Type Here to Get Search Results !

4th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ராணுவ தொழில்நுட்ப கூட்டம்: ரஷ்யா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • மாஸ்கோவில் இன்று தொடங்கி வரும் 7-ஆம் தேதி வரை இந்திய ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டுச் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் செர்ஜி ஷோய்குவை சந்தித்து ராணுவ தொழில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
  • மேலும், ரஷ்ய தொழில்துறை அமைச்சர் டெனிஸுடன் இணைந்து இந்திய ரஷ்ய ராணுவ தொழில் ஒத்துழைப்பு மாநாட்டையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ சார்ந்த தொழில்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
  • குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல், இந்திய ராணுவத் துறையில், ரஷ்யாவின் முதலீட்டுக்கு அழைப்பு விடுத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் சேர இந்தியா மறுப்பு
  • ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற பிரதமர் மோடி, ஆசியான் மற்றும் சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 15 நாடுகளை இணைக்கும் தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். 
  • அப்போது இந்தியாவின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால், இந்த உடன்பாட்டில் இணைய முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
  • தற்போது இருக்கும் உடன்பாட்டை அப்படியே ஏற்றுக் கொண்டால், இந்தியர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். 
  • தடையற்ற வர்த்தக உடன்பாட்டில், அடிப்படை கொள்கைகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும், இது தொடர்பாக இந்தியா தெரிவித்த கவலைகளுக்கு தீர்வு எட்டப்படாதது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கூறினார்.
  • எனவே, இத்தகைய சூழலில் தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் இந்தியா இணைவது என்பது சாத்தியமற்றது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 
  • இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்துறையினர் ஆகியோரது நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
  • அமெரிக்காவுடனான வர்த்தக போரால் ஏற்பட்ட பாதிப்பை சரிக்கட்டும் வகையில், ஆசியான் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு சீனா அதிக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. 
  • இந்த உடன்பாடு முழுமையாக சீனாவின் நலன் சார்ந்து அமைந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இதனாலேயே இந்த ஒப்பந்தத்தில் இணைய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.



மிகச்சிறிய கருந்துளையை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்
  • உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  • அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • சூரியனுடன் ஒப்பிடுகையில் 4000 கோடி மடங்கு பெரியது தொடங்கி குறைந்தது 5 முதல் 15 மடங்கு பெரிய கருந்துகளைகளை இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த நிலையில், சூரியனை விட 3.3 மடங்கு மட்டுமே அளவில் பெரிய கருந்துளையை ஓகியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
  • இதற்கு முன் சூரியனை விட 3.8 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நியூட்ரான் நட்சத்திரத்திற்கு இவ்வளவு பெரிய நிறை இல்லாத போது, இந்த சிறிய கருந்துளை உண்டானது எப்படி என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குடிநீர், சுகாதார இலக்குகள்: மத்திய அரசு புதிய திட்டம்
  • 'அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர், திறந்தவெளி கழிப்பிடமற்ற நிலையை தொடர்தல்' ஆகிய இலக்குகளை அடைவதற்கான தொழில்நுட்பங்களை கண்டறிய, குழு அமைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 
  • வரும், 2024ம் ஆண்டுக்குள், நாட்டில் உள்ள, அனைத்து வீடுகளுக்கும், குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டு, மத்திய அரசு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தை துவங்கியது. 
  • தவிர, 'திறந்தவெளி கழிப்பிடமற்ற இலக்கு - பிளஸ்' என்ற திட்டத்தை தொடரவும், மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. திட்டங்களை மையமாக கொண்டு, 'குடிநீர் மற்றும் துப்புரவுக்கான புதுமை மற்றும் தொழில் நுட்பங்களை சோதிப்பதற்கான, தொழில்நுட்பக் குழு'வை புதிதாக உருவாக்க, மத்திய குடிநீர், துப்புரவுத் துறை முடிவெடுத்து உள்ளது. 



தியோதர் டிராபி: இந்தியா 'பி' சாம்பியன்
  • தியோதர் டிராபியில் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா 'பி' அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 51 ரன் வித்தியாசத்தில் இந்தியா 'சி' அணியை வீழ்த்தியது.
உலக சாம்பியனை வீழ்த்தினார் வெஸ்லி ஸோ
  • நடப்பு உலக செஸ் சாம்பியன், உலகின் நம்பர் ஒன் செஸ் ப்ளேயர், மொசார்ட் ஆஃப் செஸ் எனப்படும் மேக்னஸ் கார்ல்ஸனை வீழ்த்தி, 'பிஷ்ஷர் ரேண்டம் செஸ் 2019' சாம்பியன் ஆகியிருக்கிறார் வெஸ்லி ஸோ.
6-வது முறையாக ஹாமில்ட்டன் உலக சாம்பியன்
  • டெக்ஸாஸில் நடைபெற்ற F1 போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்தாலும், புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலைபெற்று, 2019 ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார், லூயிஸ் ஹாமில்ட்டன்.லூயிஸ் ஹாமில்ட்டன்
  • 5 உலக சாம்பியன் பட்டங்கள் வாங்கிய யுவான் மேனுவல் ஃபேங்கியோவின் சாதனையை முறியடித்துள்ளார், லூயிஸ் ஹாமில்ட்டன். 
  • ரேஸின் முடிவில் இரண்டாம் இடம் பிடித்து, 18 புள்ளிகள் பெற்று தனது 6-வது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார். ஹாமில்ட்டனுக்கு இது ஹாட்ரிக் சாம்பியன்ஷிப். .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel