Type Here to Get Search Results !

2nd NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்தில் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த ஜெர்மனி உதவி
  • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஏஞ்சலா மெர்கல் தொழில்துறையினர் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் டெல்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு குறித்து குறிப்பிட்டார். 
  • தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க சுமார் 1600 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்ற அவர், டெல்லியில் நிலவும் மாசை காணும் யாரும் டீசல் பேருந்துகளை மாற்றவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
  • 2,313 மின் பேருந்துகளை 1580 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டது. 
  • இந்த ஒப்பந்தத்தின்படி பேருந்துகளை வாங்கவும், அவற்றை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கவும், போக்குவரத்துத்துறை செயல்பாட்டை மேம்படுத்த மென்பொருள் மற்றும் வன்பொருள்களை வாங்கவும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும்.
'தாய்' மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பை வெளியிட்ட மோடி
  • டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் மோடி பங்கேற்கிறார்.
  • 'SawasdeePMModi' என்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாார். நிகழ்ச்சியின் துவக்கத்தில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி, நினைவு நாணயம் ஒன்றையும், திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார்.
  • இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் உரையை ஆரம்பித்தபோது, நமது நாட்டின், தமிழ் உள்ளிட்ட, பல்வேறு மொழிகளிலும் மோடி வணக்கம் என்பதை தெரிவித்தார்.
  • அப்போது பிரதமர் மோடி, 'தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு' என்ற குறளைக் குறிப்பிட்டு பேசினார். அதைக் கேட்ட தமிழர்கள் உற்சாகம் அடைந்தனர். 
  • மோடி குறிப்பிட்ட குறளுக்கு, 'தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்' என்பதே பொருள். இதன் மூலம் ஈகை மனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.



பிரியாணிக்கு ஹைதராபாத், சினிமாவுக்கு மும்பை இந்திய நகரங்களுக்கு யுனெஸ்கோ விருது
  • சர்வதேச அளவில் 66 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில் இந்திய நகரங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. உணவுப் பிரிவில் ஹைதராபாத் நகரமும், சினிமா பிரிவில் மும்பை நகரமும் இந்த விருதுக்காகத் தேர்வாகியுள்ளன.
  • பல்வேறு உணவு வகைகளை தெலுங்குகாரு கைவண்ணத்தில் ருசித்திருப்போம். கார நெடியும், கலர்ஃபுல் சுவையும் தூக்கலாகக் கொண்டது, ஆந்திர சமையல். தெலங்கானாவின் ஹைதராபாத் நகரம், ஹலீம் பிரியாணிக்குப் பெயர்போனது. 
  • 2010-ம் ஆண்டு யுனெஸ்கோவின் புவிசார் குறியீட்டைப் பெற்று கம்பீர மணத்தோடு நாசியையும் நாவினையும் தழுவுவது ஹைதராபாத் பிரியாணி. இந்த பிரியாணிதான், ஹைதராபாத்துக்கு யுனெஸ்கோ விருதைப் பெற்றுத் தந்துள்ளது. க்ரியேட்டிவ்வான சமையல் கலையைப் பெற்றுள்ள நகரம் என ஹைதராபாத் முடிசூடி உள்ளது.
சுதர்சன் பட்நாயக் இத்தாலிய விருதுக்கு தேர்வு
  • ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐரோப்பிய நாடான இத்தாலின், கவுரவமிக்க தங்க மணல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில், வரும், 13 -18ம் தேதி வரை நடக்க உள்ள விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படும்.
15ம் தேதிபழைய வாகனங்களை ஒழிக்க கொள்கை வெளியீடு
  • காற்று மாசடைவதை தவிர்க்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஒழிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய கொள்கையை, நவ., 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளது. 
  • பழைய வாகனங்களை ஒப்படைத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்கள், இரண்டு கோடிக்கும் அதிக அளவில் இயங்குகின்றன. இவை, தற்போதுள்ள வாகனங்களைவிட, 25 மடங்கு அதிக அளவு புகையை வெளியிடுகின்றன. 
  • வாகனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தாலும், அவை வெளிப்படுத்தும் புகை, சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால், 2005ம் ஆண்டுக்கு முன்பு வாங்கிய வாகனங்களை ஒழிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
  • பழைய வாகனங்களுக்கு மாற்றாக, புதிய வாகனங்கள் வாங்க வைக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம். அதேபோல், பழைய வாகனங்களை ஒப்படைப்போருக்கு, புதிய வாகனம் வாங்குவதில் சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • 'ஸ்கிராப்பிங்' இதையடுத்து, பழைய வாகனங்களை ஒழிப்பதற்கான புதிய கொள்கை ஒன்றை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த கொள்கை, நவ., 15ல் வெளியிடப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.



பிரிட்டன் கல்லூரியுடன் சிம்ஸ் மருத்துவனை புரிந்துணா்வு ஒப்பந்தம்
  • ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக பிரிட்டனின் காலேஜ் ஆஃப் ஹெல்த்கோ இன்னோவேஷன் கல்லூரியுடன் சிம்ஸ் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
  • எஸ்ஆா்எம் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (சிம்ஸ்) மருத்துவமனையில் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. சா்வதேச தரத்தில் சிகிச்சையளிப்பதற்கான சிறப்பு வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
உதவும் கைகளை ஒன்றுசேர்க்க 'டைம் பேங்க்' திட்டம்: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
  • மத்திய பிரதேச அரசு 'டைம் பேங்க்' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆணையை அம்மாநில ஆன்மிகத் துறை மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது. 
  • ஒவ்வொரு மாவட்ட தலைமையிடத்திலும் 'டைம் பேங்க்' என்ற அமைப்பு செயல்படும். இது ஒரு வங்கியைப்போலவே மாநிலம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உதவி மனப்பான்மையை அதிகரிக்கவும், சமூக சேவை எண்ணத்தை வளர்க்கவும் இந்த 'டைம் பேங்க்' திட்டம் உதவும் என கூறப்படுகிறது.
  • அதாவது சமூக சேவை செய்ய விரும்புவர்களோ அல்லது தனிப்பட்ட மனிதருக்கு உதவ விரும்புவர்களோ தங்களது உதவியை செய்து விட்டு அது தொடர்பான விவரத்தை டைம் பேங்கில் பதிவு செய்யலாம். எதாவது ஒரு சமயத்தில் உதவி செய்தவருக்கே உதவி தேவைப்படும். அப்போது அவருக்கு உதவி பதில் உதவி சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
  • உதவி செய்தவர்களை மறக்காமல் இருக்கவும், உதவிகள் கைகோர்த்து சென்று கொண்டே இருக்கவும் இந்த திட்டம் பயன்படும் என கூறப்படுகிறது. முதியோர் இல்லத்திற்கு உதவி, ஏழை குழந்தைகளுக்கு பாடம் எடுத்தல், தோட்டம் வளர்ப்பு என எல்லாவற்றையும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
  • தற்போது ஆரம்ப கட்ட திட்டம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதால் திட்டம் முழுமையாக எப்படி செயல்படும் என்ற முழு விவரம் விரைவில் மக்களுக்கு தெளிவாகதெரிவிக்கப்படும் என மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அயோத்தியில் 221 மீட்டர் உயரமுள்ள ராம் சிலை அமைக்க UP அரசு ஒப்புதல்
  • உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யந்த் தலைமையிலான அரசு அயோத்தியில் 221 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையை நிறுவும் திட்டத்திற்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த சிலை ராம் நகரின் அயோத்தி திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது சரயு ஆற்றின் கரையில் நிறுவப்படும்.
  • ராம் நகரி அயோத்தியின் முழுமையான அபிவிருத்திக்காக மொத்தம் ரூ .447.46 கோடி பட்ஜெட்டுக்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • மீராபூர் பகுதியில் 61.38 ஹெக்டேர் நிலம் வாங்க இந்த தொகை பயன்படுத்தப்படும். இது தவிர, இந்த பட்ஜெட் பணம் சுற்றுலா வளர்ச்சி, அயோத்தியை அழகுபடுத்துதல், டிஜிட்டல் அருங்காட்சியகம், விளக்க மையம், நூலகம், பார்க்கிங், உணவு பிளாசா, இயற்கையை ரசித்தல் மற்றும் பிற சுற்றுலா வசதிகளுக்கு பயன்படுத்தப்படும்.



சிறந்த நட்சத்திரத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
  • சர்வதேச திரைப்பட விழாவில் பொன்விழா அன்று திரையுலகின் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அந்த வகையில் சிறந்த நட்சத்திரத்திற்கான விருது திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
  • அந்த மாமனிதனின் இத்தனையாண்டு திரையுலக சேவையை பாராட்டி கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பொன்விழா 2019ற்கான சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது இந்திய அரசாங்கம். இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
இன்கமிங் அழைப்பு ஒலி நேரத்தில் அதிரடி மாற்றம் செய்த டிராய்
  • செல்போன்களில் வரும் இன்கமிங் அழைப்புகளுக்கான ஒலி நேர அளவை மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மாற்றம் செய்து புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. 
  • டிராய் தற்பொழுது வெளியிட்டுள்ள ஆணையின்படி செல்போன்களுக்கு அழைப்பு ஒலி நேரமாக 30 வினாடியும், லேண்ட்லைன் போனின் அழைப்பு ஒலி நேரமாக 60 வினாடியும் இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் இன்னும் 15 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.
ராணி ராம்பால் அடித்த கோல்: ஒலிம்பிக்ஸ் 2020க்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
  • புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணியை 6-5 என்ற கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது.
  • வெள்ளியன்று நடத்த முதல் போட்டியில் இந்தியா 5-1 என முன்னிலையில் இருந்தது. இன்றைய போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற அளவில் வென்றது.
  • இரண்டு போட்டிகளின் கோல் கணக்கையும் சேர்த்து இந்தியா 6-5 என்ற அளவில் முன்னிலை பெற்றது.
  • ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி கத்ரீன் ஷேர்க்கீ தலைமையிலான அமெரிக்க அணியுடன் ஒலிம்பிக்ஸ் தகுதிப் போட்டியில் இன்று மோதியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel