Type Here to Get Search Results !

9th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பொருளாதார ரீதியான கணக்கெடுப்பு: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைப்பு
  • கடந்த காலங்களிலும் பொருளாதார ரீதியான கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 1998, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் அத்தகைய கணக்கெடுப்புகளை மத்திய புள்ளியியல் துறை மேற்கொண்டது. 
  • இதேபோன்று, இப்போதும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வணிக நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், ஆண்டு வருவாய் வரவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. 
  • இந்த கணக்கெடுப்பின் மூலமாக, பிரதான பொருளாதார காரணிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அவை சாா்ந்த கொள்கை முடிவுகளை தேசிய, மாநில மற்றும் உள்ளூா் அளவுகளில் அரசுகள் எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • தொடக்க நிலை தொழில்கள், உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, குடிநீா் விநியோகம், கட்டுமானம், வா்த்தகம் மற்றும் சேவைகள் என மிகப் பெரிய துறைகளைச் சாா்ந்து இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்புப் பணியானது மூன்றரை மாதங்கள் நடைபெறும். இதில், சுமாா் 12 லட்சம் போ ஈடுபடுத்தப்பட உள்ளனா். நாட்டிலுள்ள 135 கோடி மக்கள் தொகையில் பாதியளவு மக்கள் தொகையில் உள்ளோரின் வயது 25 வயதுக்கு உட்பட்டதாக இருக்கிறது. 
  • பொருளாதார ரீதியான கணக்கெடுப்பானது 27.5 லட்சம் குடும்பங்களிடம் எடுக்கப்பட உள்ளது. மேலும், 5.5 கோடி வணிக நிறுவனங்களிடம் இத்தகைய கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. 
  • கடந்த 1977-ஆம் ஆண்டு இத்தகைய கணக்கெடுப்பு முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சோத்து 1980 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
  • வீடுகளில் உள்ள பொருள்கள், வணிக நிறுவனங்களின் பதிவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கேள்விகளாகக் கேட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
வருவாய் நிா்வாக ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
  • வருவாய் நிா்வாக ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வகித்து வந்த போக்குவரத்துத் துறை செயலாளா் பதவி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்த பி.சந்திரமோகனிடம் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஜெ.ராதாகிருஷ்ணன்--வருவாய் நிா்வாக ஆணையா் (போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா்).
  • பி.சந்திரமோகன்---போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் (எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளா்).
  • அசோக் டோங்ரே--- சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா்).
  • அபூா்வ வா்மா---தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் (சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்).
  • சந்தோஷ் பாபு---தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளராக உள்ள அவரிடம், தமிழ்நாடு கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்படுகிறது. இந்தப் பொறுப்பை பி.சந்திரமோகன் கவனித்து வந்தாா்.
  • தீரஜ் குமாா்---தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளரான அவரிடம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளா் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்படுகிறது.
  • அஜய் யாதவ்---வெளிப்பணிக்குச் சென்றிருந்த அவா் மாநிலப் பணிக்குத் திரும்பியுள்ளாா். அவருக்கு சா்க்கரைத் துறை கூடுதல் இயக்குநா் பொறுப்பு அளிக்கப்படுகிறது.
  • சுப்ரியா சாகு---தூா்தா்ஷன் முன்னாள் தலைவராக இருந்த அவா், தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளாா். அவருக்கு குன்னூரில் உள்ள இன்ட்கோசா்வ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பொறுப்பு அளிக்கப்படுகிறது.
  • எஸ்.வினீத்---தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநா் (இன்ட்கோசா்வ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்).



சைப்ரஸ் நாடு வெளியிட்ட மகாத்மா காந்தி அஞ்சல் உறை, அஞ்சல்தலை
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி, சைப்ரஸ் நாடு மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் உறையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டுள்ளது.
  • சைப்ரஸ் ஒரு யூரேசிய தீவு நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர், கிழக்கு மத்தியதரைக் கடலில், கிரேக்கத்திற்கு கிழக்கே, துருக்கியின் தெற்கே, சிரியாவின் மேற்கிலும், எகிப்தின் வடக்கிலும் உள்ளது. இது மத்தியதரைக் கடலில் மூன்றாவது பெரிய தீவாகும்.
  • சிறப்பு அஞ்சல் உறையில் காந்தி உருவமும், அஞ்சல்தலையில் மார்பளவு காந்தி, ராட்டை படமும் இடம்பெற்றுள்ளது. மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் இச்சிறப்பு அஞ்சல் உறையை சேகரித்துள்ளார்.
  • மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு எண்கோண வடிவ அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொரு அஞ்சல் தலையும் 25 ரூபாய் மதிப்புடையதாகும். 
  • அஞ்சல் தலையில் மகாத்மா காந்தியின் மாணவப்பருவம், வழக்கறிஞர் , மகாத்மா காந்தி கஸ்தூரிபாய் புகைப்படம், ரயில் வண்டியில் இருந்து மகாத்மா காந்தி இறங்கும் படம், தீயதை பார்க்காதே, தீயதை பேசாதே, தீயதை கேட்காதே கருத்தை உணர்த்தும் மூன்று குரங்குகள் அஞ்சல்தலைகள் இடம்பெற்றுள்ளன.
  • அஞ்சல் தலைகளின் பின்புறம் மகாத்மா காந்தி பிறந்த இடம், வழக்கறிஞர் அலுவலகம் , பிரச்சாரம் செய்யும் படம், வெளிநாட்டு தலைவர்கள் படமும் இடம்பெற்றுள்ளது. 
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400 கி.மீ. தூரம் பிரமாண்ட 'பசுமை சுவர்
  • குஜராத் முதல் பானிபட் வரை பசுமை சுவர் அமைக்கும் திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், பல அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் போது இது ஒரு மரபு திட்டமாக மாறக்கூடும். 
  • இந்நிலையில் மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்ட காடுகளை மீட்டெடுத்தல், மற்றும் பாலைவனமயமாக்கலை தடுக்க குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் முதல் ஹரியானா மாநிலத்தின் பானிபட் வரை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி இடையே ஆரவல்லி மலைத் தொடர் வழியாக 1400 கிலோமீட்டர் தூரத்துக்கும் 5 கிலோமீட்டர் அகலத்துக்கும் மரங்களை வளர்த்து பசுமைச் சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக போட்டித்திறன் இந்தியா 68வது இடம்
  • உலகளாவிய போட்டித் திறன் குறியீட்டில், இந்தியா, 10 இடங்கள் சரிந்து, 68 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
  • பல நாடுகள் கண்ட முன்னேற்றத்தால், உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில், இந்தியா, 10 இடங்கள் சரிந்து, 68 வது இடத்துக்கு வந்துள்ளது. 
  • அதே சமயம், சிங்கப்பூர், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, உலகின் பெரிய போட்டி பொருளாதாரமாக, முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.



வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
  • வேதியியல் துறையில், 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு, மூவருக்கு நேற்றுஅறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில், உயரிய விருதான நோபல் பரிசு, ஆல்பிரட் நோபலின் நினைவாக, ஆறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது. 
  • நோபல் பரிசுடன், 6.5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேதியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. 
  • அமெரிக்காவை சேர்ந்த, ஜான் குடெனாப், ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானை சேர்ந்த, அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு, பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. 
  • மேம்படுத்தப்பட்ட, 'லித்தியம் அயன் பேட்டரிகள்' ஆய்வில் புதிய சாதனைகள் படைத்ததற்காக, அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  • அதிக எடை இல்லாத, சிறிய வடிவிலான, 'லித்தியம் அயன்' பேட்டரிகள், 'மொபைல் போன்கள்' முதல் மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. நோபல் பரிசு பெற்றுள்ள, அமெரிக்காவை சேர்ந்த, ஜான் குடெனாப், 97 வயதில் இந்த பரிசை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பர்ட்... அகவிலைப்படி 5 % உயர்வு
  • தீபாவளி விழாக்களுக்கு முன்னதாக, மத்திய அமைச்சரவை புதன்கிழமை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை-டிசம்பர் 2019 காலத்திற்கான அன்புள்ள கொடுப்பனவு (DA) 5 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது.
  • அந்த வகையில், தற்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel