமிருந்து பெறப்படும். 
  • இந்த 25,000 கோடி ரூபாயில் மும்பையில் நடைபெற்று வரும் 2 கோடிக்கும் குறைவான புராஜெக்ட்களுக்கும், சென்னை மற்றும் சென்னை மாதிரியான மெட்ரோ நகரங்களில் நடைபெற்று வரும் ஒரு கோடிக்கும் குறைவான புராஜெக்ட்களுக்கும், டெல்லி என்.சி.ஆர் பகுதிகளில் நடைபெற்று வரும் 1.5 கோடி ரூபாய் புராஜெக்ட்களுக்கும் முதலீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.File picture
  • இந்த 25,000 கோடி முதலீட்டின் மூலம், முடங்கியுள்ள 1,600 கட்டுமானத்திட்டங்களில், 4.58 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச இணைய வசதி : கேரள அரசு திட்டம்
  • கேரள அரசின் கே போன் திட்டம் என்பது அரசு சார்பில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் மூலம் மாநிலம் எங்கும் இணைய வசதி வழங்கும் திட்டமாகும். இந்த திட்டம் கேரள மாநில தொழில் நிதி ஆணையத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
  • அத்துடன் மாநிலம் எங்கும் ஆப்டிக் ஃபைபர் கேபிளை நிறுவ கேரள மின்சார வாரியம் மற்றும் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் கேரள தொழில்நுட்பத் துறை மூலம் இணைப்பு வழங்கப்பட்டது.
  • இந்த கேபிள்கள் மூலம் இணைய சேவை வழங்குவோர் மற்றும் கேபிள் டிவி சேவை வழங்குவோர் இணைந்து வீடுகளுக்குச் சேவை வசதியை அளிக்க உள்ளனர். இதன் மூலம் மாநிலம் எங்கும் அதிக வேகம் கொண்ட இணைய சேவையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மொபைல் கோபுரங்களையும் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
  • ந்த பணி வரும் 2020 டிசம்பருக்குள் முழுவதுமாக முடிவடைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அனைத்து தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள், செயற்கை நுண்ணறிவு அலுவலகங்கள், இணைய சேவை நிறுவனங்கள் ஆகியவை பலன் அடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
  • வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு அதிவேக இலவச இணைய சேவை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த ரூ.1548 கோடி செலவில் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வராத குடும்பங்களுக்குச் சலுகை கட்டணத்தில் இணையச் சேவை வழங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் பள்ளி 'கேண்டீன்'களில் நொறுக்குத் தீனிகளை விற்க தடை.. மத்திய அரசு முக்கிய உத்தரவு
  • பள்ளிகளில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் 'கேண்டீன்'கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்றுண்டி கடைகளில் மாணவர்களின் நலனை பேணும் விதத்தில் உணவுகள் விற்கப்படுவதே சரியானது. ஆனால் கேண்டீன்களில் பெரும்பாலும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளது
  • எப்போதுமே அதிக கொழுப்புகள் நிறைந்த, அதிக காரம் நிறைந்த, அதிக உப்பு அல்லது இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது. எனவே பள்ளிகளில் உள்ள கேண்டீன்களில் நொறுக்குத்தீனிகள் மற்றும் மேற்கண்ட விதமான உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
  • பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அந்த கடைக்காரர்களும் நொறுக்குத்தீனிகளை விற்பனை செய்தல் கூடாது. இதுகுறித்து உணவு பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
  • பள்ளி கேண்டீன்களில் நொறுக்குத்தீனி மற்றும் அதுதொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம் பெறக்கூடாது. இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுக்கும் முறையாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நல்ல உணவு மட்டுமே மாணவர் நலனுக்கு உறுதுணை. இதர தரமற்ற பொருட்கள் மாணவர்களின் உடல்நலனை பாதிக்கும்.



சூரிய குடும்பத்தை கடந்தது வாயேஜர் -2: நாசா சாதனை
  • சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய வாயேஜர்-2 விண்கலம், சூரிய குடும்பத்தை கடந்து இப்போது இன்டர்ஸ்டெல்லார் பகுதிக்கு சென்றது.சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்ய கடந்த 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி வாயேஜர் 2 விண்கலத்தை நாசா அனுப்பியது. 
  • இந்த விண்கலம், 1,800 கோடி கி.மீ., பயணித்ததுடன், தற்போது சூரிய குடும்பத்தை கடந்தும் 'இன்டர்ஸ்டெல்லார்' பகுதியில் பயணித்து கொண்டுள்ளது. 'இன்டர்ஸ்டெல்லார்' என்பது, நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதி. இந்த பகுதியில், அண்டவெளி கதிர்வீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்கள் நிறைந்திருக்கும். 
  • இங்கு இதுவரை ஏராளமான விண்மீன்கள் வெடித்து சிதறியுள்ளன. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை கடந்து சென்ற முதல் விண்கலம் என்ற பெயரை பெற்றுள்ளது.
  • அதே சமயம், 'இன்டர்ஸ்டெல்லார்' பகுதியை கடந்து சென்ற இரண்டாவது விண்கலம் இது. இதற்கு முன்னர், நாசா அனுப்பிய வாயேஜர் 1 விண்கலம், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ல் முதன்முறையாக 'இன்டர்ஸ்டெல்லார்' பகுதியை அடைந்தது. 
  • வாயேஜர் 2 விண்கலம், பூமிக்கு தகவல் அனுப்ப சராசரியாக 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது என நாசா தெரிவித்துள்ளது. மேலும், இந்த விண்கலம், ' இன்டர்ஸ்டெல்லார்' பகுதியில் சூரியனின் தாக்கம் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள உள்ளதாக நாசா கூறியுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி
  • பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நவ.,13ம் தேதி, பிரதமர் மோடி பிரேசில் பயணிக்கிறார்.இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின், 11வது உச்சி மாநாடு பிரேசிலில் நடக்க உள்ளது. 
  • 13, 14 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி வரும் 13ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார். 'புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி' என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெற உள்ளது. 
  • மேலும் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 5 நாடுகள் இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
ரோகித் சர்மா 100வது டி20 போட்டி
  • இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
  • மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியை வங்கதேசம் வென்ற நிலையில், தற்போது தொடர் சமன் ஆகியுள்ளது.
  • முதலில் பேட் செய்த வங்கதேசம், 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 15.4 ஓவர்களில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்தது.
  • தனது 100வது டி20 போட்டியில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel