Type Here to Get Search Results !

8th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

புதுக்கோட்டை: 3,500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டெடுப்பு
  • புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் என்ற தனியார் அமைப்பினர், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 
  • இந்நிலையில், மேற்பனைகாடு அருகே உள்ள அம்பலத்திடலில் 3,500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுஇரும்பு காலத்திற்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய கற்கால கருவி என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அறந்தாங்கி அருகே அம்பலத்திடலில் பழங்கால பொருட்கள்
  • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்பலத்திடலில் பழங்கால பொருட்கள் கிடைத்ததை தொடர்ந்து வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அம்பலத்திடலில் பழங்கால முதுமக்கள் தாழி மற்றும் அவர்கள் வாழ்ந்த வீடுகளின் சுவடுகள் கிடைத்துள்ளன.



ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
  • நம் விமானப்படைக்கு வாங்கப்பட உள்ள 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்று கொண்டார். 
  • ஒப்பந்தம் இந்திய விமானப்படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாட்டுடன், 2016 செப்டம்பர் மாதத்தில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
  • அதன்படி, பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும் இந்த போர் விமானத்தின், முதல் விமானம் அக்.,8ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்றார். 
  • இந்த விமானத்திற்கு 'RB001 ' என விமானப்படை தளபதி பெயர் சூட்டியுள்ளார். தொடர்ந்து ரபேல் விமானத்தில் பறக்க உள்ள ராஜ்நாத் சிங், பின்னர் 'சாஸ்திரா பூஜை' செய்ய உள்ளார். 
  • இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
  • முதல்கட்டமாக 4 போர் விமானங்கள் 2020ம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்தியா வர உள்ளன. இந்த விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
ரபேல் விமானங்களின் சிறப்பம்சங்கள்
  • ரபேல் விமானங்கள் 1,389 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது.
  • ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 3,700 கி.மீ., தூரம் பறக்கும்
  • 15.3 மீ., நீளமும், 5.3 மீ.,உயரமும் கொண்டது.
  • 10 ஆயிரம் எடை கொண்ட இந்த விமானத்தில், 25 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும்.
  • குகையில் பதுங்கும் எதிரியை பாறையையும் ஊடுருவி தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் கொண்டது.
  • வானில் இருந்து வான், பூமியில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
  • துல்லியமாக தாக்குதல் நடத்தும் பீரங்கிகள், ஏவுகணைகள், அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொருளாதார மந்தநிலை:தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்த மாருதி நிறுவனம்; நடப்பாண்டில், ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை
  • பொருளாதார மந்தநிலையால் வாகன உற்பத்தித் துறையில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் தொடர்ந்து 8வது மாதமாக மாருதி நிறுவனம் உற்பத்தியை குறைத்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான வாகன உற்பத்தி 17.48% குறைக்கப்பட்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
  • அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒட்டு மொத்தமாக 1,32,199 வாகனங்களை மட்டுமே மாருதி நிறுவனம் தயாரித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரில் தயாரித்ததை விட 28,000 வாகனங்கள் குறைவாகும். 



கொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு
  • கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க தென்கொரியாவுக்கு சென்றிருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ். 
  • கியாங்கி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தமிழ் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று, கணினித் தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் குறித்த நினைவுச் சொற்பொழிவை நேற்று அவர் ஆற்றினார். அங்கு ஆளூர் ஷாநவாஸ்க்கு 'சமூகப் பண்பாளர்' விருது வழங்கப்பட்டது.
3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான, ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
  • ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில், 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள், நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. 
  • 2019ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • அண்டம் பற்றிய ஆய்வுக்காக, ஜேம்ஸ் பீபிளிஸ்க்கும், சூர்ய குடும்பத்தை போல மற்றொரு நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக மேயர், கியூலோஸ் ஆகியோருக்கு, நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், ஜேம்ஸ் பீபிள்ஸ், வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்தவர். 
  • மற்ற இருவரும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். பீபிள்ஸ், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றுகிறார், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பல்கலையில், மைக்கேல் மேயர், கியூலோஸ் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். பரிசுத் தொகையான, 6.58 கோடி ரூபாயில் பாதியை, பீபிள்சுக்கும், அடுத்த பாதியை, மேயர் மற்றும் கியூலோசுக்கு பகிர்ந்து வழங்கவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதனையாளர் பட்டியலில் இந்தியர்கள்
  • 'பார்ச்சூன்' பத்திரிகை வெளியிட்ட சாதனையாளர் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர்.
  • அமெரிக்காவில் 40 வயதிற்குள் சாதனை படைத்த பல்வேறு துறைகளை சேர்ந்த 40 பிரபலங்களின் பெயர் பட்டியலை அமெரிக்காவின் 'பார்ச்சூன்' பத்திரிகை நேற்று (அக்., 09) வெளியிட்டது. 
  • இதில், இண்டல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத்துறை துணை தலைவர் அர்ஜூன் பன்சால் ஸிலிங்கோ பேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் துணை நிறுவனருமான அன்கிதி போஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel