Type Here to Get Search Results !

3rd NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஆசியன் உச்சிமாநாட்டில் ஆங் சான் சூகியை சந்தித்த நரேந்திர மோடி
  • மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மியான்மரின் ஆளுங்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்து பேசினார். 
  • தாய்லாந்தில் நடைபெறும் 16-வது ஆசியான் கூட்டமைப்பு மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார்.
  • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு நடைபெற்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளில் எட்டப்பட்டுள்ள மேம்பாடு குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 
  • இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி மற்றும் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா கூட்டாக தலைமை தாங்கினர். ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என தமது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆசியான் மையப்புள்ளியாக உள்ளது என்றார்.
வி.ஆர்.எஸ்., திட்டத்தை செயல்படுத்த பி.எஸ்.என்.எல் லுக்கு அரசு உத்தரவு
  • 'பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனங்கள், வி.ஆர்.எஸ்., எனப்படும், விருப்ப ஓய்வு திட்டம் குறித்து, தங்கள் ஊழியர்களிடம் பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத வகையில் நிதி நெருக்கடி நிலவுகிறது. விருப்ப ஓய்வுஇதையடுத்து, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதன் மூலம், சம்பள செலவை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதன் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வு திட்டத்தை மத்திய அரசு, சமீபத்தில் அறிவித்தது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 1.76 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 
  • இவர்களில், 1.06 லட்சம் பேர், 50 வயதை கடந்தவர்கள். எனவே, 80 சதவீத ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற தகுதி உள்ளவர்களாக அரசு கருதுகிறது. இவர்களை விருப்ப ஓய்வு பெற வைப்பதன் மூலம், அரசுக்கு சம்பள செலவு மீதமாகும்.
  • இதற்கான நடைமுறைகளுக்காக, 17 ஆயிரத்து, 160 கோடி ரூபாய் ஒதுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



கடந்த மாதம் பங்குச்சந்தையில் வெளிநாட்டவர் ரூ.16,464 கோடி முதலீடு
  • கடந்த மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் 16,464 கோடி முதலீடு செய்துள்ளனர். 
  • இந்திய பங்குச்சந்தையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளில் 12,475.7 கோடியும், கடன் பத்திரங்களில் 3,988.9 கோடியும் என மொத்தம் 16,464.6 கோடி முதலீடு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக செப்டம்பரில் 6,557.8 கோடி முதலீடு செய்திருந்தனர்.
மேகாலயாவில் தங்க அரசின் அனுமதி தேவை புதிய சட்டம்
  • இயற்கை எழில் கொஞ்சும் மேகாலயவிற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் செல்லும் நிலையில் அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
  • மேகாலயா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள சட்டத்திருத்த மசோதாவால் நினைத்த நேரத்தில் அங்கு யாரும் சென்று தங்கிக்கொள்ள முடியாது.
  • சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்கபுரியாக திகழும் மேகாலயாவில் இனி ஒரு நாளுக்கு மேல் தங்க வேண்டும் என்றால் அதற்கு அம்மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டம் 2016-ல் அம்மாநில அரசு திருத்தம் செய்துள்ளதோடு, சட்ட விரோத குடியிருப்பை தடுக்க பல புதிய பிரிவுகளையும் சேர்த்துள்ளது. அதன்படி ஒரு நாளுக்கு மேல் அங்கு தங்க வேண்டும் என்றால், விவரங்களை அரசிடம் முன் கூட்டியே தெரிவித்து முன் பதிவு செய்ய வேண்டும்.
  • வெளி மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், ஆகியோர் தங்களின் விவரங்களை தெரிவித்து முன் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதிகாரிகளுக்கு மட்டும் மேகாலயா அரசு விதி விலக்கு அளித்துள்ளது. அதனால் அவர்கள் சிரமமின்றி மேகாலயாவில் தங்கி சுற்றிப்பார்க்க முடியும்.
மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா சோதனை முறை உற்பத்தியை தொடங்கியது
  • அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சீனாவில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட ஆலையின் முதல் பிரிவில் சோதனை முறையிலான உற்பத்தியை தொடங்கியுள்ளது.
  • ஷாங்காய் நகரில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் டெஸ்லா வாகன உற்பத்தி ஆலை 3 பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது. மிக பிரமாண்டமாக கட்டப்படும் ஆலையின் முழு பணிகளும் 2021ம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என கூறப்படுகிறது. 
  • இதில் முதல் பிரிவில் திட்டமிட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக சோதனை முறையில் வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
  • வாகன உதிரி பாகங்கள், பெயிண்ட உள்ளிட்ட அனைத்தும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள 3 பிரிவுகளிலும் பணிகள் முடிந்து, வாகன தயாரிப்பு முழுவீச்சில் தொடங்கும்பட்சத்தில், அமெரிக்காவில் ஆவதைவிட தனது மாடல் 3 காரின் தயாரிப்புக்கு ஆகும் செலவு, 65 சதவீதம் வரை குறையும் என டெஸ்லா கருதுகிறது.



நெதர்லாந்து அணி சாம்பியன்
  • ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பை தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் பப்புவா நியூ கினியா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • இத்தொடரின் மூலம், அயர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன், நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா என ஆறு அணிகள் பிரதான சுற்றுக்குள் நுழைந்துள்ளன. 
  • இவர்களுடன் இலங்கை, வங்கதேச அணிகளும் இணைந்து தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில், (அக். 18- அக். 23, 2020) மோதும். இரு பிரிவுகளிலும் 'டாப்-2' இடம்பெறும் நான்கு அணிகள் நேரடியாக 'சூப்பர்-6' சுற்றில் மோதவுள்ளன.
சீனாவில் முதலாவது டிராகன் படகு கிரான்ட் ப்ரிக்ஸ் போட்டி
  • சீனாவில் நடைபெற்ற முதலாவது டிராகன் படகு கிரான்ட் ப்ரிக்ஸ் போட்டியில், 900 வீரர்கள் கலந்து கொண்டனர்.
  • குவாங்டாங் மாகாணம், சுன்டே பகுதியிலுள்ள ஆற்றில் இப்போட்டி 2 நாள்கள் நடைபெற்றது. 200 மீட்டர், 500 மீட்டர் மற்றும் 800 மீட்டர் தூரம் என்று 3 பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது.
  • இதில் 41 படகுகளுடன் 900 வீரர்கள் கலந்து கொண்டு, போட்டி போட்டு கொண்டு, அதி வேகமாக டிராகன் படகுகளை செலுத்தினர். இதில் ஆண்களுக்கான 500 மீட்டர் தூர போட்டியில், சுன்டே நகரை சேர்ந்த அணியினர் தங்க பதக்கம் வென்றனர். கண்கவரும் வகையில் நடைபெற்ற இப்போட்டியை ஏராளமான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
  • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றில் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் ஷபோவாலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
  • செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன் இவர் 2009 , 2013 , 2014 , 2015 ஆகிய வருடங்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன்
  • ஜெர்மனியில் நடந்த சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சீனாவின் வெங் ஹாங் யாங்கை எதிர்கொண்டார். 
  • விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 17-21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி சாம்பின் பட்டத்தை கைப்பற்றினார்.
உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனை பூஜாவுக்கு வெள்ளிப்பதக்கம்
  • ஹங்கேரியில் நடைபெற்று வந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் 0-2 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஹருனா ஒகுனோவிடம் (ஜப்பான்) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
உலக கோப்பை ரக்பி: தென்ஆப்பிரிக்க அணி 'சாம்பியன்'
  • ஜப்பானில் நடைபெற்றுவரும் உலக கோப்பை ரக்பி போட்டியில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென்ஆப்பிரிக்க அணி 32-12 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 
  • ஏற்கனவே அந்த அணி 1995, 2007-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel