Type Here to Get Search Results !

1st NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியகம் முதல்வா் அறிவிப்பு
  • கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களை காட்சிப்படுத்திட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் புதிய உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடியில் அமைக்கப்படும். 
தமிழகத்தில் ரூ.8,120 கோடி முதலீட்டில் 21 தொழில் திட்டங்களை செயல்படுத்த அனுமதி
  • பல்வேறு நிலைகளில் இருந்த 21 தொழில் திட்டங்களுக்கு ரூ.8,120 கோடி முதலீடுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடந்த முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • அதில் 21 தொழில் திட்டங்களின் மூலம் 16,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை,சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் விரிவாக்கப்பட்ட சிமெண்ட் ஆலை: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்
  • அரியலூரில் விரிவாக்கப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையை முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தாா்.
  • கடந்த 2011-2012-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் ஆலையின் உற்பத்தித் திறனை 5 லட்சம் டன்னில் இருந்து 15 லட்சம் டன்னாக உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • அதன்படி, அரியலூா் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன வளாகத்தில் சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு கடந்த 2016 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • இதன்மூலம் அரசு சிமெண்ட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் இப்போதுள்ள 7 லட்சம் டன்னில் இருந்து 17 லட்சம் டன்னாக உயரும். ரூ.809 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் மூலமாக சுமாா் 250 பேருக்கு நேரடியாகவும், ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழக ராணுவ தளவாட வாய்ப்பை பயன்படுத்துங்க; மெர்கலுக்கு மோடி அழைப்பு
  • இந்தியா - ஜெர்மனி இடையிலான 5வது கட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இரண்டு நாள் அரசு முறை பயணமாக புதுடில்லி வந்தார். அவரை மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் விமான நிலையத்தில் வரவேற்றார். 
  • டில்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் நரேந்திர மோடியை ஏஞ்சலா மெர்கல் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.இந்த சந்திப்பில் இருதலைவர்களும் கூட்டாக 5 அறிவிப்புகளை வெளியிட்டனர். 
  • விவசாயம், ஆயுர்வேதா, யோகா, விண்வெளி, விமான போக்குவரத்து, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
  • தமிழகம் மற்றும் உ.பி.யில் ராணுவ தளவாட உற்பத்திக்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதை ஜெர்மனி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். 
  • பேட்டரி கார் தயாரிப்பு 'ஸ்மார்ட் சிட்டி' ஆறுகளை துாய்மைபடுத்துதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் கடல்பகுதி மேலாண்மை உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். 



முக்கிய 8 துறைகள் உற்பத்தி 5.2 சதவீதமாக குறைந்தது
  • மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் உற்பத்தியானது பின்னடைவையே கண்டுள்ளது. குறிப்பாக, நிலக்கரி 20.5 சதவீதம், கச்சா எண்ணெய் 5.4 சதவீதம், இயற்கை எரிவாயு 4.9 சதவீதம் என்ற அளவில் கடுமையாக சரிந்துள்ளன. இவைதவிர, சுத்திகரிப்பு பொருள்கள் (-6.7%), சிமென்ட் (-2.1), உருக்கு (-0.3%), மின்சாரம் (-3.7%) ஆகிய துறைகளும் பின்னடைவையே கண்டுள்ளன.
  • செப்டம்பரில் உள்கட்டமைப்பு பிரிவைச் சோந்த உரத் துறையின் மட்டுமே 5.4 சதவீதம் என்ற அளவுக்கு வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
  • கடந்தாண்டு செப்டம்பரில் 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில் நடப்பாண்டில் பின்னடைவைக் கண்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு
  • கடந்த மாதத்தில் வேலை வாய்ப்பின்மைக்கான விகிதம் கணிசமாக 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5% அதிகரித்துள்ளது. 
  • இது 2016ம் ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 
  • இந்தியாவில் உள்ள மாநிலங்களின் அடிப்படையில் திரிபுரா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் 20 சதவீதம் கூடுதலாகவே உள்ளது. ராஜஸ்தானில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வேலைவாய்ப்பின்மை இரட்டிப்பாகியுள்ளது.
  • தமிழ்நாட்டில் விகிதம் முறைப்படி 1.1 சதவீதமாக உள்ளது. சிஎம்ஐஇ தரவுகளின் படி நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.9 சதவீதமாகவும், ஊரக வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாகவும் உள்ளது.
  • நாட்டில் உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு விகிதம் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பின்மை நீடிப்பது பொருளாதாரத்திற்கு சரியானது அல்ல என்றும் ஒரு ஆய்வறிக்கையின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. 
  • வேளாண் துறையில் வேலைவாய்ப்பு வீழ்ச்சி என்பது 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் 4.5 மில்லியன் பா (மொத்தம் சுமார் 27 மில்லியன்) என்ற விகிதத்தில் உள்ளது. 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி துறையில், 3.5 மில்லியன் வேலை வாய்ப்பு சரிவை சந்தித்துள்ளது. 
  • கல்வி நிலை சில ஆய்வுகளின் படி, கல்வியின் ஒவ்வொரு நிலைக்கும், வேலைவாய்ப்பின்மை விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது கல்வியறிவற்றவர்களிடையே 7.1 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. 
  • ஆரம்பக் கல்வி வரை கற்ற இளைஞர்களிடையே, 8.3 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. 
  • உயர்நிலைக் கல்வி முடித்தவர்களிடையே வேலைவாய்ப்பின்மை என்பது 24 சதவீதமாகவும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 35.8 சதவீதமாகவும், முதுகலை பட்டதாரிகளிடையேயான வேலைவாய்ப்பின்மை 36.2 சதவீதமாகவும் உள்ளது. அதாவது, கல்வித் தகுதி அதிகரித்தால், வேலைவாய்ப்பின்மையும் அதிகமாக உள்ளது.



நிலவில் ஆர்கான் 40 வாயு' - சந்திரயான்-2 புதிய கண்டுபிடிப்பு
  • இஸ்ரோ அமைப்பு கடந்த வியாழக்கிழமை அன்று "நிலவின் புறக்காற்று மண்டலத்தில் (lunar exosphere) ஆர்கான் 40 வாயுவின் மூலக்கூறுகள் இருப்பதை சந்திரயான் -2 விண்கலத்தின் சேஸ் 2 (CHASE 2 payload) உறுதிப்படுத்தியிருக்கிறது" எனத் தெரிவித்தது.
  • மேலும், சேஸ்-2 பேலோடுடன் சந்திரனைச் சுற்றிவரும் சந்திரயான் 2 ஆர்பிட்டரானது, 100அடி உயரத்தில் ஆர்கான் 40 வாயு இருப்பதைக் கண்டறிந்துள்ளது என இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறது. ஆர்கான் 40 வாயு அரிதாகக் கிடைக்கப்பெறும் வாயுவாகும். 
  • ஆர்கான் 40 வாயுவானது பொட்டாசியம் 40-ன் கதிரியக்கச் சிதைவின்(radioactive disintegration) மூலம் உருவாகிறது. நிலவின் ஆழ் பகுதிகளில் உள்ள கதிரியக்க பொட்டாசியமானது சிதைவின் மூலம் ஆர்கான 40 வாயுவாக உருமாறி நிலவின் புறக்காற்று மண்டலத்தை அடைகிறது.
  • நியூட்ரல் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டரான (neutral mass spectrometer) சேஸ் 2, இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆர்கான் 40 வாயுவில் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணித்துள்ளது. 
  • நிலவில் நிலவும் தட்பவெப்பச் சூழல் காரணங்களால் இரவில் ஆர்கான் 40 வாயு உறைந்து விடுகிறது. பிறகு பகலில் ஆவியாகி ஆர்கான் வாயுவின் அளவு நிலவின் புறக்காற்று மண்டலத்தில் அதிகரித்து விடுகிறது எனவும் கண்டறிந்துள்ளது .
ஐஐடி தில்லியில் விண்வெளி தொழில்நுட்ப மையம் அமைக்க முடிவு
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) உதவியுடன் தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) விண்வெளி தொழில்நுட்ப மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விண்வெளி தொழில்நுட்பத் துறையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) பெங்களூரு, ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூா், ஐஐடி கரக்பூா், ஐஐடி சென்னை, ஐஐடி குவாஹாட்டி மற்றும் ஐஐடி ரூா்கி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே விண்வெளி தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த கல்வி நிறுவனங்களின் வரிசையில் இப்போது ஐஐடி தில்லியும் இணைந்துள்ளது.
பிரிட்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் ரேலா மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம்
  • பாரத் பல்கலைக்கழக வேந்தரும்,ரேலா மருத்துவமனை நிா்வாக இயக்குநருமான பேராசிரியா் முகமது ரேலா, பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் கேசவ் சிங்கால் ஆகிய இருவரும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனா்.



அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி.,வருவாய்
  • ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், கடந்த அக்டோபர் மாதத்தில் சரிவை கண்டுள்ளது.அக்டோபர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 95 ஆயிரத்து, 380 கோடி ரூபாய் ஆக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1 லட்சத்து, 710 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ஜி.எஸ்.டி., வசூலை பொறுத்தவரை, தொடர்ந்து மூன்று மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது.அரசின் இலக்கு, 1 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், மூன்று மாதங்களாக, இலக்கை விட குறைவாகவேவசூலாகி உள்ளது. 
  • அக்டோபர் மாதம் பண்டிகை காலமாக இருந்தபோதும், வசூல் குறைந்துள்ளது கவலைஅளிப்பதாக உள்ளது.கடந்த செப்டம்பர் மாதத்தில், வரி வசூல், 91 ஆயிரத்து, 916 கோடி ரூபாயாக இருந்தது.
  • கடந்த அக்டோபர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த, ஜி.எஸ்.டி., வருவாய், 95 ஆயிரத்து, 380 கோடி ரூபாய்.இதில், மத்திய, ஜி.எஸ்.டி., வசூல், 17 ஆயிரத்து, 582 கோடி ரூபாய். மாநில, ஜி.எஸ்.டி., வசூல், 23 ஆயிரத்து, 674 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., வசூல், 46 ஆயிரத்து, 517 கோடி ரூபாய். இதில், இறக்குமதி மூலமாக பெறப்பட்ட, 21 ஆயிரத்து, 446 கோடி ரூபாயும் அடக்கம். மேலும், கூடுதல் வரி மூலம், 7,607 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதில், இறக்குமதி மூலமான வருவாய், 774 கோடி ரூபாய்.சரிந்தது ஜி.எஸ்.டி. வருவாய்
ஐ.எஸ். அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்
  • ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. தங்கள் புதிய தலைவராக அபு இப்ராகிம் அல் ஹாஸ்மி என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் அந்த அமைப்புதெரிவித்து உள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவ.30ம் தேதி தேர்தல்
  • டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றார்.
  • இதன்படி, முதல்கட்ட தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 7ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், 12ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 16 மற்றும் 20ம் தேதிகளில் 4 மற்றும் 5ம் கட்ட தேர்தல்களும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel